இக்கட்டுரை ஒன்றை குறிக்கோளாய் கொண்டு எழுத படுகிறது... ஒவ்வொருவரும் நம் உடல் பற்றிய அடிப்படை அறிவை பெற வேண்டும் என்பதற்காக...
சரி உடல் பாங்கள் பற்றி பார்ப்போம்.. உடல் சித்த இலக்கியங்களின் படி சில பெரும் பகுதிகளாக பிரிக்க படுகிறது...
அகம்.. புறம்... கர்ம... ஞான... என்கிற இயந்திரங்களாக சொல்ல படுகின்றன...
கர்ம இயந்திரங்கள் 5 அவை.. இதயம் மூளை நுரையீரல் .. வயிறு பிறப்புறுப்பு...
ஞான இயந்திரங்கள் 5 .. மனம் கண் காது மூக்கு தோல் ஆகியன...
அகம் என்பது மனதின் உயிரின் செயல்பாடுகளும் அதன் நலமும்
புறம் என்பது உடல் ரீதியிலான ஆரோக்கியமும் அதன் செயல்களும்...
முதலில் நலம் என்பதும் ஆரோக்கியம் என்பதும் வேறு வேறு... அதை உணர வேண்டும்...
ஒரு மனிதன் நல்ல கட்டுமஸ்தான உடல் கொண்டுள்ளான் என்றால் அவன் ஆரோக்கியமாய் இருக்கிறான் என சொல்வீர்கள்... அவன் மனதளவிலும் நன்றாக இருந்தால் நலமாக இருக்கிறான் என்போம்...
முன்பெல்லாம் கடிதங்களில் நலம் நலமறிய அவா என்ற வாசகம் இருக்கும்... அதன் கேள்வி எல்லாம் மனதளவில் சந்தோசமாக இருக்கிறாயா? என்பதுதான்...
ஆக நலம் மனம் உயிர் சார்ந்தது ஆரோக்கியம் உடல் சார்ந்தது...
(தொடரும்)
إرسال تعليق