காலப்பயணம்... சிறுகதை (மினி நாவல்)

ஹாலிடைன் கப்பைன் ஸ்டோர் லண்டனில் பிரிசித்தி பெற்ற குடிபானக்கடை (டாஸ்மார்க் இல்லை) . அங்கு பரிமாரப்படும் காபியானது சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலம்... சட்டென்றுஎன் கைப்பேசி அலர ஒருநிமிடம் திகிலடைந்து தான் போனேன்.. பின் அது சொல்லும் ரகசியம் கேட்ட காதில் ஒற்றி கொண்டிருந்த ப்ளூடூத் ஆன் செய்ய... சாமி அவர்கள் தான் ( என் முதலாளியின் நண்பர்) .. சொல்லுங்க சாமி என்ன விசயம்?..

நீ எங்க இருக்க? நான் ஹாலிடைன்ல ஒரு காபிக்காக காத்திருப்பு  போராட்டம் ஏன் சாமி?..

எத்தன தரவ சொல்லிருக்கேன் இப்படி தனியா விட்டுட்டு போகாதனு . பழக்கமில்லாத ஊர்ல இப்படி நீ பாட்டுக்கு ரூம் சாவிய தூக்கிட்டு போய்டினா?...

ரூம் சாவி வேணுமா அத முன்னயே சொல்லிருக்கலாம்.. லண்டன்ல ஐியோ ஆபர் கிடையாது நீங்க வளவளனு பேச...

டேய் எப்ப வர்ர?...
நீங்க வேணா வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டு ஒன்னா போலாம்... இங்க கொஞ்சம் ஜர்னல்ஸ் இருக்கு காபி எடுத்துட்டு போய் ஊர்ல ஒரு வருசத்துக்கு ஓட்டலாம்..

அது எங்க இருக்கு நான் எப்படி வரது.. நான்ரூம் கிட்ட இருக்கேன்...

ஒன்னுமில்ல சாமி நீங்க நேரா ப்ரின்ஸ் ரோட் வந்து அங்கயிருந்து மஞ்சள் நிற டாக்ஸி ஏறி ஹாலிடைன்னு சொல்லுங்க போதும்... ஒரு 85 டாலர் ஆகும் ..

சரி வரேன்..

சாமி என் பாஸ் மதனுடைய நெருங்கிய நண்பர் ரெண்டுபேருமே ஒரே ரூம்ல தங்கியிருக்காங்க.. முதல்முறை நான் வேலை கேட்டு போனபோது.. என்னப்பா  இங்க வந்துருக்க கம்ப்யூட்டர் படிப்பெல்லாம் படிச்சிருக்க வேற வேலை கிடைக்கலையா... கிடைச்சது சார் பட் பிடிக்கல.. நாளைக்கு இந்த வேலையும் பிடிக்கலனா?.. கிளம்பி வேற வேலைக்கு போயிருவேன் சார்.... உன்னபாத்தா இந்த வேலைக்கு சரிபட்டு வருவனு தோணலயே..

உங்க பேரு கூடதான் சு.சாமி நீங்க அவர் மாதிரி இல்லையே... யார் மாதிரி?. என்ன சார் சு.சாமி தெரியாம பத்திரக்கை ரிப்போட்டரா?.. டேய் எமகாதகன்டா நீ... இரு மதன்கிட்ட கேட்டுட்டுவரேன்.

மதனா பையன் பொழச்சிக்குவான்டா என்ன பண்ற ?... சரி சேர்த்துக்கலாம் எதாவது சிம்பிள் கேஸ் குடுத்துவிடு பாக்கலாம் பையன் எப்படினு...

வாங்க சாமி , மில்லிக்ரெயின் காபி சாப்பிடுறீங்களா இங்க ரொம்ப பேமஸ்..

சொல்லு அதையும் டேஸ்ட் பண்ணிடலாம்..

வெய்ட்டர் . ஒன் எப் எம்எல்.. அண்ட் எ மில்லிக்ரெயின் போத் பீ ஸ்ட்ராங்க்..

எஸ் சர் ஆஸ் யுவர் விஸ் என்றபடி அவன் நழுவினான்...

அது என்னடா எப்எம்எல்?.. பில்டர் மைண்டட் லிக்குவிபைட் காபி. சாமி... அதுவும் காபி தானா ... அப்புறம் எதுக்கு இந்த பந்தா?.. இந்த கடையில மொத்தம் 96 வகை காபி இருக்கு சாமி..

