என்னடா பழைய தலைப்பேவருதேனு யோசிக்க வேண்டாம் பில்லா மாதிரி இது ரீமேக் தான் .
சரி உங்களுக்கெல்லாம் 100 வருசம் வரைக்கும் வாழனும்னு ஆசை இருக்கில்லையா?
அப்படி 100 வருசம் வாழ என்ன வழி?
முதல்ல இத பாக்கலாம் முன்ன அதாவது கற்காலத்துல ஒரு மனிதனின் ஆயுள்ங்கிறது சுமார் 150 வருடம். ( காமடி பண்ணாம போ னு சொல்லாதீங்க தொல்பொருள் ஆராய்ச்சி படி கிடைத்த எலும்புகளின் முதிர்ச்சி 150 னு சொல்லிருக்காங்க)
பின்ன சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு முன்னாடி ஒரு மனிதனின் சராசரி ஆயுள் 100 . இன்னும் பின்ன ஏன் சென்ற நூற்றாண்டு வரை சராசரி வயது 80-90 .
இப்ப 60-65 தான் காரணம் என்ன ? சிக்கன் 65 னு கமண்டலாம் தவறில்லை. ஆனா ஏன்ங்கிற முழு விவரம் தெரிய வேண்டாமா? தெரிந்து வாழ்வை நீட்டிக்க வேண்டாமா?
நடுவில் ஆயுர்வேத / சித்த மருத்துவ காலத்தின் சிலர் மட்டும் 135 வயதுவரை வாழந்துள்ளனர்.
நாம் மட்டும் ஏன்? என்றால் வரும் முதல் பதில் சாப்பாட்டுல சத்துல்ல என்பது தான் சத்து அதிகமாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு ஸ்பூன் சக்கரையில் இருக்கும் இனிப்பைவிட செயற்கையாக சேர்க்கபடும் அலாஸ்கான் ஒரு ஸ்பூனின் இனிப்பு 8 மடங்கு பின்ன சர்க்கரை நோய் வராமனு நிறைய பேர் பேசுறாங்க.
நாம் மட்டும் ஏன் ? அட காட்டுவாசி கூட 100 வாழ்றான்ய்யா.. நாம மட்டுமேன் ?
பதிலென்ன? நமக்கு இப்படியெல்லாம் கேள்வி தோனுவதேயில்ல .. ஆனா தேவைபடுதே.
ஸ்பேயின்ல தான் இதற்கான ஆராய்ச்சி முதல்ல படி தொடுது. பின்ன படிபடியா உயர்ந்து நிக்கிது.. இன்னிக்கி சர்வதேச அளவில ஒரு இயக்கமாவே நடக்குது. இந்த ஆரய்ச்சி . அப்படி என்னத்தான் ஆராய்ச்சி பண்ணாங்க?
...
சரி சொல்லுங்க , உலகத்துலயே அதிகம் வருசம் உயிர்வாழுற உயிரினம் எது? ஆமை 300 வருசம் சில சமயம் தவளை தண்ணிக்குள் 6 மாசம் வாழும் உணவுகூட இல்லாமல் .
ஆமைய எடுத்துங்கங்க அதோட குணமே என்ன ? பொறுமை அல்லது ரொம்ப நிதானம். ஸ்லோ , சரி இது அப்படியே வைங்க..
உங்களுக்கு ஆமையின் பலம் தெரியுமா ? அதன் ஓட்டின் கடினம்? இதுக்கு பின் அதிக வருசம் வாழுற உயிரினம் நம் கையல் தினமும் அகபட்டு சாகும் எறும்பு அதன் ஆயுள் 15 வருடம் சரி அதன் குணமென்ன ஆபத்து வரும் வரை நிதானம் பொறுமை.
மனுஷனுக்கு நிதானமில்லையே ப்ளாட்பாரத்துல இருந்துகிட்டு பிளாசாக்கு ஆசைபட்டு தலைதெறிக்க அலையிறான். இதுல காதல் வேற கருமத்த பாடாபடுத்துது .
