நேரிசை ஆசிரியப்பா - கவிப்போம்

நல்விதி செய்வோம் நமக்காக நாளை
நல்மதி கொண்டு நம்மை அறிந்து
அல்வினை அறுத்தே அன்பினை செலுத்த
நல்வழி செய்து நன்மை
நடத்த நல்விதி செய்வோம் நாமே

அட்டநாக பந்த மதனைப் படைப்பர்
கட்டமாக கணித்து கொண்டு வரைவர்
வட்டமான சித்திரம் வரைந்து கவிப்பர்
சட்டமதைக் கற்று சந்தமென வகுப்பர்
மட்டமென ஏதுமிலை மாற்றென வழங்குவர்
நட்டமென கருதாமே வாரும்
நல்லகவி கற்றுத் தெளிவாம் நாமே..

ஒற்றனை நாளும் ஓம்புநல் நாட்டில்
ஒல்வினை வருமின் ஓங்குமின் நாட்டில்
ஒக்கதம் விழிகாண் ஓவென் றலறின்
ஒல்லென் றுவந்து ஓம்பும்
ஒற்றை அரசனை ஓங்க வாழ்த்துவமே...

நேரிசை ஆசிரியப்பா.. இப்ப தான் கத்துக்கிட்டேன்.. நிறைய பிழைகள் இருக்கலாம் மன்னிச்சூ..

#பொருள் : ஒற்றனை நாளும் காக்கும் நாட்டில்
திடீர்ரென வரும் பிரச்சனையில் வளரும் இந்த நாட்டில் தீமையின் விழிகண்டு அலறும் போதெலாம் சட்டென்று வந்து காக்கும் ஒற்றை அரசனை பெரிதாய் வாழ்த்துவோமே..

அழகியல் உண்டு அனுபவம் உண்டு
அகவையும் உண்டு அகவலும் உண்டு
அறுசீர் பாடியே ஆறுதல் கூறியே
அனந்தம் பெருக்கு அன்பினார் உண்டு
ஆமாம் எங்கள் தமிழில்
அழகும் உண்டு அனுபவம் உண்டு...

உலகினில் சிறந்து உடலுடன் கலந்து
உளவியல் அறிந்து உருவகம் தரித்து
உளமதில் நிறைந்து உவமையாய் புனைந்து
உயிரெல்லாம் நிறைந்த தமிழே
உணர்வினில் உறைந்து உயர்வனை அருளுதே

#வெண்பானு நம்பனும்..

கல்லா பிழையோ கவனமிலா தவறோ
சொல்லா குருவோ சொற்ப அறிவோ
எல்லா இணைந்தோ ஏற்காது போனேன்
நல்லா துணையோ மரபு

வந்தே அறிந்தேன் வளமுடைய மரபை
எந்தே னமுதாம் எழுத்துக் கவிதை
நோந்தே ன்முன்னாள் நேர்ந்த தவறை
செந்தே னமுதக் கவியோன்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post