மாயை 2... சிறுகதை

வெங்கி உனக்கு இந்த மாந்திரீகத்து மேல நம்பிக்கை உண்டா?...

பெரும்பாலும் நம்பறது இல்ல ... அதால ஏதாவது நம்மை கிடைக்கும்னு நம்புறவங்கள தடுப்பதும் இல்ல...

இல்ல எனக்கு அது மேல ஒரு சந்தேகம்... யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சிக்கனும்...

என்ன சந்தேகம் சொல்லு அதுக்கு ஏத்த மாதிரி சொல்றேன்...

நேத்து ராத்திரி ஹரிஷ் வீட்டுல தங்கியிருந்தேன்.. தூங்கலாம்னு படுத்தும் பேசிட்டு இருந்தோம்...

கொஞ்ச நேரத்துல அவன் தூங்கிட்டான்.. எனக்கு தூக்கம் வரல...

பரண்ல எலி ஏறி இறங்குவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..

திடீரென உள்ளம் பதட்டபடுகிறது... பரண் ஏணிக்கு அடியில் ஓர் அமானுஷ்ய உருவம்... அதனிடம் ஒரு யூரியா பை மாதிரியான கோணிப்பை அதில் எதையோ நிரப்பி கொண்டிருந்தது...

நான் அந்த உருவத்தை வெறித்தபடி ஏதேதோ சிந்தனைகள்.. கோணிப்பை நிறைய தொடங்க... கவனித்து கொண்டே இருக்கிறேன்.. ஹரிஷ் மூச்சு தடுமாற துவங்கியது... நான் அவன் கையை இறுகபற்றி நாடி துடிப்பை உணர்கிறேன்... நிலையற்ற துடிப்பு.. நிமிடம் 140 என்னும் அதிக அழுத்த நிலை மறுநிமிடம் 60 என்னும் யோக நிலை... என்னதான் நடக்கிறது.?..

ஏதோ பிரச்சனை என்று புரிகிறது...
கொஞ்ச கொஞ்சமா ப்ரைன் ஸ்ட்ரோக் தாக்க ஆரம்பிக்கிறது அவனுக்கு.. அப்போது தான் மீண்டும் பார்க்கிறேன்... அந்த உருவம் அதன் கோணிபையில் கைவிட்டு துலாவுகிறது... நான் அவன் கையை இறுக பிடித்துக்கொண்டு அந்த அமானுஷ்ய உருவத்தை காண அது அந்த கோணிப்பைல இருந்து ஒரு மாவு பொம்மை மாதிரி எடுத்தது..

அதனை அதன் காதில் ஏதோ சொல்கிறது பின் அந்த பொம்மையை அசைக்க இங்கு ஹரீஸீம் அசைகிறான். எனக்கு குழப்பம் இந்த நவீன காலத்திலும் இது சாத்தியமா?.. ஆனால் ஆராய காலமில்லை ஹரிஷ் ஏதோ உளறுகிறான்... என்ன?

மாமா காப்பாத்து..என்ன காப்பாத்து.. அப்போது அந்த அமானுஷ்ய உருவம் அபபொம்மையிடம் ஏதோ சொல்ல அதை இங்கு ஹரிஷ் என்னிடம் சொல்கிறான்... அடுத்தது நீதான் .. இன்று இவனை பலியிட போகிறேன்... னு சொல்லிட்டு போயிருச்சி... அவன எப்படியாவது காப்பாத்தனும் அவன் என்கிட்ட எதுவுமே கேட்டதில்ல.. முதல்முறையா இப்படி கேட்டுருக்கான்..

ஆனா இந்த அளவு நடந்துருக்கு ஒரு டிடெக்டிவ் நீ .. காப்பாத்த முடியலங்கிற.. சரி உனக்கு இதுபத்தி தெரிஞ்சிக்க ஒரு ஆள் வேணும் அவ்வளவுதான... கரக்டான டைம்ல தான் வந்துருக்கு... எனக்கு ஒரு கேஸ் வந்தது.. ஒரு சாமியார் சார்புல வாதாடனுமாம்... அந்த ஆள நாம போய் பாக்கலாம் கேஸ் விசாரிக்கிற மாதிரி அப்படியே கேட்டு பாக்கலாம்.. அவருக்கு தெரிஞ்சா சொல்லட்டும் இல்ல அவருக்கு சரியான ஆள தெரிஞ்சிருக்கலாம்...

சூப்பர்டா .. வா போலாம்.. இப்பவே..

