பிரம்மாஸ்திரம் -2 சிறுகதை

துவாரக் என்ற தோட்டத்தின் மத்தியில் இருந்தது. சிலிக்கோனட் ஸ்டீலால் ஆன மாளிகை.. நவீனத்தின் சர்வ ரூபமாய் அந்த மாளிகை.. டிஜிட்டல் இந்தியா நினைத்தும் பார்க்காத நுழைவு வாயில்.. அங்குள்ள நானோ மீட்டரில் என் கை வைத்ததும் .. அதிலிருந்து ஒரு ப்ளூடூத் இயரிங் வந்தது.. ஒன்னுமில்ல மேப் கைடன்ஸ்க்கு தான்....

உள்ளே நுழையும் போது பவ்யமாய் என் லெட் கோட்டட் ஷூவை கழற்றி வைத்துவிட்டு மரியாதையுடன் நுழைந்தேன் .. என் கிருஷ்ணனை பார்க்க.. அதற்குள் ராதை எதிரில் வர.. வாங்க ராத் (செல்ல பெயர்) எங்க உங்க ஆத்துகார்.. டேய் காலையில உன்கிட்ட கிண்டல் படனும்னு விதி  சரி வா உட்கார்.. என்று அருகிலிருந்த ரிசெப்ஷன் ஹாலில் ஜிலெண்ட் சோபாவில் அமரசொன்னாள்.. கிருஷ்ணா நல்ல ப்ர்ண்ட் .. அதனால் ராத் நம்ம க்லோஸ் ப்ரண்ட்..

ராத், எப்படி தான் சின்னவயசுல இருந்து  அந்தாள மேய்கிறியோ ? நமக்கு இப்பவே கண்ணகட்டுது. அதிருகட்டும் இதென்ன சுடிதாரெல்லாம் புதுசா . ராதைனா எப்படி இருக்கனும் தெரியுமா? டேய் நீங்க மட்டும் ஜீன்ஸ்க்கு மாறலாம் நாங்க மாற கூடாதா? மாறலாம் ஆனா நாங்க பாவமில்லையா அந்த கொடுமைய பாக்குறதுக்கு.. டேய்.. இல்ல சும்மா சொன்னேன் நீ அழகாதான் இருக்க ராத். அவள் சிரிக்க... ஆக பொய் சொல்லி தான் சிரிக்கவைக்கனும் போல ராத் என்றேன்..

சரி எதாவது சாப்புடு.. இரு காபி எடுத்துட்டு வரேன்.. வேண்டாம் ராத்... ஏன்டா.. நீ என்ன பண்ற பால்ல சக்கர போட்டு அவல் போட்டு ஒரு கெலாக்ஸ் ரேஞ்சுல செய்து எடுத்துட்டுவா. அதுக்கு முன்னாடி எங்க அவன் .. யாருடா? ஆ உங்க அருமை லைப் பார்ட்னர்.. அவன் தான வர சொன்னான் ..

ஓ இப்ப போன்ல எல்லாம் பேசிக்கிறீங்களா ?.. எனக்கு உன்வாட்ஸ் அப் நம்பர் குடுத்துட்டு  போ.. எனக்கும் உங்க மாம்ஸ்கும் தான் இன்டர்காம் செஸ்ட்பிரேடர் இருக்கே போன் தேவையில்ல.. ஆனா உனக்கு எதுக்கு வாட்ஸ் அப் நம்பர் ? நீயும் எதுனா மொக்க போஸ்ட் அனுப்ப போறீயா?.. அதுல சில அறிவாளிங்க இருக்காங்க டிபி பச்சயா வெச்சா தமிழகமே பச்சபசேல்னு மாறும்னு நம்புறாங்க.. என்ன சொல்ல உன்ன மாதிரி சிலர் இருக்குறதும் சகஜம் தானே என்று சிரித்துகொண்டே சென்றாள்..

அடேய் கிருஷ்ணா எங்கடா இருக்க ? எனக்கு வேல இருக்குடா.. பட்டை தீற்றலாய் திருநீர் அணிந்து .. அந்த சோதிநிறை முகம் சிரித்தபடியே கையில் கற்பூர தட்டுடன் வந்து என்னை ஒற்றிகொள்ளும் படி சொன்னது. என்ன கிருஷ்ணா நீயே பட்டையடிச்சிட்ட வெளிய தெரிஞ்சா பெரிய சர்சையே வருமே.. டேய் நேத்து சிவராத்திரி இல்ல அதான் பூஜை முடிச்சிட்டு வரேன். பட்டையோ நாமமோ எனக்கு  பிரச்சனையில்லையே.. உனக்கு என்ன பிரச்சனை? ஆனா கடவுள் நீயே இன்னொரு கடவுளுக்கு பூஜை செய்றியே அதான்..

உண்மையில் அவன் தான் ஆதி கடவுள் அவன் சக்தியில் பிறந்த இன்னொரு.கடவுள் நான்... இப்படியே சொல்லி ஊர ஏமாத்து.. அதிருக்கட்டும் எதுக்கு வரசொன்ன?எனக்கு ஒரு பிரஸ்மீட் இருக்கு..

அதற்குள் ராத் அவல் உடன் வந்திட அவங்க ரொமா்ஸ் டைம். எனக்கு அவல் டைம்.. எல்லாம் அவன் சிசுபாலன சொல்லனும் .. ஏன்டா என்றால் ராத் .. எங்க ப்ரதர் அப்பவே உங்க ஹஸ்பண்ட்ட ஜெயிச்சிருந்தா இந்த ரொமான்ஸ்க்கு சான்ஸ்  இருந்துருக்குமா?.. என்றேன்.. ஏன் தம்பி நீ தான் சண்ட போட்டு ஜெயிச்சிடு உன் மாம்ஸ .. என்றாள் ராத்.. இவன ஜெயிக்கிற மாதிரி இருந்தா நான் ஏன் அவல் சாப்புட்டு இருக்க போறேன்...

சிரித்தான் கிருஷ்ணன்.. டேய் சிரிக்காதடா அவல் கூட மறந்துருவேன் . அதனால தான் ராத் இவன்கிட்ட விழுந்துட்டியோ? அவளும் வெட்கி சிரிக்க... என்ன விசயம் சொல்லுடா ப்ரஸ்மீட்க்கு போகலனா என்ன வேலையவிட்டு தூக்கிருவான்..

அதுவிசயமா தான் வரசொன்னேன்.. ப்ரஸ்மீட்ல வரபோறது அஸ்வத் .. அவன் கடவுள் ஆகனும்னு ஆசபட்டு மக்கள கொல்ற திட்டதோட வந்துருக்கான்.. அட உனக்கும் காம்பெடிஷனா ஜாலி ஜாலி.. டேய் நீ நேர்லயே போய் தெரிஞ்சிக்கோ உனக்கு போய் உபதேசம் பண்ணவந்தேன் பாரு.. சரிபோ நான் நேர்லயே பாத்துக்குறேன்.. டாட்டா.. டேய் சாப்புட்டு போடா.. என்றாள் ராத் இன்னிக்கி என்ன ஸ்பெசல் ராத்? சக்கரைபொங்கல்டா உனக்கு ரொம்ப புடிக்குமே.. போய்டு போனதரவ அப்படிதான் ஆசகாட்டி புளிசோறு குடுத்த... டேய் நிஜமா சக்கர பொங்கல் தாண்டா .. சரி வை வந்து சாப்புடுறன் அவனக்கு குடுக்காத .. தண்டனை அனுபவிக்கட்டும்... என்று வெளியே வந்து..

மீண்டும் லெட் கோட்டட் ஷீஸ் .. மறுபடியும் நுழைவுவாயிலில் அந்த ப்ளூடூத் இயரிங்க குடுத்துட்டு வந்துட்டேன்..

என்னடா மோகன்  இந்து பேப்பர் எப்புடி போகுது. அந்த டாக்கீஸ் காரன் நல்லா வாருறான் போல... ஆமா இதான அட்ரஸ்.. என்ன காலி கரவுன்டா இருக்கு.. கிரிக்கட் விளையாடலாமா?..

ஒரு ஒற்றை மனித உருவம் எங்களை எதிர்கொண்டு வந்தது.. இந்தாளாதான் இருக்கும் ஒருவேள வயலும் வாழ்வும்னு எதுனா சொல்ல போறானா!  வந்தவன் உட்கார சொன்னான் எங்க என்றேன் . புரிந்தவன் போல் கையசைத்தான் .. காலி கிரவுண்ட் மாளிகையானது எங்களுக்கு ஜென்னட் ரக சோபாக்கள் வந்தது அமரசொல்லி கையசைக்க எந்திரம் போல்  அமர்ந்தோம்.. எதிரிலவன் சற்றே மேடைபோல்  அமைந்த இடத்திற்கு ஏற அங்கே திடீரென சிம்மானசம் போன்றதொரு இருக்கை வந்தது...

ப்ரண்ட்ஸ் லைவ் போகலாமா? என்றான் ஒரு ட்ராண்ஸ்மிட்டரின் கரகர குரலுடன்.. உறைந்து போயிருக்கும நிருபர்கள் சிலைபோல சில்லிட்ட நேரம்.. என் பாக்கெட்டில் இருந்த மைக்ரோ ட்ராண்ஸ்மிட்டரை பார்த்தேன் .. அங்க கிருஷ்ணா ரொமாண்ஸ் டைம்ல என் பாக்கட்ல போட்டுட்டான் கேடி..அதை மாட்டிகொண்டு.. லேட்ஸ் கோ பார் அ லைவ் மிஸ்டர் .. என்றபடி நானேகேமரா பொசிஷனை செட் செய்தேன் ..

மிஸ்டர் இல்ல நான் கடவுள் . பவித்ரன் என்றான் எனக்கு தூக்கிவாரி போட்டது.. என்ன?  ... ஆமாம் பவித்ரன் நான் அஸ்வத் இந்த பிரபஞ்சத்தின் கடவுள்.. நான் கோபத்தின் உச்சிக்கே சென்றேன் அவனை அப்படியே தின்றுவிடலாமா என்றளவுக்கு.. மைக்ரோ போனில் கிருஷ்ணன் பொறுமைடா உன்ன நீ வெளிகாட்டிகாத உன் கடமையை செய் கர்மயோகியாய் நட..  மீண்டும் கேமரா ரோப் மெட்டில் செட் செய்து..

சொல்லுங்க அஸ்வத் இப்ப நாங்க லைவ்ல இருக்கோம்... மனிதஜந்துக்களுக்கு என வணக்கம் .. நான் தான் அஸ்வத் இந்த பிரபஞ்சத்தின் கடவுள்.. நீங்க எப்ப இருந்து அல்லது எப்படி கடவுளானீங்க அஸ்வத்..

சிம்பிள் என் பிரம்மாஸ்திரம் வேல செய்வதில இருந்து..  புரியல... மனிதஜந்துக்களுக்கு அது புரியாது.. புரியாத மாதிரி பேசினாதான் கடவுள்னு எதாவது விதிகள் உண்டா என்ன?.. என்ன எதிர்த்தா நான் உங்கள அழிச்சிருவேன் பவித்ரன்.. மைக்ரோ போனில் கிருஷ்ணன் பொறுமையாயிரு .. அவன் என்ன சொல்லவரான்னு தெரியனும்.. தெரியும் இரு...

சொல்லுங்க அஸ்வத்... எப்படி நீங்க கடவுள்னு சொல்றீங்க அப்படி என்ன உங்ககிட்ட சிறப்பா இருக்கு?.. சக்தி தான்.. ஓ.. அப்புறம்.. என்ன விளையாடுறீங்களா பவித்ரன்? இல்ல அஸ்வத் நான் கடவுள்னு ஏத்துக்கணும்னா நம்புற மாதிரி எதாவது சொல்லனும் நீங்க...

சொல்றேன்.. நீங்க இந்த மக்கள் என்ன கடவுளா ஏத்துக்கலனா அவங்க எல்லாரும் அழிஞ்சி போயிருவாங்க .. வர திங்கள் கிழமைக்குள்ள எல்லாரும் என்னை கடவுளா ஏத்துக்கனும்.. இல்ல என் பிரம்மாஸ்திரம் உங்களை அழிச்சிரும்.. நான் கிளம்புறேன் என்னை கடவுளாக ஏற்கும் உசிதமான முடிவுக்கு வாங்க.. என்று எழுந்து கிளம்பிட மேடை இறங்கியவுடன் மீண்டும் இந்த இடம் வெறும  காலி கிரவுண்டாக மாறியது..

அடேய் கிருஷ்ணா என்னடா இதெல்லாம்... நீ நேர்ல வா பேசிக்கலாம்.....

மீண்டும் அதே கடற்கரை எனது க்ளைக்கோ மீட்டர்  சிக்னல் காரணமாய் அலைகள் மேல் அந்தரத்தில் நுழைவுவாயில் தோன்றியது.. இம்முறை ப்ளூடூத் இயரிங் தேவையில்லை பழக்கபட்ட இடம் மேலும் மைக்ரோபோன் இருக்கிறது...