சரி மேலே சொன்னது படி நிதானம் எதுல செய்யிற வேலையிலயா ? இல்ல நமக்கு நிறைய வேளை வேணும்னா நாம சிக்கனமாயிருக்கனும் எதுல?
அந்த உயிரினங்களின் ப்ரீத் ரேட் தெரியுமா உங்களுக்கு ? தவளை தண்ணிக்குள் இருக்கும் போது 2 நிமிடத்துக்கு ஒரு முறை தான் சுவாசிக்கும் . ( இது தவளைக்கு நான் சொன்னேன்னு 2 நிமிடம் மூச்சுவிடாம இருந்து என்ன கொல கேஸூல போட்ற போரீங்க)
ஆமை 5 நிமிடத்துக்கு சுவாசிக்கும் . அதுபோல நம் சுவாசத்தின் நேரமும் நீள வேண்டும் இப்போது நீங்கள் ஒரு நிமிடத்துக்கு 3 முறை சுவாசிக்கிறீர்கள்
இப்படி பாருங்க , நண்பன் என்கிட்ட நல்ல கம்ப்யூட்டர் கீபோர்டு வாங்கிதர சொன்னான் 2 மாடல் ஒரே பிரண்ட்ல ஒன்னு 150 இன்னொன்னு 250 எது நல்லது சொல்லுங்க.. 150னா நீங்க பணத்தின் குறைவ பாக்குறீங்க
கீபோர்டு வாங்குறதுக்கு முன்னாடி கவனியுங்கஅட்டையிலேயே போட்டுப்பான் நம்பர் ஆப் டைப் னு 1 லட்சமோ அல்லது ஏறதாழ அதன்படி வாங்குதல் உசிதம். நான் 250 க்கு வாங்கி கொடுத்தேன் அவனுக்கு சந்தேகம் அதெப்படி 1 லட்சம் வரைக்கும் தான் பயன்படும்னு நான் சொன்னேன் ஒவ்வொரு கீயும்னு அவன் என்ன பண்ணான் போய் கமுபுயூட்டர்ல கனக்ட் செய்து எம் எஸ் வேர்ட்ல் ஆர் கீயை அழுத்திபடித்தபடி கீழே வேர்ட் கவுன்டில் 1 லட்சம் வரை பிடித்திருக்கிறான் அதன்பின் ஆர் கீ வேலை செய்யவில்லை இவனை போன்றவர்களை என்ன செய்வது?...
சரி அதைவிடுங்க, நம்ம விசயத்த பாக்கலாம். இப்போ சொல்லுங்க நீங்க எப்பலாம் அதிகமா வேகமா சுவாசிக்கிறீங்க , கோபத்துல பயத்துல அதிர்ச்சியில டென்சன்ல ஒருவேள உங்க சுவாசம் ஒரே நிலையில இருந்தா? இதத்தான் முனிவர்களும் சித்தர்களும் செய்தார்கள்.
சரி பேட்டர்ன் என்ன ? மூச்சை உள்ளிழுத்தல் 6_8 நொடிகள் . கஷ்டமா அப்ப 4-5 நொடிகள் உள்நிறுத்தல் 2_4 வெளிவிடல் 4_5 நொடிகள். முயன்றுபாருங்கள் தானாகவே உடல் வலுக்கும் .
அட அந்த கீ போர்டு கதைய எதுக்கு சொன்னேன் ? இதுக்கு தான் எப்படி லட்சம் முறைக்குமேல் கீபோர்டு பயன்படுவதில்லையோ அதுபோல நம் மூளைக்கும் இதயத்திற்கும் அளவுகள் உண்டு . அறிவுக்கு இல்ல நீங்க அதுல சிக்கனம் பாக்கவேண்டாம் .
சரி இதனால என்ன நடக்கும் ? முன்னோர்கள் உடம்பை பேணிகாத்தது இதற்குதான் உயிர் வாழ்தலை நீட்டிக்க...
ஏப்பா வெள்ளகாரங்களா , எடுத்துனு போய் டாக்டர் பட்டம் வாங்கிகங்கடா !!!
إرسال تعليق