டேய் 10 மணிக்கு தான் சாமியார் வருவார்.. இப்ப மணி 7 தான் ஆகுது...

என்னாடா வக்கீல் நீ.. நாம அவர் கேஸ பத்தி பேசபோறோம்ஆபிஸ்ல போய் சொல்லுவங்களா.. வீட்டுக்கு போலாம்வா..

சரிவா.. இந்த சாவி.. கீழ பார்க்கிங்ல இருக்கு ஸ்கார்ப்பியோ... எடு போலாம்..

டேய் நான் இப்ப வண்டி ஓட்டுற நிலைமைல இல்ல.. டென்சன்ல இருக்கேன்..

அதான் நானிருக்கன்ல என்றுநுழைந்தான் கார்த்தி..

வாடா தெய்வமே.. வண்டிய எடு.. அவரசமா .. சாமியார் வீட்டுக்கு போகனும்..

அண்ணா போற வழியில நிவேதாவயும் கூட்டிட்டு போகலாம்னா. அவதான் சாமியார பாக்கனும்னு அடம்.. இந்த டைம்ல கேட்டத செய்யனும்னு சட்டம் வேற.

கார்த்தி அப்பாவாக போறீயாடா.?.. வக்கீல் சார் நீங்க எப்ப ஆகபோறீங்க.. ?

சாமியார்கிட்ட போறேன்ல ஆயிடுவேன்.. கார்த்தி அந்த க்ளப் ரோட்டுக்கு அடுத்த லெப்ட் எடுத்துக்கோ..

ஆமா வக்கீல்சார் வீட்டுல சொல்லிடீங்களா?.. சாமியார்து என்ன கேஸ்...?

அதுவா .. ஏதோ யாகம் பண்ணிருக்காரு பேருகூட ஏதோ கெட்டவார்த்தை மாதிரி இருக்கும்..யூடியூப் ல யாக வீடியோவ அப்லோட் பண்ணிருக்காரு.. அதுல மயில் அறுத்து அதோட ரத்தத்துல அரிசிய கலந்து ஒருமாதிரி கோரமா ஏதோ பண்ணிருக்கான் ப்ளூக்ராஸ் புகுந்துரச்சி...

ஏன்டா யூடியூப்ல போடுற அளவுக்கு லூசா இருக்கான் ..ஒருவேளை பக்தாளா இருப்பானோ.. வாங்க நிவேதா ஆண்டி..

என்ன அண்ணா அதுக்குள்ள ஆண்டி ங்கிறீங்க... ?

பின்ன அம்மா ஆக போறீங்க ஆண்டியில்லாம..

சதாசிவம் ரோடுல... இருக்குற மால்க்கு பக்கத்து சந்துல திரும்பி அரைகிலோமீட்டர் போகனும் அங்க என்ட்ரன்ஸ்ல ஜெய் மாருதி... திருஅஞ்சநேயம்னு ஒரு ஆர்ச் இருக்கும் ... அங்க தான்  வீடு... என்றால் நிவேதா..

நிறைய தரம் வந்துருக்க போலதே?. ஆமாண்ணா.. என் ஹாஸ்டல் ஆசிரமத்துக்கு பின்னாடி இருக்கு 12வது வரைக்கும் அங்கதான் படிச்சேன்.. எங்க பேமிலிக்கு சாமி நல்ல ப்ரண்ட் வெல்விசர்..

அப்ப நிவேதா மறுபடியும் நீ கோர்ட்க்கு வர வேண்டிருக்கும் போல... ஆமாண்ணா நான் தான் கேஸ் பாத்துக்குறேன்.. போன மாசம் நீங்க லண்டன் போயிருந்தப்ப தான் லாயர் ஆனேன்..

அட வாழ்த்துக்கள்.. எங்க ட்ரீட்?...

என் ட்ரீட் இருக்கட்டும் உங்க ட்ரீட் எங்க.. பார்க் ப்ளாசா ல னு சொன்னிங்க இன்னும் கூட்டிட்டு போகலயே?..

இந்த கேஸ் நீ ஜெயிச்சிட்டா கண்டிப்பா ட்ரீட் உண்டு...

என்னடா இது ஆசிரமமா சாப்ட்வேர் கம்பனியா இப்பிடி இருக்கு...

கார்த்தி நீ அந்த ஹாஸ்டல்ல வண்டி பார்க் பண்ணிட்டு வா.. நிவேதா நீதான் எங்கள கூட்டிட்டு போகனும்..

ஆனந்தநேயம்.. அச்சாமியின் பெயர்.. பெயருக்கு ஏற்ற உருவம் நன்கு பொழிவான முகம்.. வெள்ளை தாடி மட்டும் ஏதோ பஞ்சுமட்டாய் சாயலில் நீண்டிருக்க.. மெல்லிய புன்னகையில் சிந்தனையை கவர்கிறார்.. பாத்தா நல்லவர் போல தான் தெரியுது..

வணக்கம் சாமிஜி .. என்ற நிவேதா எங்களை அறிமுகபடுத்தி வைத்தாள்..

என் கேஸ நீ தான எடுக்குற இவங்க எதுக்கு.. ?

இல்லங்க சாமிஜி நாங்க நிவேதாவுக்கு உதவிக்காக வந்தோம்.. அதுவுமில்லாம நான் உங்க கிட்ட ஒரு சில சந்தேகம் கேட்கனும்..

ஓ தாராளமா கேட்கலாம்.. சாமிஜி நேத்துராத்திரி என்று துவங்கி நடந்ததை விவரித்து இதிலிருந்து மீள என்ன வழி என்றுவினவ..

சிரி்த்த அவர்.. இவ்வளவு தானா ?.. இது ஒரு பூச்சி வேலை மாதிரி.. யாரோ உங்கள பயமுறுத்த நடத்துற வேல.. சிம்பிள் அவர் விரும்பும் ஒருவர் அவரிடம் தைரியமாய் பேசி அந்த எண்ணத்திலிருந்து விடுபட வைக்கனும் அவ்வளவே...

சரி அந்த கேஸ் பத்தி சொல்லுங்க... எதுக்காக மயிலை கொன்னீங்க?..  அது நம்முடைய தேசிய விலங்காச்சே?..

எம்பளம் ஆப் இந்தியா ல காளை மாடு இருக்கும் தெரியுமா .. ஆனா இங்க மாட்டிறைச்சி தின்பதில்லையா?.. நான் மயிலை கொன்னது மருந்துக்கு.. உலகத்தின் நன்மைக்கு..

மருந்துக்கா?.. அதுக்கு எதுக்கு யாகம்.. ?.. அதுவுமில்லாம அத யூட்யூப்ல போட வேண்டிய அவசியம்?...

இந்த யாகத்துக்கு பேரு மயூரவிளம்பம்.. பச்சபுறா ரத்தம் பக்கவாதத்துக்கு உதவுற மாதிரி.. மயில் ரத்து கொக்குவளை நோய்க்கு மருந்து.. முன்னொரு காலத்துல அகத்தியர் தென்னாட்டுக்கு வந்தப்ப.. அங்கிருந்த மன்னனுக்கு இந்த நோய குணபடுத்த மயில் ரத்தம் பயன்படுத்தினார்..

பின்னொரு காலத்தில் தென் ஆப்பிரிக்க மக்களுக்கு பரவலா இந்த நோய் இருந்தப்ப போகர் இந்த யாகத்தின் மூலம் மொத்த மக்களுக்கும் குணபடுத்தினார்.. அதே தான் நானும் செய்றேன்...

சரி இந்த கேஸ நாங்க பாத்துக்குறோம்.. நாங்க சொல்லிதரத கோர்ட்ல சொன்னா போதும்.. சரி வரோம்..

வெளியே வரும்போது வக்கீல் வெங்கி .. நல்லா கத உடுறான்டா.. என்க அருகிருந்து நான் பொய் சொல்லலனு குரல் திரும்பி பார்த்தா அந்த கண்ணாடி அறைக்குள் சாமியார் இருந்தார் .. ஆனால் குரல் எங்கிருந்து வந்தது.. ?

என்கிட்ட இருந்துதான் என்கிற குரல் சாமியாருடையது நிவேதாவிடம் இருந்து வந்தது.. அதிர்ச்சி...

கார்த்தி எங்க?.. கார்த்தி ஏன்டா உள்ள வரல.. அண்ணா தயவு செஞ்சி வெளிய போயிடலாம் வாங்க..

காரில் ஏறி சதாசிவம் ரோட்டுல வந்து நிறுத்தின கார்த்தி அருகிலிருக்கும் கடையில் 4 அறைலிட்டர் கோக் வாங்கினான்.. ஏன்டா கார்த்தி நான் இப்ப கோக் நிறுத்திட்டேனே... உங்களுக்கு இல்லனா எனக்கு...

ஏன்டா படபடப்பா இருக்க.. என்னாச்சு?.

