கடவுளின் சரித்திரம் - ஆதிமூலமே..

பெருமாள் பாற்கடல்வாசன் விஷ்ணுவின் கதைகளில் இதும் ஒன்று .. யானை முதலையிடம் சிக்கி தன்னை காப்பாற்ற ஆதிமூலமேனு அழைக்க விஷ்ணு வந்து காப்பார் ....

இங்க இருக்குற கஷ்டத்துல நான் ஒரு முப்பது முறை கூப்டு பாத்தேன் .. ம்ஹீம் விஷ்ணு வரவில்லை.. மகாலட்சுமியே இருந்தும் அவருக்கும் பணகஷ்டம்.. நம்ம கஷ்டத்துக்கு அவர்கிட்ட பணமிருக்கனுமில்ல..

சரி விசயத்துக்கு வருவோம் .. தமிழ்ல எனக்கு தெரிந்து ஒரே ஆர்ததமுள்ள இருசொல்லை அடுக்குதொடரன்றி வேறுவிதமாய் பயன்படுத்தியதில்லை.. அப்படி பயன்படுத்துனா அதுக்கு வேற பொருள் இருக்குனு அர்த்தம்..

ஆதியும் மூலமும் ஒன்றுதான என்று பார்த்தால். இல்லையே ஆதி என்பது முதற்பொருள். மூலம் என்பது முந்தைய பொருள். ஆக ஆதிமூலம். முதற்பொருளின் முந்தையபொருள் என்றது பொருளுரை. அட பாருங்க பிரம்மன் ஆதியாம். பிரம்மனை படைத்த விஷ்ணு ஆதிமூலமாம்.. அருமைதானே.. இது எதுக்கு இங்கனு கேட்கிறீங்களா..?..

இந்த விசயத்த புரிஞ்சா இதோ இதையும் புரிந்துகொள்ளலாம்.. மாயன்கள் தம் வரலாற்றை குறிப்பிடுகையில். கடற்கோள் வருமென்று முன்பே அறிந்து சென்றதாக சொல்கின்றனர்..

பல தென் ஆப்பிரிக்க பழங்குடியினங்கள் இதை பிரதிபலிக்கும் வரலாற்றை தருகின்ற.. உலக மதங்கள் இனங்கள் யாவும் தம் பூர்வீக வரலாறாய் உரைப்பது இதுவே.. ஆனால் இந்த இடம் என்று குறிப்பிட படவில்லை.. ஆனால் அவர்கள் சில குறிப்புகளை கொண்டு பொதுமைபடுத்தி குறித்த இடம் எது தெரியுமா?..

தென்னாடுடைய சிவனே என்று போற்றலுக்குரிய தென்னாடே தான்.. ஆப்பிரிக்க பழங்குடியினர் அதனை தென்டா என்கின்றனர்.. அது இருந்த இடம் குமரி கண்டமான லெமுரியா.. இளமுரியாள் என்பதே லெமுரியா என்பது என்தனிபட்ட கருத்து..

ஆம் இனங்களின் ஆதிகள் எங்கெங்கோ உள்ளன.. ஆனால் ஆதிமூலம் இத்தென்னாடுடைய குமரி கண்டமே.. ஆதிமூலமே..

சரி கார்டன் ஆப் ஈடன் என்னும் பைபிள் குறிப்பிடும் இடமே குமரிகண்டமென சொல்கிறார். அலக்ஸ் கால்லியர்.. அட இதை நானே சொல்வேனே. ஈடன் தோட்டம்.. படைப்பின்  முதலிடம்.. ஈசனே படைப்பின் முதற்பொருள் .. ஆதலால் படைத்தவன் தோட்டம் அவன் பேரில் இருப்பதென்ன பிழை ..

கிருஸ்துவம் மற்றும் கர்த்தர் தம்மை தெளிவாக வெிகாட்டியுள்ளனர்.. ஆம் இறுதிவரை கர்த்தர் இறைவனை பிரார்த்திக்கவே மக்களை நல்வாழ்வுக்கு மாற்றவேநினைத்தார்.. சிலுவையில் தாமே இறைவனிடம் வேண்டினார். அதுவும் ஈசனிடமே வேண்டினார்..அதை மற்றொரு கட்டுரையில் சொல்லாம்..

நபிகள் நாயகமும் இறைவனை வணங்குதலை செம்மை செய்து உலகை நல்வழிபடுத்த எண்ணினார்.. நம் காளமேகர். அப்பர் போல அவர்களும் வணங்கதக்கவர்களே..

குமரிக் கண்டம் ஏன் ஆராயபடுகிறது? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?. விடையென்ன விவரம் என்ன? யோசித்திருங்கள்..

தேடல் படகை கடலுக்குள் இருக்கும் குமரிக்கு செலுத்தலாம்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post