மழைத்துளி எந்தன் முழைத்துளியே
எந்த மேகத்தில் பிறந்தாயோ...
சிறுசிறுதாய் என்னில் பொழிவதற்கே
எந்த மோகத்தில் கரைந்தாயோ ...
உன் தூறலிலும் விழும் சாரலிலும் எந்தன்உயிர்பசி தீர்க்கவந்தாய்...
தாகமெல்லாம் ஒருபுறம் கிடக்க .. உந்தன்
தாக்கத்தில் ஏங்குகிறேன்..
எந்தன் உயிர்பசியே சில சிறுதுளிதான் அதை தூவிட வாராயோ.....
நேசத்திலும் அன்பு பாசத்திலும் என்மேல் பொிந்திட வருவாயோ..
நெஞ்சமெல்லாம் உனை வேண்டிடினும் எமை ஏய்த்திட நினைப்பாயோ...
பூமியின் மேல் ஒரு புல்வெளியாய்
உனை பருகிட காத்திருந்தேன்..
பூக்களென சிறு பொய்கையென
எனை துளைத்திட வருவாயோ..
இது சொர்க்கமா நரகமா உணர்வுகள் சொல்லவில்லை
நான் வாழ்ந்திடும் காலங்கள் யாவிலும் உன் வருகையை வேண்டி நின்றேன்
Post a Comment