University of Texas ல் PhD க்காக கிளம்பிய நான் சென்னையிலிருந்து ப்ளைட்டில் டெல்லி சென்றுஇந்திய அலவல்பணிக்காக ஒதுக்கபட்ட தனி நபர் விமானம் ஒன்று எனக்கு தரபட்டது. காரணம். பட்டயம் முக்கியமான விண்வெளி ஆய்வு பற்றியது.
வந்த விமானத்தில் என்ன கோளாறோ? நான் டெக்ஸாஸ் இறக்கபட்டாலும் காலமென்னவோ 1913. சரியாக 104 வருடங்கள் பின்னோக்கி பயணித்திருக்கிறேன்.. ஆனால் டைம் மிஷின் இல்லாமலேயேவா என்பதில் தான் குழப்பம்.. இறந்த காலத்திற்கு போக முடியாதுனு எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த அதிசயத்தின் சாத்திய கூறுகள் எனக்கு தெரியாது...
டெக்ஸாஸ் பல்கலைகழகத்தின் உதவி தாளாளர் . இடம் எனது அறிக்கைகளை கொடுத்து அனுமதி கேட்டேன். அவர் நம்பவில்லை மேலும் இதுபோன்ற இயற்க்கைக்கு முரணான முறையில் பட்டங்கள் தரமுடியாது என்றார்.. நான் அவரிடம் ஏதேனும் வேறுவழிகள் இருக்கின்றதா என கேட்டேன். ஒருவழி இ்ங்க எங்க ப்ரோபசர்கள் யாரிடமாவது உதவியாளராக சேர்ந்து . அதன்பின் அவரது மேற்பார்வையில் ஓராண்டு ஆய்வு செய்து பெறலாம்.. என்றார்.. என்ன விந்தையிது சார் நான் 104 வருசத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்.. யோசிங்க உங்க ப்ரோபசர்கள் அதை ஏற்பார்களா? .. சரி நான் ஒரு அக்ரிமெண்ட் லெட்டர் தரேன் . உனக்கு சரியான ஒரு அறிவியல் துறை சாரந்த ஒருவரை மேற்பார்வையாளராக ஏற்றுக்கொள் என்று ஒரு லெட்டர் தந்தார்...
எனக்கென்னவா நம்பிக்கையில்ல சார் ; நான் முயற்சிக்கிறேன். ஆக என் வாழ்க்கை முற்றும் குழைந்து இடியாப்பத்தை போல ஆனது நிஜம்.. எதிரகாலத்தில் என்ன நடந்தது என்பதை உணரயாருண்டு. அட நம்பவே யாருண்டு நம்பினாலும் அதன்பின் பட்டயம் கிடைத்தாலும் என்ன பயன்?
சரியாரிடம் செல்வது வாழ்வது அவசியம்.. கருடபுராணத்தில் தற்கொலை செய்தவர்களை கொடூரமாக தாக்குவார்களாம். செத்தும் சாக நான் விரும்பவில்லை காலம் கடந்தால் வாழ்க்கையே நரகம் என்பது எனது கருத்து. அப்படியே வீதிவீதியாக அலைந்து மாலை வந்தது. புதிய புதிய முகங்கள் அவர்க் பார்வையில் என்னை பற்றிய கவனமில்லை. எத்தனை சுதந்திரம் இது . ஒருவர் ஒருவராக பார்த்து சென்றேன் அத்தனை புதிய முகங்களில் ஒரு பரிச்சயமான முகம். யாரது. எங்கயோ பாத்துருக்கேன். சரி நெருங்கி போய் கேட்க அதிர்ச்சியான பதிலெனக்கு..
I'm Albert Einstein என்றது அந்த தீர்க்க குரல்.. இனி இவர்தான் என் காலம் என்றுமுடிவு செய்துவிட்டேன். அவரை வவிடுவதாய் இல்லை..உங்ககிட்ட கொஞ்சம் பேசனுமே? சாரி நான் பிஸி பட் என்ன விசயம் சொல்லுங்க நாளைக்கு முடியமா பாக்கலாம்?
நான் உங்க அசிஸ்டெண்ட் ஆக விரும்புறேன் . என்ன சேர்த்துகோங்க..
இல்ல நான் யாரையும் அசிஸ்டெண்ட் ஆக சேர்த்துகொள்வதில்லை. ஆனால் என்னை நீங்க சேரத்துக்கனும் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு .. எனக்கு எந்த காரணமும் தேவையில்ல வேற ஆள பாருப்பா என்று நகர்ந்தவர் சிறிது தூரம் கடந்துபின் . இங்கவா. என்ன காரணம் சொல்லு.. தாரளமா சார்.
காரணம்1 டெக்ஸாஸ் பல்கலைகழகத்துல நான் எனக்கு பிடிச்ச யாரவேணும்னாலும் என்னுடய பிஹெச்டிக்கு மேற்பார்வயாளரா தேர்நதெடுக்கலாம்.
காரணம் 2 நான் எதிர்காலத்தில இருந்து வந்துருக்கேன்..
என்ன? என்னால நம்பமுடியல ; யாரும் நம்பமாட்டாங்கனுதான் உங்கள தேடி வந்துருக்கிறேன். என்ன சேர்த்துக்கோங்க...
அதில்ல நீ டைம்ட்ராவல் பண்ணியா? எந்த வருசத்திலருந்து வந்த? ...2017ல இருந்து... ஓஹோ அப்ப நாளைக்கு காலைல என் வீட்டுக்குவா.. நான் உன்னை சேர்த்துக்குறேன் .. இந்தா என் கார்ட் .. உன்கிட்ட அந்தகாலத்து அதாவது உன் காலத்து வளர்ச்சி பற்றி நிறைய தெரிஞ்சிக்கனும் . என்று விரைந்தார்...
(முழு கதையும் வரும் 25 அன்று வெளியிட படும்.. அதுவரை காத்திருங்கள்..)
Post a Comment