ராத் எங்க உன் புருசன்?... ஏன்டா மறுபடியும் மந்திரமா?... சீக்கிரம் சொல்லு ராத் பிரச்சனைல இருக்கேன்... அடேய் கண்ணா எங்கடா இருக்க... மேல வாடா.. என்றானவன்.. கூப்பிடுறார் போ .. அவ்வளவு தான் பிரச்சனை சால்வ் இது ஏன் பதட்டபடுற சுயநலவாதி.. என்றாள்.. ஏ ராத் பிரச்சனை எனக்கில்ல மனிதகுலத்துக்கு. உன் புருசனுக்கு நானாசுயநலவாதி.?... சரிங்க தியாகி.. போங்க.. வந்து பேசிக்கிறேன் இரு...

மேலே அவன் கேண்டிகிரஷ் விளையாடி கொண்டிருந்தான்.. கிருஷ்ணா.. எதாவது கீதோபதேசம்சொல்லு இல்லனா நான் மனமுடைந்து போவேன்... கேண்டி கிரஷ்ல கீதைனு கூட சொல்லு ..

கீதை எதுல வேணும்னாலும் சொல்லலாம்.. டேய் இன்னமும். ஸர்வ தர்மான் பரிச்யஜனு சொல்லிட்டு இருக்கமுடியாது.. காலம் மாறும் போது  நானும் மாறனும்இல்லனா என்னை வரலாற்றிலேயே விட்டுடுவாங்க..

சரிவா நீ செய்ய வேண்டிய காரியம்  இருக்கு.. நான் சொல்ல வேண்டிய கடமை இருக்கு..

என்ன சொல்லனும் சொல்லு...

உனக்கு  மகாபாரதம் முழுதா தெரியுமா?.. எனக்கு உன் கேரக்டர் வந்த பார்ட் மட்டும் தான் தெரியும்.. அது போதும்.. யுத்தம் முடிஞ்ச தருணத்தில் பாண்டவர்கள் வாரிசுகளை அஸ்வத்தாமன் கொன்றுவிடுகிறான்.. மேலும் அபிமன்யுவின் கருவை கொல்ல பிரம்மாஸ்திரம் ஏவினான்.. தெரியும் சொல்லு நீ பரிச்சித்த காப்பாத்துன.. ஆனால் அஸ்வத்தாமனை சிரஞ்சீவாயாய் என சபித்து சீதேனம் பெறுகி துன்பபடுவாய்னு சபித்து..

அவன் வாழ்ந்தான் சரி அதுக்கும் இப்ப என்ன சம்பந்தம்?... அதே அஸ்வத்தாமன் தான் அஸ்வத்... என்ன? அவனா ?அதே பிரம்மாஸ்திரமா?  ... சரி அப்ப நீ கொல்ல வேண்டியது தான?

முடியாதுடா அவன் காலம் கடந்துட்டான் நான் அவனை கருணை செய்து சாபத்தை திரும்ப பெறனும்.. ஆனா அவன் திருந்தல .. அதனால என்னால அவன காப்பத்தவும் முடியாது கொல்லவும் முடியாது... அவன நான் கொன்றால் என் காரியபந்தம் பாவம் செய்ததால் என் தூய்மை இழப்பேன்.. அதனால..

நான் அவன கொல்லனும் சரி ஆனா எப்படி?...

அங்கதான் சிக்கல் என் சாபம் பெற்றதால் அவனுக்கு பிரம்மாஸ்திரம்  பயன்படாது.. ஆனா அவன் எத பிரம்மாஸ்திரம்னு சொல்றானு தெரியல.. அதன் பலம் தெரியாம என்ன செய்வதுனு முடிவு செய்றது சிரமம்..

சரி நான் பாத்துக்குறேன் .. கண்டுபிடிக்கிறேன் ஆனா நான் ஒன்னும் அர்ஜீனன் மாதிரி வீரனெல்லாம் இல்ல.. அற்ப மனுசன்..

டேய் அர்ஜீனனா பிறக்கனும்னு இல்ல செய்யும் காரியம் உன்னை அர்ஜீனனா என்ன கிருஷ்ணனா கூட மாத்தும்.. போ நானிருக்கேன் ...

