அஃதாவது இறைவன்

நாடும் ஏடும் ஏத்தும் ஒருவன்
நாளும் கோளும் நிகழ்ந்தும் ஒருவன்
மாலும் பிரமனும் அறியா பெரியன்
அண்ட பிண்டம் ஆக்குங் கரியன்...

நல்லின்பத் துன்பத்து உயரிய ஒரான்
நம்மன்பை துவக்க உள்ள பிரான்
வெல்லத் தினிக்கு வீங்கு தனலான்
உள்ளத்து உறையும் புயங்க பெருமான்

கண்ணப்ப தன்னப்பன் என்றிங்கு வந்து
எண்ணுப்ப தென்னப்பன் என்றெனை அருளி
விண்ணப்ப மண்ணிறங்கு எம்மயனை வாழ்த்தி
கண்ணொப்ப ஞானத்தால் களித்துள்ள தேற்றி

தீதொரு பாகாய் தீவினை அறுத்து
மேதொரு பாசங் கொண்டு புழுத்து
மேனிதனை பொய்யென பழித்து
ஏதொரு தீங்கிலாது என்னை காத்து. .

மாதொரு பாகனை மனமுவந்து பாடிட
மேதொரு மெய்யனே மெய்யுருகி ஆடிட
நோதகு செய்வினை தீர்த்தவன் ஆடிட
நாதகு ருநாதனவன் நட்டம் ஆடிட

பெய்மழை கருணையால் எம்மை ஆட்கொள
செய்தொரு சேவகம் செய்தெனை ஈர்த்திட
மெய்யுரை  ஞானமெலாம் தேவனே நின்றிட
மொய்த்திடு தேனீயாய் மனமுவப்ப கண்டனே..

எம்முன்னோர் வாழ்ந்திட நஞ்சுண்ட கண்டனே
எம்முன்னோர் நாடகங்  செய்தண்ட தொண்டனே..
நின்கண்ணார் காட்டி நீள்கழலுங்காட்டி
என்முன்னார் அறியா அருளையும் காட்டி

நின்புகழ் பாடுமென் அன்பினால் வாழ்த்தி
நின்னருள் கூடுமென் வன்புலால் போற்றி
தின்னிருளிலா பெருமயனே என்தமிழ் போற்றி
துண்ணிய துலகில் துணிவுடன் வாழ்கிறனே....

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post