அவன் வெய்ட்டரா நாம வெய்ட்டரா தெரியல எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது?.. ஏன் சாமி 5 நிமிசத்துக்கே இப்படினா நான் நாலு மணி நேரமா வெய்ட் பண்றேன்...

வெய்ட்டர்  ஒன் மோர் மில்லிக்ரெயின் ப்ளிஸ் வித் லைட் ஜாக்கரி.. யுஸ் சர்.

அது யாருக்குடா ?... அதுவா அந்த கார்னர் டேபிள்ள.. ரிச்மண்ட் டால்ஸ் ஜர்னல் படாக்கிறாரே அவருக்கு ... அது யாருடா அதுக்குள்ள இந்த ஊர்ல ப்ரெண்ட் புடிச்சிட்டியா?.. என்ன நண்பன் சார் நீங்க ? மதன் கூடவா அடையாளம் தெரியல....

அட அவனா அது என்னமோ ஊருக்கே வரமாட்டேன்னு சொன்னான்.. சாமி என்ன வேவு பாக்க வந்துருக்காராம் ... ரகசியமா பாலோ பண்றாராமா..  அவனுக்கு எதுக்குடா இந்த வேலை?... நாம எடுத்துட்டு வந்த கேஸ் அப்படி சாமி...

இரு அவனயே கேட்டுட்டுவரேன்... வாடானு நான் கூப்டப்ப வரல இப்ப என்ன பூக்கூந்தலுக்கு வந்தானாம்... இருங்க சாமி அவர் நமக்கு தெரியாம பாலோ பன்றதா நெனச்சிக்கிட்டு இருக்கார்...

சர் டூ மில்லிக்ரெயின் அண்ட் ஒன் எப்எம்எல்... வெய்ட்ர் கேன்யூ ப்ளிஸ் சர்வ் திஸ் ஜாக்கரி ஒன் டூ தட் டேபிள்  பார் தட் ஜர்னல் ரீடிங் மேன்.. ஸ்யூர் வித் ப்ளசர் சர் .. தங்க்யூ...

வெல்கம் சர் ப்ளிஸ் டேக் யுவர் ட்ரிங்க் சர்.. ஹீம் யெட் ஐ வொண்ட் ஆர்டர்ட் எனிதிங் வெய்ட்டர்... யஸ் ஐ நோ சர்... பட் தட் பர்சன் ஆர்டர்ட் பார்யூ சர்...

எப்படிதான் கண்டுபிடிச்சானோ?.. ஹாய் பாஸ் ... சாமி இப்ப போய் கேளுங்க ஏன்னு... இரு வரேன்...

எப்எம்எல் காபி ஒரு நிகழ்தகவு ரீதியிலான சொர்க்கம்... அத்தனை சுகம்.. அதன் மெல்லிய சூடும் பெரும்பாலான குளிர்ச்சியும் அட என்னமாதிரி வித்தையிது... உண்மையில் சொர்க்கம் என்பது தான் என்ன?... பலர் பல விதமாக உருவகிக்கின்றனரே... ஆழ்ந்து யோசித்தால் சொர்க்கம் என்பது அனுபவிப்பதில் இருக்கிறது... ரசித்து அனுபவித்து சுகிக்கும் ஒரவன் நரகத்தையும் சொர்க்கமாய் கருதுகிறான்...

அட வந்த விசயத்தை மறந்துட்டேனே... உங்ககிட்ட முக்கியமா சொல்லவேண்டிய விசயம்... அதுக்கு தான இந்த கதையே உண்டானது... நான் ஏன் லண்டன் வரனும் தருமபுரியில் இருந்து லண்டனுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?.. அதுவுமில்லாம ஒரு அசிஸ்ட்டெண்ட் பாரின் வரனும்னு என்ன இருக்கு .. அதுல என் பாஸ் வேவு பாக்கும் படி என்ன நடந்திருக்கும்?... கேள்விகள் ஆயிரம் ஆனால் பதிலென்னவோ சொற்பம் தான்...

