இதற்கு பெயரும் சிறுகதை தான் 1 - இப்படியும் ஒரு நாள்

அந்திமாலை முடிந்து அதிகாலையில் அறைதூக்கத்தில் காது மறைத்த மப்ளருடன்; கண்மறைக்கும் பனியில் பயணிக்கும் நான். நல்லதம்பி என்கிற பெயர் கொண்டவன். பெரும் விடியல் காண இச்சிறு விடியல்களை 50 வருடங்களாய் கடந்து வந்தவன்.

வியக்கவைக்கும் அல்லது வியக்கப்படும் நிகழ்வுகள் அற்ற சராசரி நாட்களை தேவையற்ற வீணாகிய நாட்களாகத்தான் கருதினேன். அப்படியாக 50 வருடத்தில் 18200 நாட்களை வீணாக கழித்தவன். சராசரி குடும்பஸ்தனாக எனது கடமைகளை சரிவர செய்து முடித்த பின்னரும், "பச்சை கிளிகள் தோளொடு" என்று பாடாமல் இன்றும் ஒரு வியப்பான நிகல்வுதனை நோக்கி எனது பயணத்தை துவங்கினேன்.

இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் ஏன் இந்த பயணம் என்று கேளுங்கள் , பதிலிருக்கிறது. வருடத்திற்கு ஒரு நாளாக கழித்தது போகவே 18200 என்பது இந்நேரம் உங்கள் மணக்கணக்கு சொல்லிருக்கும்; நேற்றைய தினம் திரும்பி பார்க்கையில், இந்த ஜூலை 6 மட்டும் எனக்கு அத்தனை முக்கியமான நாளாக வருடம்தோறும் இருந்திருக்கிறது. என் பிறந்தநாள் ஜூலை 6 . நான் பள்ளியில் சேர்ந்தது, கல்லூரியில், வேளையில் சேர்ந்தது, ஏன் என் திருமணம், மகன் பிறந்தது, மகன் திருமணம், பேரன் பிறந்தது என்று அத்தனை இன்பதினகழும் ஜூலை 6 என்பது என்னை பொருத்த மட்டில் அதிசயம் தான் கூடவே..

அம்மா இறந்ததும், ஜூலை 6. அப்பா என்பவர் புகைப்படங்கள் மூலம் கற்பிக்கப்பட்ட பிம்பம். அம்மாவே அனைத்துமாய் இருந்ததால் அப்பாவை பற்றி கனவிலும் நினைத்ததில்லை. இப்போதும் வழியும் கண்ணீர் துளிகள் சொல்லும் அம்மாவின் பாசத்தை தாக்கத்தை. அதுபோல் இன்றும் ஜூலை 6 என்பதாலே இந்த பயணம்..

உள்ளத்துள் உற்சாகம் ஊற்றெடுத்தும் உறைந்த கரைகளாய் சில சலன பயமும் நிறைந்திருக்கவே செய்கிறது. அழிவேன்றாள் அது என்னோடு முடியட்டும் என்கிற வீரம் பிரவாகமேடுக்க கிளம்பிய பயணம் இது ஆனாலும் வாக்கிங் தான் தினமும் செல்லும் வாக்கிங் தான்....

இரவு தூறிய மழை கொடுத்த சேற்றில் பதுங்கி பாய்வது போல் கடந்து, இடதுபுறம் திரும்ப, 100 அடி சாலை இடையே வெள்ளரலி , கோழிக்கொண்டை பூக்களும் அதன் செடிகளும் புட்களும் நிறைந்த பிரிவினை கோடு சாலையை இரண்டாக பிரித்தது.

இடதுபுறம் என்னும் இந்திய சட்டத்தை கடைப்பிடித்து நடைப்பிடித்தேன். சாலை முடிவில் பிரதான சாலை குறுக்கிட்டது, இல்லையேல் எதிரே தொலைவினில் இருக்கும் வளர்ந்தமலையை சேர்ந்திருக்கும். மீண்டும் இடதுபுறம் திரும்பி நடக்க அறைகுறை வெளிச்சத்தை சமண்படுத்த தலைவிளக்குடன் கடந்த வாகனங்கள் என்னையும் கவனித்திருக்கும் என்பது நிதர்சனம்..

அருகே ஒரு பூங்கா இருக்கிறது, அங்கே பூக்களை பறித்து வளர்ச்சியை தடுத்து, புதர் போல வரிசைப்படுத்த பட்டு இன்பம் விளையவேண்டும் என்று வற்புறுத்தும் தொனிக்கோண்ட சிறுவர் விளையாட்டு பொருட்களுடன், சிறுபிள்ளைகளை ஈர்த்து மயக்கும் துயரம் அது. இன்னொருவர் தள்ளாமல் நகராத ஊஞ்சல், ஒரு காலத்தில் எண்ணை வேண்டி கதறி கதறி தொண்டை கிழிந்த போராளி, இப்போது ஒற்றுமைக்கான காரணம். அதிகாலையில் இத்தனை அவலங்கள் வேண்டாமென்றே, மீண்டும் இடதுபுறம் திரும்பி சாலையை குறுக்கே கடந்து,

ஸ்டேடியம் சென்றேன், அதிகாலையில் அவரவர் வயததிற்கேற்ப்ப உடற்பயிற்சி மேற்க்கொண்டிருந்த கூட்டம், அதன் பின்புலம் பல்வேறு வலைகளால் பின்னபட்டு இருக்கலாம். இவை அனைத்தும் சதாசர்வ கால நிகழ்வுகளே இதிலென்ன வியப்பு. இன்றைய தினம் இப்படியே முடிந்துவிடுமோ? சரி... என்று வீட்டிற்கு கிளம்பினேன்..



