முட்டாள்கள் தினம்...

இந்த தினம் பலரால் ...சொல்ல போனால் சாதி மத தேச பேதமின்றி கொண்டாட படுகின்ற தினம்.. என் கேள்வியெல்லாம். முட்டாள்கள் தினமா? அல்லது முட்டாளாக்கும் தினமா? என்பதுதான்...

ஏதேனும் அபூர்வமான / நம்பதக்க விசயத்தை பொய்யாக சொல்லி ஏப்ரல் ஃபூல் என்று சிரிப்பவர்களை பார்த்து சிரிக்கிறேன் நான்..

இதில்கூட தாழ்த்தபட்டவர்களுக்குதான் இட ஒதுக்கீடு என்பது போல் பிறரை ஏமாற்றி முட்டாளாக்கி இந்த தினத்தை நீ கொண்டாடு என்பதில்.. ஜியாே வின் மாயமோ மோடியின் அலையோ நம்மில் இடைசெருகலாக இருப்பது நிதர்சனம்..

ஏமாறுபவர்களுக்கு தான் மூட்டாள்கள் தினம் . ஏமாற்றுபவர்களுக்கு தினம் ஒன்று இல்லை.. மற்றவர்களை நாம் முந்தி கொண்டு முட்டாளாக்க முயல்வதில் ஒரு தற்காப்பு உளவியல் இருக்கத்தான் செய்கிறது..

இதில் 60% பேர்கள் முட்டாள்கள் தினத்தின் தோற்ற வரலாற்றை அறியமாட்டார்.. கேட்டால் அது ஒரு கலெண்டர் பிரச்சனை என்பர்.. ஒன்றை சொல்லுங்கள். ரோம் மக்கள் ஏப்ரல் 1ல் புத்தாண்டை கொண்டாடியதில் என்ன பிழை உள்ளது?..

உலகமெங்கும் ஒரே புத்தாண்டை நிறுவுதல் உசிதம் தானா? இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் அறைநாள் வித்தியாசம் ஆயிற்றே!.. இன்றும் தெலுங்கு வருட பிறப்பு .. மார்ச்சில் வருகிறது.கொண்டாடபடுகிறது..

அந்நாட்டின் அரசன் என்கிற ரீதியில் மக்களின் கலாச்சாரத்தை மாற்ற அவனுக்கு அதிகாரம் உள்ளதா? அப்படியே ஆயினும் முட்டாள்கள் தினமென்று அறிவித்தன் பின்னணி என்ன?..

சரியான மாதத்தில் கொண்டாடபடாததால் முட்டாள்கள் தினமாக சொல்லபட்டால்
தமிழ் வருட பிறப்பு கூட ஏப்ரல் மாதம் தான். அதற்காக எம்மை முட்டாளாக்க முயல்வது ஏன்?.. சர்வதேச அளவில் ஆங்கில கலெண்டர்களை பயன்படுத்த செய்த யுக்திகளில் இதுவும் ஒன்று..

உண்மை முட்டாள்கள் தினம் என்று வைத்தால் .. முட்டாளாக நமை மாற்ற முயல்கிறார்கள் அல்லது அதை சொல்லி எதையோ பிரகடனம் செய்ய எத்தனிக்கிறார்கள்...

சரி ரோம் நாட்டில் மட்டுமே அறிவிக்கபட்ட முட்டாள்கள் தினம். சர்வதேச அளவிற்கு ஏன் மாறவேண்டும்..? அதன் தேவை என்ன? யாரேனும் எங்களை போன்ற முட்டாள்களுக்கு ஒரு தினம் வழங்குங்கள் என்று கேட்டனரா?

விடைகள் புரியும் வேலயில் தினங்கள் இல்லாது போகும்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم