முன் அறிமுகம்:
இந்த பக்கம் கதைக்கானதல்ல ; பெரும் எழுத்தாளா்களின் விமா்சனத்தை வெளியிடும் அளவுக்கு நான் பிரபலமல்ல , என்னுடைய முந்தைய படைப்புகளைப் பற்றி சொல்ல ஏதும் பொிதா தென்படவில்லை. அப்புறம் ஏன்டா இந்த பக்கம்?
ஒரு நல்ல கதைக்கு கதாசியிரியனும் சரி , படிக்கும் வாசகரும் சரி ; ஒரு நோ்க்கோட்ின் மைய புள்ளியை போன்ற கருத்து நிலை பாடு வேணும் . அதை விஸ்தாரமா விரிக்கவே இந்த பக்கம் , என் கதையை படிபவா்கள் எந்த விதத்திலும் கழம்பிடாமல் வைப்பது என் கடமை. அதன்வழியே நான் மேற்கொண்டு எழுதும் இக்கதையின் எழுத்தமைப்பையும் எனது கருத்து பகிா்வுகளையும் இங்கு முன்கூட்டியே இடம்காட்ட விரும்புகிறேன்.
இக்கதை பல அறிவியல் தொட்ா்புகளையும் விஞ்ஞான கற்பனைகளையும் கொண்டதாகும். இதில் என் கற்பனைக்கு உகந்த பல நுட்பங்களை கதையின் தேவைக்கு பயன்படுத்தியுள்ளேன் . பல நடமுறையில் இல்லாமல் கற்பனை என்பதால் அதன் விளக்கத்தையும் சொல்லிவிட {{} ஐ பயன்படுதுகிறேன் . அதிலும் புதுமையாக எனது கமண்டுகளையும் சேர்த்து [] இல் எழுத உள்ளேன்.
இக்கதையில் பல விஞ்ஞான கற்பனைகள் ஈா்க்மஞகும்படி இருக்கலாம் . தாம் எதிர்பாா்த்த அளவில் இல்லாமலும் போகலாம் , என்றாலும் படிக்க சுவாரஸ்யம் ஏற்படுத்த என்னளவின் எல்லைவரை முயற்சிக்கிறேன். பின்னாலில் எங்கேனம் யாரேனும் என் கதையில் வருவது போல என்று கற்பனையில் சிலாகித்தால் அதைவிட பொிதாய் எனக்கு ஏதுமில்லை
إرسال تعليق