நீ இருப்ப.. உனக்கென்ன.. சரி போறேன்.. எனக்கு ஒரு வரம் தா.. என்ன வரம்?  ... நான் முடிச்சிட்டு வந்ததும் எனக்கும ஒரு கீதோபதேசம் சொல்லனும்... நிச்சயமா சொல்வேன்... கலிகாலத்துக்கு நீ தான் கீதோபதேச நாயகன்...

என்னமோசொல்ற.. போய்ட்டு வறேன்.. கீழே வந்தபோது.. ராத் எங்க பொங்கல்?.. எங்க?என்றாள்.. நீ தான தரேன்னு சொன்ன... அட சக்கர பொங்கலா  தரேன் இரு.. சாப்பிட்டு வந்தவன்நன்கு உறங்கினேன்..

காலை மீண்டும் அஸ்வத்திடம் பேச்சுவார்த்தை.. அவன் அடாவடிகாரன் தன்னை கடவுளாய் ஏற்கவேண்டும் என்று அடம்.. இல்ல உன்ன அழிச்சிருவேன் என்கிற டெம்பலேட் பதில்.. எப்படிடா அழிப்ப? என்றேன் ... பாக்கனுமா அதோ அந்த பார்கடை வாசலில் தள்ளாடும் அவனை பார்.. அவனை நான் அழிக்க போகிறேன் என்று தியானம் செய்வது போல அமர்ந்து சில நிமிடங்களில் பார் என்றான் .. அவன் கீழே விழுந்தான்.. நான் சென்று அவன் பல்ஸ் பார்க்க பார்ட்டி அவுட்.. எப்புடிடா? என்றேன் அதான் பிரம்மாஸ்திரம் அதுக்கு தான் என்னை கடவுளாக்க சொல்கிறேன்..

எங்க ஊர்ல கோயிலுக்கு பஞ்சமில்ல நடிகைக்கு கோயில் கட்டுனவங்க உனக்கு செய்ய மாட்டாங்களா.. ஆனா ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் நாங்க உன்ன கடவுளா ஏத்துகிட்டா என்ன செய்வ அதாவது பதிலுக்கு..

உங்க பிரச்சனை எல்லாம் தீர்க்கறேன் .. போன கடவுள் அதே தான் சொன்னார் செய்யல .. நீ மட்டும் என்ன செய்யபோற ... எலக்சன் வாக்குறுதி தான இதும்..

வேற என்ன செய்யனும்?... எங்களுக்கான ரிசோர்ஸ நீ பொது சொத்தா செய்வியா? ... அவ்வளவு தானா சில்ற விசயம்...  தம்பி அது சில்ற விசயமா இத செஞ்சா நாங்க ஏத்துபோம். ஆனா அவங்க எதிர்ப்பாங்க... நீ கடவுளாக முடியாது எங்க தலைவனாகலாம்...

சரி அப்ப எல்லாரையும் நான் அழிச்சிட்டு புதிய பூமிக்கு நானே கடவுளாக போகிறேன்... வரும் திங்கட்கிழமை உலகம் அழியும்...
என்றுகிளம்பிட்டான்...

கிருஷ்ணா எனக்கு நீ சில ரகசியம் சொல்லனும்.. என்ன ரகசியம்?.. பிரம்மாஸ்திரத்த பத்தி சொல்லனும்.. அது பிரம்மன் தரும் ஆயுதம் எய்ததும் வானேறி பிரம்மனின்அனுமதி பெற்று எய்தவன் சொன்ன இலக்கை அடையும். இடையில் யாராலும் தடுக்க முடியாது ...

ஆக பிரம்மன் பர்மிசன் வேணும்.. அவன் திங்கட்கிழமை பூமியை அழிக்கபோறேன்னு போய்டான்..என்ன பூமி மேல எய்தபோறானா? நடக்ககூடாது.. விடு அவன நானே கொன்னுடுறேன்..  இரு கிருஷ்ணா சாகும் நானே பயபடுல உனகென்ன பயம்..?..

பிரம்மாஸ்திரம் அவனுக்கு பயன்படாது தான... ஆம் நிச்சயமா?... ஆனா இன்னிக்கி அவன் ஒருத்தன என்கண் முன்னாடியே கொன்னுட்டான்.. கேட்டா பிரம்மாஸ்திரத்துல கொன்னேன்ங்கிறான்.. வாய்ப்பேயில்லை...

சரிவிடு வாய்ப்பில்லைனா .. பையன் மேஜிக் காட்டுறான்.. நீ சொல்லு கண்ணா.. வெளியுலக மாற்றங்கள் மனித யந்திரியங்களை மாற்றுமா? ..மாற்றும்டா அதனால் தான் சுக துக்க நினைவுகள் எல்லாம்... அது போதும்..

