அறிவொம் அறிவியல் - pi காரணம்..

வாட்ஸ் அப்ல் வந்த மெசேஜ் ஒன்று... அதே நிகழ்வு எனக்கும் நடந்திருக்கிறது... எனது பள்ளிபருவத்தில் .. நமக்கு எப்பவுமே கணக்கு ஆகாது சர்ச்சைகுள்ளான பகுதினு சொல்லிடலாம்.. 9 வகுப்பு கொஞ்சம் படிக்குற புள்ளையா இருந்த காலம்... அப்ப இன்டர்செக்ஷன் ஆப் பை.. Pi னு ஆரம்பகாலம்... அந்த காலத்துல கணக்கு இன்னும் விஸ்வரூப பிரச்சனையாக தெரிய ...

ஒரு நாள் .. ட்ரிக்னாமென்ட்ரில ஒரு கணக்கு sin cos னு கையெழுத்துக்கு காசுங்கிற மாதிரி இருக்கும்... அப்ப sinπ=3.14 நு ஒரு ஸ்டெப்.. முடிஞ்சது சோழி... வரிசையா சொல்லிட்டு வந்தாலே புரியாது திடீர்னு எங்கிருந்தோ 3.14 வந்தா .. பொறுமையின் சிகரம் தகர்ந்து  கேட்டே விட்டேன்...் மேடம்.. இப்ப இங்க எதுக்கு 3.14 வருது..?..

ஏன்னா pi=22/7 or 3.14 அதனாலதான்..

அது இருக்கட்டும்  இங்க எதுக்கு வரனும்?

அது பார்முலா மனப்பாடம் பண்ணிக்கோ...

ஏன் வந்ததுனு தெரியாம எதுக்குனு தெரியாம என்ன கணக்கு... அப்படிபாத்தா மொத்த கணக்கையும் மனப்பாடம் செய்யவேண்டியது தானே எதுக்கு போட்டு சொல்லி கொடுக்க க்ளாஸ் வேற...

நீ பேசிக் ஒழுங்கா படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... ஏனாதானோ னு பாஸ் ஆகி வந்துட்டு எங்க உயிர எடுக்க வேண்டியது மறுபடியும் 6வது க்ளாஸ்க்கே போனு என்ன 6வது வகுப்பில் அமர்த்தினர் அந்த நேரம் அது அறிவியல் பாடவேளை... முடிந்ததும் நேராக ஆசிரியர் அறைக்கு சென்று..

மேடம் ஒத்துக்குறேன் நான் பேசிக் படிக்கலதான் ... ஆனா நீங்க படிச்சீங்கள்ள சொல்லுங்க எதுக்கு பை வந்தது.. சரி இந்த கணக்குக்கு கூட வேண்டாம்.. ஆப்ட்ரால் ஒரு வட்டதோட சுற்றளவுக்காவது ஏன் பை வந்தது சொல்லுங்க... அனைத்து ஆசிரியர்கள் மத்தியில் கேட்டுவிட்டதால் அவர்கள் அவமானத்தால் என்னை தலைமை ஆசிரியர் அறையில் கொண்டு சென்று என்னை பள்ளியை விட்டு நீக்கும்படி வற்புறுத்திட...

தலைமை ஆசிரியர் என்னை பெற்றோர்களை அழைத்துவர சொன்னார்... சரிசார் நான் டிசிவாங்கிகிறேன்.. ஆனா என் கேள்வி பதில் சொல்லாதப்ப ... ஒரு 9வது மாணவன 6வது வகுப்புல உட்கார வெச்சப்ப.. ஏன் இப்ப கூட யாரும் பதில் சொல்லாதப்ப எதுக்காக ஸ்கூல் சொல்லுங்க?...

சமாளிக்க முடியாத தலைமை ஆசிரியர்இரண்டு மணி என்னை வெளியே நிற்கவத்துவிட ... தமிழ் ஆசிரியரும் ஆங்கில ஆசிரியரும் சிபாரிசு செய்து என்னை மீண்டும் வகுப்புக்கு அனுப்பிவிட... இன்றுமுதல் நான் கணிதபாடத்தினை கேட்பதேயில்லை..

பின்னொரு நாள் நண்பர் ஒருவருடன் லைப்ரரி சென்ற வேளையில் அவனது உறவுகாரர் என்று ஒருவர் அங்கிருக்க பேசிகொண்டிருக்கையில்... அவர் தான் படிக்கும்புத்தகத்தை பற்றி சொல்ல.. த அட்டிடூட் ஆப் பை என்கிற புத்தகமது..

ஏற்கனவே இந்த பையால் தோனிபட ப்ரகாஷ்ராஜ் போல கலேபரம் செய்த எனக்கு மீண்டும் அதே பை சலிப்பை தந்தது...

சார் நீங்க எந்த பை பத்தி வேணாலும் பேசுங்க ஆனா இந்த பை வேண்டாம் எனக்கு கணக்குனாலே கலவரம் தான்...

இல்லப்பா புரிஞ்சிகிட்டா கணக்கு ஈஸி தான் ... எங்க புரியவிடுறாங்க ஏதாவது கேட்டா அது பார்முலா னு சொல்லி.வாயடச்சறாங்க...

நீங்களே சொல்லுங்க சதுரத்துக்கு சுற்றளவு 4A  னா வட்டத்துக்கு மட்டும் ஏன் pi சம்பந்தமில்லாம வருது..?...

அட அதுதானா நீங்க ஸ்கூல் இங்கிலீஷ் மீடியமா?

பாத்தீங்களா நீங்களும் ... இங்கிலீஷ் தான் அதுக்கு என்ன இப்ப...

அப்ப வசதியா போச்சு.. Pi= point of intersection... அதாவது . சதுரத்துக்கு எதாவது ஒரு மூலைல தொடங்கி சுற்றி வரலாம்.. ஆனா வட்டத்துக்கு அப்படி மூலையில்ல இல்லையா.. அதனால நாம ஒரு இடத்தை புள்ளியா வச்சிகிட்டு . அதை சுற்றி வந்து அந்த புள்ளிய சேரும்போது.. சு்ற்று மடியுது.. ஆக அந்த புள்ளி பாயிண்ட் ஆப் இன்டர்செக்ஷன்..

அப்படி. ஒரு அலகுள்ள வட்டத்தின் சராசரி சுற்றளவு அதன் அலகின் 3.14 மடங்கு என்றபடி கணக்கிட படுகிறது... இப்ப 7 *3.14^= 21.98 ஏறதாழ 22 அதனால் 22/7 ...

அருமை உங்ககிட்ட விசயம் இருக்குனு.. விடைபெற்று வெளிய வந்தப்ப அட நம்பர் வாங்க மறந்துட்டேனே.. டேய் மச்சான் அவர் எங்கடா வேலை செய்றாரு .. அந்தாளு வெட்டியாதாண்டா இருக்கான் வேலை எதும் கிடைக்கலயாம்.. அவர் நம்பர் வாங்கிவைடா  நான் நாளைக்கு வரேன் என்று கிளம்பினேன்...

திறமையுள்ளவர்கள் எவருக்கும் இந்த உலகில் வாய்ப்புகள் வாய்ப்பதில்லை என்ன செய்வது அது இயற்கையின் கணக்கு போலும்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post