அதற்குள் அந்த பெரியவர் உடல்வாகில் 56வயது சொல்லாம்... உள்ளம் அத்தனை வயதில்லை ... முகம் முக்கால்வாசி உற்சாகத்தில் மிளிர்ந்தது.. மீத கால்வாசி நிர்பந்த பயம்..

மெலிர்ந்த புன்னகையுடன் உள்ளார்ந்த பார்வையுடன்.. என் எதிரில் அமர்ந்தார்.. பாஸ் மதனிடமிருந்து சாமி எழ முயல நான் மதன் சாரிடம் செய்கை காட்ட அவர் சாியை அங்கே அமரவைத்து பேசிக்கொண்டிருந்தார்...

நான் ஜாம புகழிசை கேட்டு ரசித்து தவிக்கும் தனிமை கொண்ட விரகதாபமெறிய பெண்ணினை போல்.. எப்எம்எல் காபியின் ஒவ்வொரு துளியின் அணுவையும் பிரித்து ரசித்து கொண்டிருந்தேன்...

அவர் வெய்ட்டர் கேன் ஐ கெட் எ ஐகான் டிலைட்... சூர் சார். என்க நான் வெய்ட்டர் ப்ளிஸ் கிவ்மீ ஒன் மோர் ஆன் திஸ்... யஸ் சர் ஹோப் யூ லவ்ட் ட்....

அந்த எதிர் இருந்த பெரியவர் என்னை என் செயலை அபூர்வமாக பார்த்து வெய்ட்டர் கேன் யூ ப்ளீஸ் கேன்சல் தட் ஐகான் டிலைட் ஐ லைக்டூ ஹேவ் திஸ் ஒன் என்று என்னை கைகாட்ட வெய்ட்டர் ஏற்றுகிளம்பிட...

அவர் என்னிடம் பேச முற்பட .. என்னை வேவு பார்க்க வந்த பாஸூக்கு ஆத்திரம் மேலிட அட அவனே பேச வரான் இவன் ஏன்டா  கண்டுக்க மாட்டேன்ங்கிறான்?.. சாமி அவன போய் ஒரு அறை விட்டுட்டு வரேன் இரு...

மதனா இரு அவன் ஏதோ சில்மிஷம்  பன்றான்.. லீவ்மீ அவுட் ங்கிறபுக் படிச்சிருக்கியா?.. அதுல ஜிலெண்ட் லைக்கர்கிட்ட ... லிட்டர் ஜோன்ஸ் பண்ணும் அதே வித்தை தான் அது கண்டுக்காம எதிரிலிருப்பவர வெறுப்பேத்தி அவர்கள ஒரு தாாழ்வு மனப்பான்மைக்கு தள்ளி ஈசியா வளைச்சிடலாம்... 

அட ஆமா நெற்பயிர் வளைதல் போல் அவள் நாணி எனை காணத பொழுதெல்லாம்... நான் பித்தனாகிறேன்னு ஒரு கவிதை...

எனக்கு அது கவிதையா தெரியல.. இதுக்கு அவனே தேவலாம் போல... சரி கவிதையா சொல்லட்டுமா?

சொல்லுபாக்கலாம்...

நெல்மணி சுமந்த பயிரென
நற்றவள் நாணி வளைந்திட
கண்மணி எனை காணாத
காலமெல்லாம் நான் பித்தனாகிய
பொழுதே...

சுமார்தான்...

ஹலோ லட் யூ லிசன் மீ .. ஹோ யா வாட் யூ நீட் மி டு டூ... பீ ஜஸ்ட் எ கான்வோ கம்பணி.. சூர் தமிழ் தான் எனக்கு தெரியும்... அட நீங்க தமிழா  நானும் தமிழ் தான் ... ஓஹோ உங்க பேரு நல்லதம்பி... அப்படியா.. நான் பவித்ரன்..

உங்களுக்கு சுஜாதா தெரியுமா?... யா எப்பவாவது படிப்பதுண்டு... ஆரம்பிச்சிடாண்டா அவன் இப்ப சுஜாதாவ பத்தி  யார்கேட்டா? என்றார் சாமி...

மிஸ்டர் நல்லதம்பிநீங்க  என்ன பன்றீங்க?... நானா இங்க ஒரு ரிசர்ச் இண்ஸ்டிடூட் ல ரஸ்சியன் எம்பசிக்காக வேல செய்றேன்... என்ன லண்டன்ல ரஸ்சியனக்கு வேல செய்றீங்களா புரியலயே....

சிம்பிள் ரஸ்சியாவுக்கு என்ன மாதிரி அறிவாளி தேூவபட்டது  .. அதே சமயம் லண்டனுக்கும் தேவைபட்டது... உங்களுக்கே தெரியும் ரஸ்சியாவும் அமெரிக்காவும் சக்காளத்தி சண்டகாரங்க.. அதனால அமெரிக்காவுக்கு தெரியாம இருக்க என்ன லண்டன்ல வேலசெய்ய வெச்சாங்க... அட ஆர்வமா இருக்கே.. அமெரிக்காவுக்கு தெரியகூடாத அளவுக்கு அப்படிஎன்ன வேலை உங்களுது.. மன்னிக்கனும் அத பத்தி நான் சொல்லகூடாது... அட அதிலென்ன பரவாயில்ல உங்களுக்கு வைரமுத்து புடிக்குமா?... தமிழ் பாட்டு எல்லாம் கேட்பீங்களா?... ரீசென்டா காலம் என் காதலி கேட்டீங்களா... ச்செ என்ன வரிங்க அது  செம்ம...

எல்லாம் கேட்டு சிரித்துகொண்டிருக்க எங்கள் நெருக்கம் உபரிக்க தொடங்குகிறதை உணர்கிறேன்.. அதற்குள் எப்எம்எல் வந்துவிட.. மீண்டும் அந்த சொர்க்கம் அடடா... இந்த நரசூஸ்  விளம்பரத்துல வர மாதிரி பேஷ் பேஷ் இததான் எதிர்பார்த்தேன் என்பது போல்... நல்லதம்பி அதை ஒரு சிப் குடித்துவிட்டு இதுல என்னங்க இருக்கு இப்படி ரசிக்கிற மாதிரி எதுவும் இல்லையே...

ஏன் சார் உங்களுக்கு காபி பழக்கமில்லையா? முதல்ல ரசிங்க சார் காபி குடிக்குறதையும் ஒரு காதலிகிட்ட லிப்லாக் செய்வது போல ரசிச்சு குடிங்க சார்.. அந்த சின்ன சின்ன இனிப்பும் கசப்பும் அப்படியே உடம்பு பூரா பரவி.ஒரு கஞ்சா மாதிரி போதையாவதை அனுபவிங்கசார்... ரசனை மட்டும் இல்லைனா சொர்க்கமே நரகம் தான் சார்...

என் வயசுக்கு இல்லாத அனுபவம்யா உனக்கு.. செம்மையா ரசிக்கிறபோ என்று இரண்டாவது சிப்பை முதல்முறையாக ரசிக்கிறார்.. யோவ் செம்ம பீல்யா எங்கயாஇருந்த இவ்ளோ நாளா... அட நான் தமிழ்நாட்டுலதாங்க இருந்தேன்... நீங்க மைலாப்பூர் பில்டர் காபி குடிச்சிருக்கீங்களா வாசனைக்கே போதையேறும்.. சாகும் போதுகூட ஒரு 3 காபி குடிச்சிட்டுதான் சாகனும்..

யோவ் என்னையா இப்படி ரசிக்கிற நீ வேணா பாரு உனக்கு வர பொண்டாட்டி கண்டிப்பா நல்லா சமைப்பா... எப்படி சார் சொல்றீங்க?.. ஒரு ரசிகன் கிடைச்சா எந்த விசயமும் தானா சிறந்ததாகிடும்.. இது விதியா..

அட இவன் என்னடா காபிய பத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருக்கான் டேய் மதனா இவனுக்கு காபில ஏதோ கலந்து கெடுத்துட்டாங்க போல... சாமி நீ பாரு அவன் வலைவிரிச்சிட்டு அந்தாள இழுத்துட்டு இருக்கான்.. முதல்ல நாமளும் காபிய ரசிச்சி குடிச்சிபாக்கலாம்டா..

சார் கேட்டதுக்கு பதிலே சொல்லல.. என்ன கேட்ட ...வைரமுத்து புடிக்குமா காலம் என் காதலி கேட்டுருக்கீங்களா...

கேட்டதில்ல ..ஆனா... அட.போங்க சார் என்ன மாதிரி வரி அத மிஸ் பண்ணிடீங்களே... அதனால என்ன இனிமே கேட்டுறலாம்.. சார் எல்லாத்தையும் அப்பப்ப அனுபவிச்சரணும் சார்.. இந்த காபிய எடுத்துகோங்களேன் சூடா இருந்தா குடிக்க முடியாது ஆறி போனா நல்லாருக்காது மீடியமா இருப்பதால தான இந்த டேஸ்டு... அதுபோல தான்...

ஆனா உண்மையிலேயே காலம் என் காதலி தான் தெரியுமா?.. ஏன் சர் காபி ரொம்ப வேலை செய்யுதோ?.. இல்லப்பா நிஐமா காலம் என்காதலி தான்.. நீ நம்புறியோ இல்லையோ இத கேளு... எனக்கும் யார்கிட்டயாவதுசொல்லனும்னு ஆசை ஆனா யாரும் நம்ப மாட்டாங்கனு சொல்லறது இல்ல... சொல்லுங்க ஆனா ஒரு தண்டனை இருக்கு ... என்ன? .. ரெண்டு பேரும் மில்லிக்ரெயின் சாப்பிடலாம்... தண்டனைனு சொன்ன ரெண்டுபேரும் சேர்ந்து அனுபவிக்கிறதா?... சர் உங்களுக்காக தண்டனை தான அனுபவிக்கலாம்...

வெயிட்டர் ரெண்டு மில்லிக்ரெயின் .. சர் .? தமிழ் விடாது... டூ மில்லிக்ரெயின்.. ஹோப் யூ அன்டர்டாண்ட்..

சொல்லுங்க சார் என்ன சொல்லுனும்?....

நான் நல்லதம்பி தமிழ்நாட்டுல பிறந்தவன்... என் 56 வயசுவரைக்கும் நல்லபடியா வாழ்ந்துட்டு இருந்தேன்... என் வாழ்க்கைல சில அதிசயம் நடந்தது ஒரே தினத்தில் எல்லா திருப்பங்களும் நிகழ்ந்தது அதுவும் ஜீலை 6 தேதியில் மட்டும்...

இன்ஸ்ட்ரஸ்டிங்... மேல சொல்லுங்க...

அப்படி எல்லாம் நிகழ்ந்ததால என்னுடைய 57 பிறந்தநாளான ஜீலை 6 எனக்கு ஒருவித படபடப்பும் இனம்புரியாத பயமும் தொற்றிகொள்ள.. எது நடந்தாலும் அது என்னோட முடியட்டும்னு சொல்லி காலைல கிளம்பினேன்...

ஏன் பயம் அப்படி என்ன நடந்துட போது?.

தெரியல ஆனா ஏதோ பெரிய விபரீதம் நடக்கும்னு உள்ளுக்குள்ள ஒரு உணர்வு.. அப்படி நான் கிளம்புனப்ப கொஞ்ச தூரம் நடந்து திரும்பிட ஒரு விண்கலம் பாறைமாதிரி உருளைல அங்கங்க செதுக்குன மாதிரி.. அது இரண்டா வெட்டினமாதிரி திறந்து... அதுக்குள்ள இருந்து  சில நடராஜ் பென்சில் மாதிரி வெளிய வர ...

சார் நம்புற மாதிரி சொல்லுங்க....

முழுசா கேளு ... அதுல ஒரு பென்சில் என்னிடம் பேசியது.. இந்த உலகமே அழியபோது இன்னும் பத்துநிமிசம்னு சொல்லிட்டு போச்சு... பின்ன திரும்ப வந்து என்னையும் கடத்திட்டு போச்சு...

ஆஹான் ... அப்புறம் எப்படி இங்க?....

நடந்த விசயம் அது தான் .... நான் போனது ஒரு டைம் மிஷின் விண்கலம்... அந்த பென்சில்கள் செய்தது என்ன தெரியுமா?.. பூமியின் சுழற்சிய வேக படுத்தினது... அதனால நாட்களும் வருடமும் வேகமா ஓடிசில நிமிடங்கள்ள 10 வருசம் முடிந்தது.. பின்ன அந்த பென்சில்கள் என்னை பூமியில் ரஷ்யாவில எறக்கிட ... அத ரஷ்ய சாட்டிலைட்களும் கேமராக்களும் படம்பிடித்ததால.. ரஷ்யா என்ன கைது பண்ணி ஆராய்ச்சி பண்ணாங்க ... நான் எவ்வளவோ சொல்லியும் அவங்க நானும் மனுசன்னு நம்பல பின்னாடி ஒருநாள் மீண்டும் அந்த பென்சில் கள் என்னிடம் வந்து பேசின ... ஆக நானும் காலபயணம் செஞ்சிருக்கேன்ல....

