கடவுள் என்பது என்ன - 4- ஞானம்

முதல்ல ஒரு இதுவரை பாத்துரலாம் ஏன்னா நிறைய நாள் இடைவெளி விட்டுட்டோமில்லையா? முதல்ல அறிமுகமா சில விசயங்கள் சொன்னேன். அப்புறம் அகம் பிரிவில் இதுவரையில் மூளை மனம் உயிர் னு 3 பிரிவை பார்த்துள்ளோம்.. இப்போது 4வதாக ஞானம்; முதல்ல இத சோக்கலாமா ? வேண்டாமா? என்கிற குழப்பம் இருந்தது... பெரிய பெரிய ஞானிகளை இவ்வுலகம் கடவுளாய் வழிபடும் போது ஞானமும் சேர்க்கலாம் என்று முடிவுசெய்தேன்..
பின்னால் ஞானம் என்றால் என்ன?னுஒரு கேள்வி  வந்தது.. குத்துமதிப்பா ஒரு விசயத்தை பற்றிய அறிவு அப்படினு எடுத்துக்கொண்டால் அந்த அறிவு வெளியிலிருந்து பெற்றதா அல்லது உள்ளிருந்து வந்ததா எனறொரு கேள்வியும்வரும்..  வெளியிலிருந்து பெற்றிருந்தால் அது புறத்தில் சேரும்.== சரி உள்ளிருந்து தான் வந்தது என்று கொள்வோம்..
உதாரணமாக ; ஒரு சிறுவன் பிறப்பிலேயே நல்ல இசை கலைஞனாகவோ கவிஞனாகவோ இருப்பது அறிவா? ஞானமா? ஞானம் தானே...
உண்மையில் ஞானம் என்பதை பிரித்தால் ஞா + னம் என்றாகும்.. ஞா என்றால் உலகம் ஞானிலம் கேள்விபட்டிருப்பீர்கள் னம் அதாவது நம்...
உலகத்தை பற்றியும் நம்மை அதாவது நமது உடல் மனம் செயல் பற்றி அறிவதுமே ஞானம்..
ஆகவே உடலை பற்றியறிவது மெய்ஞானம் என்றும் உலகத்தை பற்றியறிவது விஞ்ஞானம்என்றும் சொல்லபட்டன...
காதற்ற ஊசியை பாடுபொருளாய் சொன்னபோது  பட்டினத்தார் சொலவதென்ன ?
காதற்ற ஊசியுமே கடைவழிக்கு வாராதே என்கிறது ஊசியை பற்றிய செய்தி மட்டுமாஎன்ன? அல்ல  காதற்ற அதாவது கேள்வி ஞானமற்ற எவரும் நல்வழிக்கு வருதில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்தவில்லையோ...
ஆசைதான் துன்பத்தின் காரணம் என்கிற சித்தாந்தம் புத்தருக்கு எப்படி கிடைத்தது?  இன்னும் விளக்கவியலா கணிதங்கள் என்றோ ராமானுஐத்திற்கு எப்படி தெரிந்தது?
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் அத்தேடலின் விடையை எப்படி அறிவென்று மட்டுபடுத்துவது?
சரி ஞானம் எப்படி கடவுளாகும்? அதுதானே நமது கேள்வி? ஞானத்தின் குணாதிசயங்கள் என்ன?
நிஜம், தன்னை அறிதல், ஆற்றல், தெளிவு , தாழ்வின்மை, பாகுபாடின்மை, வாழ்வை உயர்த்துதல் ... போன்றன கடவுளுக்கும் பொருந்துகிறதே...
[ முன்பே வந்த 3 கட்டுரைகளும்  இது எப்படிபட்ட தேடல் என்பதை ஓரளவு உணர்த்திருக்கும் என்று நம்புவதால்  இதனை சுருக்கமாக சொல்கிறேன். இந்த அலசலில் தங்கள் பங்கும் அவசிய படுவதால் முழுமையாக விவரிக்காமல் விடுகிறேன் இப்பகுதியை பொருத்தவரையில் ஒரு விவாத ரீதியிலான அலசலை தான் நான் எதிர்பார்க்கிறேன் .. ]
தேடல்கள் தொடரும்..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post