இப்போது வலதுப்புறம் திரும்பி மீண்டும் வலதுப்புறம் திரும்பி சென்றால், கண் பார்க்கும் தூர வரை தாரை படர்ந்த புல்வெளி அதன் நடுவில் சிறு நடைக்கு என்றே ஒற்றை அடிப்பாதை நான் மட்டும் தனி ஆள். என் மனம் ஏதோ ஒரு வியப்பிற்கான பரவசத்தை போர்த்திருக்க உள்ளுக்குள்ளே பயம் நடுங்கிகொண்டிருந்தது சமநிலை திரிந்த சமநிலை தருணம் அது. அப்படி என்ன நிகழும் என்கிற ஆர்வம் ஈர்க்க பின்னால் இருந்து வீர்..என்ற சப்தம் பதற்றதுடன் திரும்பிட இப்போதும் பின்னால் இருந்து ஒரு வெடிசத்தம்...


திடுக்கென்று திரும்பி பார்த்தால் குடையை கவிழ்த்தியது போன்று ஒரு பெரும் பாறை சுமார் 48 அடி தூரத்தில் விழுந்தது. அதன் இடைவெளி பிரதேசங்களில் ஒளிகதிர்கள் ரத்தம் போல் பாய்ந்து கொண்டிருந்தது. பழைய படங்களில் வரும் குகை திறப்பு போல் ஒன்று நிகழ்ந்தது. அதனுழிருந்து சில நடராஜ் பென்சில்கல் பறந்து வந்தனவா அல்லது வீச பட்டனவா என்பது தெரியவில்லை. ஆதில்ஒன்று என்னை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது. அதுவும் 5 அடி தூரத்தில்...

என் மனம் சளனப்பட்டது நிஜம்; இன்று எனக்கு என்னமோ ஆகா போகிறது; மனதில் எணனவோ ஓசைகள் எண்ணங்கள் ; ஆகாய கங்கை போல அட்ரினலின் பிரவாகம்; இதற்கிடையில் பாறையில் எந்திர ஓசைகள்; நின்ற இடத்தில் ஓடுவது போல நடுக்கம்..

அந்த 5 அடிதூர நடராஜ் பென்சில் " என்ன அப்படி பார்க்கிறாய்? ஏன் பயப்படுகிறாய்?" என்று நல்ல தம்பியிடம் நல்ல தமிழில் கேட்டது..

ஆச்சரியம், அபத்தம், அச்சம், ஆகர்சம், அதிசயம், ஆபத்து, இந்நிகழுவினை இவற்றுள் எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை..

குழறிய மொழியில் கேட்டேன், யார் நீ எப்படி தமிழ் பேசுற?

ஓ! அதுவா? நான் JUPITER ல இருந்து வறேன். உன் பாக்கெட் ல இருக்குற குச்சிய வச்சி உன் மனச படிச்சேன் அதுல தான் நீ தமிழன் என்று தெரிஞ்சுகிட்டேன்..

உடனே பாக்கெட்டைய் துழவினேன் ஒரு கருப்பு நிற ப்லாஸ்டிக் குச்சி இருந்தது இது எப்படி வந்தது? நீ மனுசன இல்ல வேற ஏதாவத?

நான் ஒரு எந்திரம், உங்க பூமிள இருந்து நிலவுக்கு ஒரு நாய் அனுப்பிநீங்களே அது மாதிரி ஒரு எந்திரம்..

அப்படியா இங்க வந்த வேலை?

அதுவா உங்க ஊர் கவுன்சிளர்க்கும் ஹிட்லருக்கும் வந்த எண்ணம் மாதிரி எங்க கிரக அதிகாரிகளுக்கு வந்தது தான் காரணம்? இன்னும் 5 நிமிசத்தில் பூமிள இருக்குற உயிரினங்களை அழிச்சித்து போகணும்..

அய்யயோ! இது என்ன விபரீதம்? நாங்க என்ன பண்ணோம்?

நாங்க மட்டும் என்ன பண்ணோம்? எங்க கடமையை நாங்க செய்தாகணும், என் படைகள் இந்நேரம் வேலைய முடிச்சிருப்பாங்க, பை தி பை உன் பிறந்தநாளுக்கு என்னோட வாழ்த்துக்கள்!

நாங்க இறந்து போய்விடுவோமா? அதற்குள் அந்த பென்சில் பாறையை நெருங்கி விட்டது... அங்கிருந்து ஒரு குரல் ...

" இன்னும் 10 நிமிசம் களித்து நீ உயிருடன் இருந்தா இந்த கேள்விய திரும்ப கேளு " என்றதுதான் வீர்...... என்ற சப்தத்துடன் மறைந்து மு..டி...ந்...த... து.....


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم