பிரம்மாஸ்திரம்
– சிறுகதை
அகமகிழ்ந்து
அடக்கமாய் முக்தி பெற்றது இரவு; ஒளிக்கதிர்கள் வரமளித்து பிறந்தது. அதிகார பிரவாகமாய்
பணித்திருந்தான் சுகர். பெயர் என்னவோ புதிதுதான், தமிழ்மொழி பயன்படுத்தாமல் சேர்த்துவைத்த
பெயர் பரிசித்து மகராஜாவின் இறுதிகாலத்தில் அவருக்கு ஆன்மீக போதனை செய்தவர் சுகர்,
ஆனாலும் கடந்த ஆண்டு சுகருக்கு நீரிழிவு நோய் உறுதி செய்யபட்டபின் பொருத்த்மானது பெயர்…
ஸ்ரீஹரிகோட்டாவில்
இன்று சோதனைக்காக நிர்கிரது பிரம்மாஸ்திரம். சுகரின் பத்தாண்டு உழைப்பு, சுகர் இந்திய
பாதுகாப்பு தளவாட துறையின் ஆய்வு பிரிவை சேர்ந்தவன், ஐந்தாம் பட்டயதில் முதல் நிலை
ஆய்வாளன் அவன். அவன் கண்டறிந்ததுதான் இந்த பிரம்மாஸ்திரம்…
சுகர்
அதிகளவில் பழங்கால புராணகதைகளில் ஆர்வம் உள்ளவன். அக்கதைகளில் அவனை ஈர்த்தது இந்த பிரம்மாஸ்திரம்
தான். அதன் மகத்துவதை அறிந்துதான் அவனது நவீன ஏவுகணைக்கு பிரம்மாஸ்திரம் என்று பெயர்
வைத்தான், கிட்டதட்ட அதன் செயல்பாடும் பிரம்மாஸ்திர சூத்திரத்தை அடிபடையாய் கொண்டது
தான்…
பிரம்மாஸ்திரமானது
பிரணவ மந்திரத்தை கொண்டு உறுதி செய்யபட்டு பின்னர் எய்துவோர் கட்டளை அறிந்து எதிராளியை
எங்கு இருப்பினும் அழித்து விடும் , இடையில் வானத்தில் பிரம்மனின் அனுமதிக்கு காத்திருக்குமாம்,
அதை வைத்து இன்றைய காலத்துக்கு ஏற்றமாதிரி ஒரு வடிவம் கொடுத்து உருவாக்கினான்…
அதாவது,
எதிராளியின் செல் tracking code குடுத்தால், ஏவுகணை செயல்பாட்டிற்கு தயாராகிவிடும்.
பின்னர் எய்துவோர் launch பட்டனை அழுத்த அது ஆகாயத்தில் சீறிசென்று satellite
location accessக்கு காத்திருக்கும் அனுமதி கிடைத்தவுடன் எதிராளி எங்கு சென்றாலும்
அழித்துவிடும்…
சுகர்;
மிகவும் நிறைவுடன் இருந்தான்; பிரதம மந்திரி பிரான் படெல் அருகில் அமர்ந்திருந்தார்.
வழக்கமான சடங்குகள் செயல்படதுவங்கின. சுகரின் எண்ண ஓட்டம் புராண காலத்துக்கு நகர்ந்தது
தன்னை அர்ஜுனனாய் நினைத்துகொண்டான். பிரணவ மந்திரத்தை ஒருமுறை சொல்லிக்கொண்டான்…
ஐய,
பர பிரம்மோ ஜெயவி
ஐய,
சர்வ சம்போ ஜெயவி
ஐய,
பிரம்ம அஸ்திர ஜெயவி
ஐய,
பிரம்மோ பிரசோதயாத்..
காலம்
நெருங்கியது, சுகர் தன்னிடம் இருந்த signal synchronizerஐ பிரதம மந்திரியிடம் கொடுத்தான்.
அவர் அதைபற்றி விரசித்து அறிந்துகொண்டார். என்ன இவ்லொ சின்னதா இருக்குஇதுவா அதை செய்ய
போகுது என்றார் ஏளனமாய், fair n lovely , cream fairness treatmentக்கு சமம்னா மட்டும்
நம்புறீங்கல்ல சார். சரி அதை அந்த பெட்டியில வைங்க, வைத்தார். சில நிமிடங்களில் பிரம்மாஸ்திரம்
கடலினுள் தன் இலக்கினை தகர்த்து வெற்றி பறைசாற்றியது..
அந்த
பிரம்மாஸ்திரம் சீனாவிற்கு விற்கபட்டது, சுகர் சிரையில் அடைக்க பட்டான், …
ஊழல்
என்னும் பெரும் பிரம்மாஸ்திரத்தின் முன் இந்த சிறும் பிரம்மாஸ்திரம் தோற்றுபோனது. இதுவும்
பிரம்மனின் வேடிக்கையான விதிபோல…
பவித்ரன்
கலைச்செல்வன்
நன்றி…
إرسال تعليق