சிவம் .. சிவம்

சடையுள்ளே நீர்கங்கை பொங்க..பொதிக மலை நிகராய்
சடையுடை தலைவனே...

மலையெங்கும் மந்திர பைரவம்
சிலையென்றே என்னும் மானுடம்
தலையென்றே சொல்லும் வேதம்..

ஒலியுமாகிய ஔியானே இசை
ராவண பிரிய தலைவனே திசை
யாவிலும் தெரியு ஒருவனே...

வேத நாத சப்த மௌனனே
தூல பாத சந்த ஆடலே
பாதி பார்வதி கொண்டனே

காள நந்தி வேல விநாயக தலைவனே
கால நந்த நீல கண்ட தொண்டனே..
ஏக தந்த பால அண்ட தந்தையே...

தர்ம கர்ம நீதி என்ற ரூபனே
அன்ப இன்ப கருணை சொரூபமே
பிரம்ம மால தேவர்கெல்லாம் ஈசனே..

சாம்ப நிற கரிய மேனியனே
சாந்த நித்திய ஞான அறியனே
ஆர சூர தீர வீர ருத்ரனே...

மாசற்ற ஈசனே
மாக்கடல் தேசனே
காத்தருளும் சிவனே...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post