பாற் கடல்தனை பெருமலை கடைந்து
ஏறு உடைதலைவன் நஞ்சுண்ட பின்
பொற் கலசமங்கை பொருளோடு வந்து
பெற்ற தோர்அமுத மென்பேன் நீயெனக்கு..
மணற் கரையும் கடற்கரையில்
மணல் நனைக்கு பெருமழையில்
நற் குடையுடை நெடுநடை
என்பேன் நானுனக்கு.
பால் வீதியிற் பிறந்து தோயுமொரு
பால் நிறஔி பொழியும் தேயாதொரு
பால் வெண்நில பரப்பில் தீராதொரு
பால் சோற்றுடன் நல்லாள் நீயெனக்கு..
மரங்கள் நிறைந்த மந்த கானகத்தில்
வரங்கள் பொழியும் நந்த வனத்தில்
தாவர வர்க்கத்துடன் கூவும் குயில்
சாளர மலரொத்த நளன் நானுனக்கு...
நதி நீரோடிட ருவி போல்
சதி செய்யுஞ் சகுனி போல்
விதவித ராக ராவணன் போல்
மொழியுங் தமிழ் நீயெனக்கு
நவ பாசான மாமருந்தாய்
தவ பாகான பெருவரமாய்
கன றெரியும் தீஞ்சுடராய்
கவி ஞனடி நானுனக்கு
Post a Comment