நாளைக்கு அவன் இருக்க மாட்டான்.. வரேன் ...ராத் நாளைக்கும் பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலா... சரிடா ... டேய் என்ன செய்ய போற என்றான் கண்ணன் .. கடவுள் தானடா கண்டுபிடி...

மறுநாள் காலை சுடசுட பொங்கல் .. ராத் இங்க முந்திரிக்கு பஞ்சமா ? ஏன்டா ? பின்ன ஒரு முந்திரி கூட இல்ல.. நான் மறந்துட்டேன்டா.. எங்க உன் ஊட்டுகார்.. ஏன்டா பூஜைல இருக்கார்... கடவுளே சாமி கும்பிடுது.. உருப்படியான வேளை..

வந்தவன் என்னடா ஆச்சி ராத்திரி முழுக்க தூக்கமில்ல .. யோசிச்சி யோசிச்சி.. பிரம்மன கேட்டு சிவன கேட்டு...எவனுக்கும் புரியல...

இந்த லட்சணத்துலநீங்க எல்லாம் கடவுள் வேற.. அவன் செத்து மூன்றமணி நேரமாகுது.. நீ என்னடா பண்ண.?... அதுவா

ஒன்னுமில்ல பையன் நம்மகிட்டயே சையின்ஸ் வச்சி விளையாடிருக்கான்... அதான் ரிவர்ஸ் சாட் பார்டி அவுட்.. டேய் தெளிவா சொல்லுடா.. சரிசரி.. அவன் ஒரு சாட்டிலைட் செஞ்சி அதுல கேமிக்கல்ஸ் வெச்சி துப்பாக்கி மாதிரி.. அதுல மக்கள் தொகை மொத்த டீட்டைலையும் உள்ள வச்சி அவர் இங்க இருந்து ஆப்பரேட்டர் வேல செய்றார் ... அந்த கெமிக்கல் யந்திரங்கள டேமேஜ் பண்ணி இறக்க வைக்குது... நான் ஹேக் பண்ணி அவனுக்கு யந்திரங்கள ஜாம் பண்ணி ப்ரீஷ் பண்ணிட்டேன்..அதான் செத்துட்டான்..

டேய் உன்ன அர்ஜீனன் மாதிரி நினைச்சேன்டா நான் .. நீ கிருஷ்ணனுக்கே வில்லன்டா...

அதவுடு .. இப்ப சொல்லு கேண்டி க்ரஷ் கீதை.. மனிதனும் கேண்டிகளை போலே 5 விதம்.. சிவப்பு ரஜஸ் என்னும் மிருக குணம்.. ஆரஞ்சு மிதமான ரஜஸ்.. நீலம்.. வித்வம் என்னும் விஷமகுணம்..பிங்க் என்பது தமஸ் என்னும் சமநிலைகுணம்.. பச்சை சத்வம் என்னும் இறைகுணம்..

எண்ணற்ற மனிதர்கள் பிறந்து பிறந்து மறிக்கின்றனர்..அவர்தம் குணங்களும் மறித்து பிறக்கின்றன.. சிலர் ஒன்றுபடுவதால் இனிமை மற்றும் பலம் பெறுகின்றனர் ஒரு சுகர் கேண்டி போல .. மேலும். தம் பலம் கொண்டமட்டும் உலகை மாற்ற நினைக்கின்றனர் அதில் தாமும் அழிந்து இன்னபிறரையும் அழிக்கின்றனர்.. சிலர் துறவு மேற்கொள்வதுபோல் நகராமல் எதனோடும் ஒன்றுபடாமல் இந்த உலகம் அடுத்த நிலை போகாமல் தடுக்கின்றனர்..

மேலும் சில விசித்திர குணங்கள் கொண்ட மனிதர்கள் தம் கடமையை கர்மயோகியாய் செய்வதால்.. கலர்பாம் போல ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.. இவையனைத்தையும் என் விருப்பபடி நான் நிகழ்த்துகிறேன்..

அடேய் கிருஷ்ணா.. நீ கடவுளே தாண்டா .. இப்படி நோகாம என்னவச்சி அஸ்வத்தாமன முடிச்சிட்ட... கேடி... ..

கீதோபதேசம் சொல்லனும்.. அத அப்புறம் கேட்கிறேன் இப்போதைக்கு  பொங்கல்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم