திருப்புகழ் விளக்கம் -1 - தமரும் அமரும்

 

அருணகிரியார் தவம் செய்ய உட்காரும் போது. தியானம் கைவர மறுக்க . அவர் தியானம் கைவர முருகனை போற்றிப் பாடுகிறார் .

 எம்மவர்களும் அவ்வானவர்களும் இனிய செல்வங்களும் பதவிகளும் என்னை விட்டு விலகும்படி அந்த எம பயல் பாசகயிற சுற்றி வீசினால் நான் தனியாளா அனாதை ஆகிடுவேன் முருகா. அதனால எமன் என்னை தேடி வராம என் தனிம நீங்க நான் உன் தாமரை போன்ற குறையில்லாத மகரதமணியும் தங்கமும் கலந்தது போன்ற பாதங்களை நினைத்து தியானிக்கும் அறிவினை தா முருகா .னு கேட்கிறார். வரம் கேட்பவர் வயதில் பெரியவர் தருபவன் குழந்தை அதனால செல்லங் கொஞ்சுகிறார்.. 

 குமரா போர்களத்தில் அழகா பரமரின் குலம் விளங்க வந்து பழனிமலை உடையவனே. ஒரு காரணத்தினால் மத யானையால் துரத்தப்பட்ட குரவர் குலச் சிறுமியான வள்ளியின் கணவனே. அமரர் துன்பத்தையும் அசுரர் உடலையும் ஒன்றாக அழிய சமர்செய்த நீ அருளும் செய்கிறாய். அறமும் சிவந்த நிறமும் வேல்(அயில்) மயிலும் அழகும் உடைய பெருமாளே. என்று கொஞ்சுகிறார்.. 

 கடைசி வரிய இன்னும் பாக்கலாமா. 

 அறமிகுந்த ஒழுக்கம் கொண்டாய். போரில் கோபத்தாலும் கொடுத்து கொடையாலும் சிவந்த நிறம் கொண்டாய் அமருக்காக அசுரரை அழித்த வேல் கொண்டாய் ஏன் தனியா அழகும் னு சொன்னாரு தெரியுமா?. அத்தனை அழகும் அவனுக்கு அடிமையாம்.. அழகான மலர் பறவைகள்ள அழகான மயில் நிலத்தில் அழகானது மலை . சோலை ஆயுதங்கள்ள அழகானது வேல். அப்படி அழகு எல்லாமே அவனுக்கு அதனால தான் அழகுனு தனியா சொல்றாரு.. 

 எல்லாம் சரி அருணகிரியாரு ஏன் தியானம் கைவரலனு கேட்டா. எங்க முருகனுக்கு தமிழவிட சிறந்த படையல் எதுமில்ல. பாடிப்பாடி கொண்டாடுங்கய்யானு தான். ஏதோ மூலையில உட்கார்ந்து என்ன பண்ணப் போற என்ஜாயி எஞ்சாமினு தான் தியானம் கைவரலயாம். இந்த பாட்டால தான் அருணகிரியாருக்கு சடாக்சர உபதேசமான சரவணபவ மந்திரம் வந்தது. இசைப்பயில் சடாக்சரம் அதாலே இகபர சௌபாக்கியம் அருள்வோனேன்னு சொல்றாரு. அந்த பாட்டு வரப்ப ஏன்னு சொல்றேன்.

 இவ்ளோ சொல்லிட்டு நம்ம பங்குக்கு எழுதலனா எப்புடி ?. 



 அமுதினிற் செரிந்த அழகிய இதழுடை அணங்கினர் மீதுரும் - மையல்தீர அறுமுக சரவண அருகினை எருக்கினை அணிபவர் இளையவ - குமரேசா குமுதமும் குளகமும் குடியமர் திருவடி குழைந்தெனக் கருளிட - வருவாயே குணமிகு சிவநிலை குடிபுக துணைதரு குருபர தமிழ்புகழ் - முருகேசா நமசிவ பரமரும் நதியுடை முனிவரும் நமவென மனமகிழ் - பரவேளே நயமிகுத் தமிழ்கவி நவிழ்தரு திறமதை நிதமெனக் கருள்கிற - வடிவேளே சமரிடை அவுணரும் சிகரமும் பிளந்திட சரமென அயில்விடு - சமரேசா சிவசுத கணபதி சிறந்தவள் குறமகள் சகமுடை தணிகையாள் - பெருமாளே

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم