என்னில் உறையும் ஒரு பேரொளியின் விளம்பின்படி.... ஒற்றை சாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் விண்மீனாய்.. வாழும் வாழ்வுதான் எத்தனை போலியானது?.... கணம் தவறி விழந்தால் முடிகிறதா?.. இல்லை புதியதோர் ஆரம்பம் பெருகிறதோ?... யாரறிவார்....
என்ன வெங்கி ? இந்தபக்கம் வந்து ரொம்ப நாளாகுதே? ரொம்ப பிஸியோ என் ஆபிஸ் கூட மறந்துருச்சோ?...
எது இந்த ஸ்டேடியம் உன் ஆபிஸ் ஆ ? இத எப்ப வாங்குனீங்க?...
யாசர் பேச்சிலும் கனவினை கோட்டை கட்டினோம்... என்று பாட முயன்று நிறுத்திட...
ஆமாண்டா எல்லாமே ஒரு மேஜிக் மாதிரி இருக்கு இந்த 6 வருசம் நம்ம வாழ்க்கையையே புரட்டி போட்டுருச்சி...இதே இடத்துல ஆரம்பிச்சது தான் இன்னிக்கி மறுபடியும் சேர்ந்துருக்கோம்... என்ன அந்த துரோகி பிரபா இல்ல.. பரவாயில்ல... நமக்கே என்னவெல்லாம் பண்ணிட்டான்... ச்சே... என்று வெங்கி சொல்லிட...
நல்லது தீது நாமறியோம் .. நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக என்று பாரதியின் வரிகொண்டி என் பேச்சை துவங்கினேன் அதற்குள் கார்த்தி...
அண்ணா பாரதி வரிகள் ... மாயை னா எப்படி னா? எதாவது எக்ஸாம்பிள்... நீ நிற்பதுவே நடப்பதுவே கவிதை படி புரியும்.... என்றேன்...
அண்ணா எனக்கு ப்ராக்டிகலா சொல்லுங்க... டேய் கார்த்தி சில விசயம் வேதம் மாதிரி உணர்வதற்குதான் விளக்கமுடியாது ஒவ்வொரு மனதுக்கும் அது ஒரு மாதிரி .. இப்ப உனக்கு இந்த வேலை கிடைச்சு 5 வருசமாகுது மூணாவது கேஸ்ல கல்யாணம்... ஒரு வேளை அந்த கேஸ இவன் எடுக்காம விட்டுருந்தா ? எல்லாம் மாறிருக்கும் இல்லையா அததான் மாயை...
புரியவேயில்ல னா.. சரி பேசுவதால் பயனில்லை அனுபவத்தால் அறிவதே அறிவு ங்கிறது போல உனக்கு ப்ராக்டிக்கலா புரியவைக்கிறேன்...
இந்தா என்னோட இயர் போன்... இந்த செல்... ல உனக்கு வேணும்கிற பாட்ட ப்ளே லிஸ்ட்ல வெச்சிக்கோ.. வக்கீல் சார்..
புரியுது அது தான ? ஆமாம்...
கார்த்தி இந்த பைக்க எடுத்துக்காே ஆள் நடமாட்டம் குறைவா இருக்குற எடுத்துக்கு போ ஒரு மரத்தடியில நிறுத்திட்டு ப்ளே லிஸ்ட்ட பாடவிட்டு இயர் போன் போட்டுகிட்டு.. பெட்ரோல் டேங்க் திறந்து வாயால் பெட்ரோல் உறிஞ்சி விழுங்கு... எச்சில் துப்பிடு... ஒரு 3 மணி நேரம் கழிச்சி வா அதே கண்டினுவா செய்... போ...
அண்ணா நீங்க.. ? ஏன் எங்களுக்கு வழிதெரியாதா?.. அப்படியே போகும் போது தோசா கார்னர்ல ரெண்டு காளான் ரோஸ்ட் ரெண்டு ஆணியன் ரோஸ்ட் வாங்கி குடுத்துட்டு போ .. மாஸ்டர்கிட்ட எனக்குனு சொல்லு...
ஆனா அண்ணா இங்க டிபன் உள்ளவிட மாட்டாங்க... கார்த்தி உனக்கு இது புதுசு நாங்க இங்கயே வளர்ந்தவங்க அதோ அந்த கார்னர்ல உள்ள வரலாம் போ.. சரிண்ணா ....
வெங்கி நடந்தது எல்லாம் ஒருவித நன்மைக்குனே தோணுது சொல்லபோனா.. அவன் அப்படி பண்ணலனா நாம இப்படி பெரியாளாகிருக்க முடியுமா?....
சரிதான்டா காலம் ஒரு கணக்கு சரியா வெச்சிருக்கு. ஆமா எனக்கு ஒரு சந்தேகம் உன் கதைகள்ள அறைகுறையா நிக்குற நிஜமான கதைல என்னதான் கான்செப்ட்?..
அத இப்பவே சொல்லிட்டா சன்பன்ஸ் நோயிரும்.. அதனால ஒரு ஹின்ட் நம்ம மதன் சார் சாமி அண்ணா நல்லதம்பி எல்லாம் வராங்க...
சரி எனக்கு தெரிஞ்சிருச்சி .. சரி என் பர்ஸ்ட் கேஸ் அந்த நிவேதா கேஸ் எப்ப எழுத போற?
அது கடைசி வரைக்கும் எழுத போறதில்ல... ஏன்டா?... ஏற்கனவே நிறைய இருக்குடா எல்லாம் முடிஞ்சா எழுதலாம்... இதுவும் மெக்ஸிகன் சலவைக்காரி மாதிரி ஒரு சஸ்பன்ஸ் சில்றயா இருக்கட்டும்...
அதென்னவோ உன் பாடு.. எனக்கு எதுக்கு..?.. ஆனா கடவுளின் சரித்திரம் நல்லா வரும்னு நினைக்கிறேன்.. முதல் 4 எபிசோட் படிச்சேன் சம்திங் சீரியஸ்..
அதயும் மாத்த போறேன்டா ... நான் சொல்றத விட நடக்கிற மாதிரியே எழுதனும் அதுதான் படிக்கிறவங்கள படம் மாதிரி பீல் பண்ண வைக்கும்...
இந்த தோசை வாங்க போனவன் என்ன ஆனான்.. ?... வந்துட்டேன் வந்துட்டேன்... ஆனா ஆணியன் லேட் ஆகுமாம் .. அந்தாளு வெங்காயம் நறுக்க கோபபடுறான்...
என்ன ஒரு ஆணிய திமிர் அவனுக்கு... ஆணியன் ஆம்பிளைதான்னு சொல்லிட்டுவா அவன் கிட்ட....
அப்பவே சொல்லிட்டேன் னா.. இந்த மொக்க ஜோக்க ரசிக்கிற நிலைல அவன் இல்ல...
சரி ஆணியன் கேன்சல் பண்ணிடு போதும். நீ நேரா எங்க கடைக்கு போயிரு இப்ப அங்க யாரும் இருக்க மாட்டாங்க...
நல்லா ஞாபகம் இருக்கட்டும் எச்சில் வெளிய துப்பிரு...
சரிணா...
தோசையின் சுவை என் நாவின் சுவைநாடியை சுலேகித்திட என் செவி கேட்கும் பாடலில் இசையில் பிறந்ததம்மா விரகநாடகமே...
வக்கீல்சார் என்ன விட்டுல விட்டுருங்க... அப்ப கார்த்தி உன் வண்டி ? அவன நாளைக்கு பாத்துக்கலாம் இப்போதைக்கு வரமாட்டான் பெட்ரோல் பத்தி தெரியுல்ல கேன்சர் வந்தாலும் வரும் அவன் வர மாட்டான்... இப்ப தான் பிள்ளையார் சுழிபோட்டுறுக்கான் விடு...
ஈரம் படர்ந்த அந்த சாலையில் சிற்சில மழைத்துகள்கள் சாரலடிக்க இருண்டு கிடக்கும் வானம் தும்மி தொலையுது போல..
அதிகாலை 5 மணிக்கு அலாரம் அலர... நிறுத்த போனவனுக்கு கார்த்தி கால் செய்தது புரிய.. எடுத்து பேசினப்ப தான் புரிந்தது... விசயம் வேற மாதிரி போனது....
நீ ஆபீஸ் வா கார்த்தி... நான் வெங்கிய வர சொல்றேன்... அண்ணா அவரே இங்க தான் இருக்காரு எங்களால வெளிய நகர முடியல . சரி இரு நானே வரேன்...
5.55க்கு கடைக்கு சென்ற போது விவரம் தெரிந்தது... விசயம் என்னவென்றால்?...
கார்த்தி என்னாச்சு சொல்லு...
அண்ணா நீங்க சொன்ன மாதிரி பெட்ரோல் உறிஞ்சி கிட்டு இருந்தப்ப ... இந்த வண்டிக்குள்ள யாரோ இருந்தது மாதிரி இருந்தது. உடனே நான் ஆர்ட்ஸ் காலேஜ் போனேன்...
அங்க தான் பாஸ் வந்தாரு .. அவர்கிட்ட சொல்லிட அவரும் ட்ரை பண்ணி ரெண்டு பேரும் போதையேறி... இருந்தப்ப...
எங்க வண்டில யார்யாரோ உள்ள வந்து போகுற மாதிரி இருந்தது.. ஆரம்பத்துல நாங்க போதைலனு நினைச்சோம்.. ஆனா காலேஜ் பூரா நெறைய க்ராப்பிக்ஸ் மாதிரி .... திரும்புற பக்கம் எல்லாம் விதவிதமா தெரிய ஆரம்பிச்சது எங்க ரெண்டு பேருக்கும் அதே மாதிரி..
சரி அதுக்கும் நீங்க வீட்டுக்கு போகாததுக்கும் என்ன சம்பந்தம்?.. பிரச்சனையே அது தான்னா .. எங்கள அதுதுரத்த நாங்க இங்க வந்து மாட்டிக்கிட்டோம்... பாக்குற இடமெல்லாம் ஒருத்தனே ... ஒரு பக்கம் கிரிக்ட் விளையாட இன்னொரு பக்கம் சிலுவைய தூக்கிட்டு திரியிறான்.. எங்களுக்கு பைத்தியம் பிடிச்சது மாதிரி
புரியுதுடா இப்ப தெரியுதா மாயைனா என்னனு?..அண்ணா என்ன காப்பாத்துனா ....
விடு நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு.... பாட்டுல யார் ஞாபகம் எல்லாம் வந்தது?... இப்ப அதுவா முக்கியம்?..
உனக்கு ஒரு உண்மைய சொல்லட்டுமா இது எல்லாமே செட்டப் தான் அது ஹாலோகிராம் கவர் பண்ணிக்கிட்டு ... செய்யும் வித்தை விர்சுவல் ரியாலிட்டி...
என்னனா சொல்றீங்க... டேய் நான் பட்ட அவஸ்தை இப்ப உனக்கு... ஆனா அந்தாளு யாருனா?..
அவர் நம்ம ப்ரண்ட் தான் பேண்ட் ஆர்கெஸ்ட்ரா வச்சிகிட்டு சுத்திட்டு இருக்கார்...
அதெல்லாம் இருக்கட்டும் அண்ணா எல்ல்மே மாயை னா நாம ஏன் பொறக்கனும்...?..
உயிர்களே ... உயிர்களே ... இன்பத்தை தேடி தேடி தேகத்தில் வந்ததே....
Post a Comment