ஆங்கிலேயே ஆட்சி முடிந்து மீண்டும் நாம் மக்களாட்சி என்கிற பெயரில் மன்னராட்சியை தொட பயணிக்கும் காலமிது ..
நான் சற்றே படித்தவன் என்றாலும் சாமானியன். எவ்வித நோக்கமுமின்றி கவலைகளுடன் அறிவையும் , பணத்தையும் தேடி அலைபவன். கார்பரேட் கம்பனிகளே திவாலாகும் காலத்தில் இன்னும் வேலை தேடுபவன்.
இன்றும் அதுபோல் வேலைதேடி அலைந்தபின் ஒரு நெட்கேபேயில் அதாவது பரவுசிங் சென்டர் எனப்படுவது . அங்கு எனது ரெசூம் ஐ சில கம்பனிகளுக்கு வேலை கேட்டு மெயில் செய்து கொண்டிருந்தேன்.
வந்த வேலை முடிந்தது ஆனால் இன்னும் நேரம் பாக்கியிருக்கிறது. மேகமாகியும் குறையா கடல் போல் என்னிடம் எப்போதும் வற்றாமல் இருப்பது நேரம் மட்டுமே.
மேற்படி என்ன செய்வது ,? எதாவது நோண்டிகொண்டிருக்கலாம் என . விர்சுவாலிட்டியை பற்றிய கட்டுரைகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். பின் மெல்ல.மெல்ல நேரம் கறைய. கையிலிருக்கும் பணத்திற்கு டென்சன் வந்தது . பின் எழுந்துவந்து கவுண்டரில் பணம் செலுத்தியபின் .
பைக் எடு்த்துகொண்டு நான்கு ரோடு வந்து ரவுண்டானாவை சுற்றாமல் நேரடியாக வந்தவழியின் வலதுபுற சாலைக்கு திருப்பினேன். என்னை (பைக்கை) உரசுமளவில் ஒரு ஸ்கூட்டி வந்தது. அந்த ஸ்கூட்டி பெண் ஒரு முறை பதற்றமாக என்னை பார்த்து சமாளிக்க சிரித்தாள் அந்த பிங்க் மற்றும் சில்வர் வர்ண ஸ்கூட்டிக்கு என் பைக் மயங்கிருக்கலாம் . வெண்மையான சற்றே ரோஸ்பவுடர் மற்றும் நிசான் ப்ராண்டின் சில்வர் சென்ட் மணம்கொண்ட அப்பெண்ணிடம் நான் மயங்கவில்லை.
.
சரி போய் தொலை என்று விட்டுவந்தேன் காரணம் மணி இரவு 9:15 லேட்டா போனா ஊட்ல சோறு கிடைக்காது. சறிது தூரம் செல்ல பஸ்ஸ்டாண்டிலிருந்து வரும் பஸ்கள் பிரதான சாலை தொடும் ஒரு குறுக்கு வெட்டு சந்திப்பு வந்தது. குறுக்கே வரும் பேருந்திற்காக எனது பைக்கின் உச்சதாயில் கத்தும் படியான ப்ரேக் பிடித்தேன். என் வலதுபுறத்தில் மீண்டும் அதே ஸ்கூட்டி. என்னடா இது? சற்றென்று எனக்கு எவரையும் தப்பாய் நினைக்கும் குணமில்லை .
அவள் நம்மள பாலோ பண்ணல. நாம தான் அவளுக்கு முன்னாடி போகிறோம்னு விட்டுட்டேன். பின் மேலும் செல்ல செல்ல யாரோ என்னை பின்தொடர்வது போலான உணர்வு திரும்பி பார்க்கிறேன் 5 அடி தூரத்தில் அதே ஸ்கூட்டி அதே சமாளிக்கும் சிரிப்பு இப்போது கொஞ்சம் ஓவர்டோஸ்.. என்னவாயிருக்கும்?
ஒருவேளை என்னை இவளுக்கு முன்பே தெரிந்திருந்து எனக்கு தெரியாமல் இருக்குமோ? இல்லை என்னை போன்ற வேறையாராவது இருந்து அவர்தான் என்று தொடர்கிறாளோ? இல்லை என் மீது பார்த்ததும் காதல்னு வருகிறாளோ . டேய் இருந்தாலும் உனக்கே இது ஓவர்டா இந்த மூஞ்சிக்கு லவ்வா அது பாத்ததுமே பெரிய அரவிந்தசாமினு நெனப்பு. சரி தப்புதான்.. இருந்தாலும் என்னனு தெரியாமல் அப்படியா? இப்படியானு நானே குழம்பிகொண்டால் எப்படி.? பேசாம அவளயே கேட்டுரலாமா?
வேண்டாம் இது நாம தெனம் பழக்கபட்ட.இடம் யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க. இப்ப இதெல்லாம் பசங்க யோசிக்க வேண்டியிருக்கு . என்னசெய்வது குடும்ப பொறுப்புகள்... .
இனா இதவிடக்கூடாது என்று கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எதிரில் சரியும் சாலையிறங்கி வலதுபுறம் திரும்பினேன். அந்த நேரத்தில் அந்த சாலையில் ஆளரவம் இருக்காது. மேலும் நாம் முன்செல்வதாயிருந்து அந்த பெண் செல்லுமிடமும் அதே பிரதான சாலைவழியாக இருந்தால் .
நிச்சயம் இந்த சாலைக்கு வரமாட்டாள் ஏனெனில் இந்த சாலை மீண்டும் அந்த பிரதான சாலையைதான் சேரும் இடையில் ஒருபுறம் மையானம் ஒருபுறம் தியேட்டரின் பின்பக்க காம்பவுண்ட் . ஆக ஆள்நடமாட்டம் என்பது சொற்பத்திலும் சொற்பம் வருகிறாளா பார்க்கலாம் என்றாள் வந்திருக்கிறாள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறாள். என்னடாஇது? பிரச்சனைய பேக்கட்ல போட்டமாதிரி ஒன்னுமே புரியலயே?.
சரி இனியும் எந்த குழப்பமும் வேண்டாம் போய் கேட்டுறலாம் என வேகத்தை குறைத்தேன் . அவளும் குறைக்கிறாள். அட கொடுமையே. ஒருகணம் டாமரும்.. ராபின்சனும் முளைக்குள் உதயமாக ச்சை அத்தனை கொடூரம் நமக்குள் இருக்கவே இருக்காது... அட டெல்லி பஸ் நிகழ்வு கூட ஞாபகம் வந்தது ச்சை என்ன மனுசன்டா நீ மிருகம் . தமிழ்நாட்ல இது மாதிரி எப்பவுமே நடக்ககூடாது.. சரி தேவையில்லாத ஆராய்ச்சிகள் நேரமாகுது நமக்கு சோறுதான் முக்கியம். விரைய விரைய தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறாள்..
மீண்டும் பிரதான சாலை சேர்ந்து பாரதிபுரம் வரை விரைந்து பின் வலதுபுறம் திரும்பி பார்க்கிறேன். தொடர்கிறாள்.நிச்சயமாக சொல்லமுடியும் இவள் பாரதிபுரத்தில் இருப்பவளல்ல என. பின் ஏன் இந்த தொடர்ச்சி கவுதம் மேனன் படம் போல் எதாவது திடீர் ப்ரோப்போசலாய் இருக்குமோ? .
கடைசியாய் ஒரு டெஸ்ட் வச்சிபாக்கலாம் என கூட்செட் தாண்டி ரயில்வே தண்டவாளம் ஒட்டி செல்லும் சாலையற்ற சாலையில் திரும்பி . அந்த சாலை பகலில் கூட யாருமே பயன்படுத்தாத சாலை. இரவில் டாஸ்மாக் பிரியர்கள் ஒரு ஆட்டோவில் செல்வர் மற்றபடி ஒன்றுமற்ற புதர் மண்டிய ஏரியா. இன்னும் பின் தொடர்கிறாளே! . சட்டென்று புதர்பக்க இடைவெளியில் இடதுபுறம் நகர்ந்து நிறுத்தி கொண்டேன். பின் வந்தவளுக்கு தெரியாது அந்த இடம் சாலைக்கு இரண்டடி இடைவெளிதான். ஆனால் அந்த சாலையின் இருபுறத்திலிருந்தும் என்இடம் தெரியாது. நிறுத்திவிட்டு கவனிக்கிறேன் . என்னிலிருந்து 9அடி தூரத்தில் அந்த ஸ்கூட்டி ஹெட்லைட் எறிந்தபடி நிற்கிறது. அவளும் நிற்கிறாள் . மனதுள் ஒரு பதற்றம் இனம்புரியா தர்க்க தயக்கம். ஏதேதோ சிந்தனைகள். சரி நாமும் எத்தனை நாள் தான் சிங்கிள் என்று பீற்றிகொள்வது. அதுமின்றி பிப்14 வேற நெருங்குகிறது.
நாமே போய் கேட்டுறலாம் என்று வண்டியை திருப்பி அவளருகில் சென்றேன் 1.5 அடி தூரம் நெருங்க அவள் விருட்டென வேகமாக சென்றுவிட்டாள். போகட்டும் அந்த சாலை வேறோரு பக்கம் கிடையாது திரும்ப இப்படித்தான் வந்தாகனும். வந்தாள் . அதே வேகத்தில் மறுபுறம் சென்றாள். என்னடா நடக்குது இங்க? சரி டேய் நான் சிங்கிள்டா... என்று பந்தாவாக சொல்லிகொண்டு வந்துவிட்டேன் . இறுதியில் சோறு போனது தான் மிச்சம்.. ஆனால்அது ஒருவிதமான உணர்வு சொல்லமுடியாத உணர்வு... காதல் என்றால் பொய் இது காமமுமில்லை இதுவேற..
ஆனால் அவள் எதுக்காக என்னை தொடர்ந்து வரனும் ?. என்னவா இருக்கும்? . ஒன்னும் புரியல. சரி இன்னொரு நாள் பார்த்தா கேட்டுறலாம்...
(தலைப்பில் தொடர்ச்சி என்றுஏன் வைத்தேன் என்பதற்கான காரணங்கள்:
1) தொடர்ச்சி ஒரு கன்டினுவேஷன் என்பதால். தொடர்ந்து வருகிறது என்கிற அர்த்தத்தால்..
2) தொடர்ச்சி. தொடர்வது பெண் என்பதால். தமிழச்சி என்பது தமிழ் பெண் என்பது போல் . தொடர்ச்சி தொடரும் பெண்.
3) தொடர்ச்சி . ச்சி இதெல்லாம் ஒரு கதையா என்பதற்கும். ச்சி என்று முடிந்ததால்..
நீங்கள் எப்படிவேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் . அதேசமயத்தில் இந்த கதைக்கு காரணமாக என்னை 17 ஐனவரி 2017 அன்று தொடர்ந்து வந்த பெயர் தெரியாத அப்பெண்ணுக்கு நன்றி..)
إرسال تعليق