உண்மை தான் சார் உங்கள நான் ரொம்பவே பாராட்டனும்... (நான் மதனிடம் செய்கை செய்ய) பட் என்ன பன்றது நான் இப்ப உங்கள கைது பண்ண வேண்டியதா இருக்கு... எனக்கு இது முதல் கேஸ் கொஞ்சம் அடம்பிடிக்காம ஒத்துழைச்சா நல்லாயிருக்கும்.... மில்லிக்ரெயினின் கடைசிசிப்பை சிலாகித்த படி நானிருக்க மதனும் சிலலண்டன் காவலதிகாரிகளும் நல்லதம்பியை  கைது செய்தனர்...

எனது முதல்  கேஸ் முதல் வெற்றி... சாமி சார் இன்னொரு எப்எம்எல் சாப்டலாமா?... டேய் எப்படிடா இந்த கேஸ் உனக்கு கிடைச்சது.. கிடைச்சுதா.. நீங்க குடுத்தது தான்... நான் குடுத்தேனா ? ஆமா மதன் பாஸ் சொன்னப்ப ஒரு கவர் குடுத்தீங்களே.. அட அது ஒரு மிஸ்ஸிங் கேஸ் தானடா...  ஆமா சாமி... பட் நான் கவனிச்சது என்னனா... இரண்டுவருசத்துக்கு முன்னாடி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வந்த ஒருத்தர போன மாசம் காணம்னு வந்த கம்ப்ளெண்ட் தான்...

அப்ப நிஜமாவே அந்தாளு காலப்பயணம் செஞ்சான்ங்கிறியா..?... நிச்சயமா அதனால தான் ரஷ்யா இவரை முக்கியத்துவத்தோட நடத்துது... ஆனா என்ன ஆராய்ச்சினு தான் தெரியல...

ஒருவேளை பவி இப்படி இருக்குமோ?... அந்த பென்சில்கள பத்தி அவன் சொன்னத கவனிச்சியா ... அதுஎதோ காலத்த பூமியோட சுழற்சிய வேகபடுத்துறதுனு... யஸ் சாமி.சூப்பர் எனக்கு இப்ப தான் புரியுது...

பூமிய வேகபடுத்துனா ஆயுதம் இல்லாம எதிரிநாடுகளை சிதறடிக்கலாம்... ஏஅதுவுல்லாமபூமிய இஷ்டபடி திருப்ப முடியும்... தட்பவெப்ப நிலைய மாத்த முடியும்..அதனால நிறைய அழிவுகள் ஏற்படுத்த முடியும்....

அதெல்லாம் இருக்கட்டும் அவன எதுக்கு அரஸ்ட் பண்ணோம் ... காரணம்ஏதுமில்லையே... யார் சொன்னா சாமி இங்கிலாந்துக்குள்ள இருந்து ரஷ்யாவுக்கு செயல்படுறது எத்தனை குற்றம் ..அதுவுமில்லாம இயற்கையை அழிக்க முற்படும் ஆராய்ச்சி செய்துருக்கார்.. போதாதா..  என்ன பேமண்ட் இல்ல அந்த பேமிலிக்குசேர்த்திருந்தா ...

பிரச்சனையில்ல பவி... அதெல்லாம் டிடெக்டிவ் ரூல்ஸ் பாத்துக்கு மதன் பாத்துப்பான்... மதனா எப்படி டா அசிஸ்டெண்ட்.?... வெல்கம் டூ த டிடெக்டிவ் வேர்ல்ட் . பவி... என்றார் மதன்...

முதல் வெற்றி.. தான் இன்னும் இந்த கேஸ் முடிந்ததாய் தோன்றவில்லை... காலத்தால் எல்லாம் மாறும் மாற்ற நினைக்கும் நிகழ்வுகள் நிச்சயமாய் மாறுவதில்லை எல்லாம் மாயையே...(அடுத்த சிறுகதை மாயை)...

நன்றி...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post