நிவேதா நீ  வெங்கி சார் கூட போய் கேஸ் ஹிண்ட்ஸ் பாரு .. நாங்க கௌதம் கிட்ட சார்ட் ரெடி பண்ணிட்டு வரோம்.. ..வெங்கி நீ வண்டிய எடுத்துட்டு போ அப்புறம் நான் கால் பன்றேன்..

முதல் பாட்டில் கோக் பாதி தீர்ந்திருக்க.. சொல்லு கார்த்தி என்னாச்சு..

அண்ணா கார் பார்க் பண்ணிட்டு சுத்தி வர சோம்பேறிதன பட்டு.. பின் வாசல் வழியா வந்தேன்.. அங்க ஒரு ரூம்க்குள்ள நுழைய ஒரு நீண்ட வரிசை.. அதுல ஹரிஷ்ச பாத்தேன்.. அவன்கிட்ட பேச போனா அவன் என்ன யாருன தெரியாத மாதிரி இருந்தான் ஒரு மாதிரி கம்ப்ளீட் கோமா மாதிரி இருந்தான்.. அந்த வரிசைல எல்லாரும் அதே மாதிரிதான் .. என்னதான் நடக்குதுனு பாக்க உள்ள போனேன் அங்க ஒரு எம் ஆர் ஜ ஸ்கானிங் மெஷின் மாதிரி அதுல படுக்கவச்சி . பக்கத்துல பிப்பட் டியூப் மாதிரி ரத்தம் இருந்தது லைட்டா பச்ச கலர்ல.. அத தலைல இன்ஜெக்ட் பண்ணிட்டா ஆளே பரோட்டா மாவுமாதிரி வெளுத்து போயிறான்..

ஹரிஷ் எதுக்கு அங்க வந்தான்?.. கார்த்தி உடனே நாம அங்க போகனும்.. எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது..

போலாம்ண்ணா ஆனா வண்டி?.. ராஜேஷ் வண்டி இருக்கா?.. இருக்குடா ஆனா பெட்ரோல் கம்மியாதான் இருக்கும்? என் இனம்டா நீ இங்க ஆசிமம் வரைக்கும் போய்ட்டு வருமா?

ஆசிரமத்துக்கு எதுக்கு வண்டி இதோ இந்த கதவுக்குள்ள போ ஒரு காம்ப்ளக்ஸ் தாண்டி ஆசிரமம்.. 500 அடி தான்..

சரி தாங்க்ஸ் டா ..

இது யாருடா ?..

என்ன ராஜேஷ் என்ன தெரியல .. நான் தான் உன்ன டிடெக்டிவ் ஆக்கினது..

சாரிபாஸ் கார்த்திக்கு விசயம் தெரியாதுனு தான் .. ராஜேஷ் எனக்கு ஹரிஷ் நல்லபடியா வேணும். 

வாங்க போலாம்..  கார்த்தி நான் உன்ன சாமிகிட்ட விட்டுட்டு ராஜேஷ் கால் பண்ணதும் வெளிய வந்துறுவேன்.. அதுவரைக்கும் சாமியார ஏதாவது அறுப்பு போட்டு பேசிகிட்டே இரு...  ஹரிஷ் என்னால மட்டும் தான் வருவான்..

சரிண்ணா..

டேய் ஹரிஷ் இங்க என்னடா பண்ற  என்னடா ஆச்சு உனக்கு ஏன் இப்படி பிரமை புடிச்ச மாதிரி இருக்க..?..

டேய் கார்த்தி அவன கூட்டிட்டு கோக் கடைல இரு அந்த சாமியார ஒரு கை பாத்துட்டு வரேன்.. 

டேய்..  ****** சாமியாராடா நீ.. ஏன் மாம்ஸ் திட்டுற?.. ஹரிஷ் குரல் சாமியாரிடம்..  சரி வேற வழியில தான் இத டீல் பண்ணனும்..

கழுத்திலிருந்த ருத்ராட்சமாலையை தொட்டு வணங்கி.. தியானத்தில் அமர்ந்தேன்... நெற்றி பொட்டின் பினியல் க்ளாண்ட் பொங்கிட .. என் டெலிபதி மூலம் சாமியாரின் மனதை கட்டுபடுத்தி இடமாற்றினேன்... ஓம் நம சிவாய...

சாமியாராடா நீ என்று அடித்து துவைக்க.. ஒரு நொடி தான் நான் கோக்கடையில் ஹரிஷூடன் இருந்தேன் .. ஓடி சென்று ஆசிரமத்தை பார்க்க .. அங்கு காலி ப்ளாட் விற்பனைக்கு என்று போர்ட் இருந்தது...


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم