தோழனே ஓ தோழனே..

தோழனே ஓ தோழனே
தோன்றுமிடம் தெரிகிறாய் உடனே இருப்பதால்  - நான்
தோற்கையில சிரிக்கிறாய் தோல்வியிற் சிறப்பாய்..

அன்பென சொல்கிறார் அகிலத்தார்
அடசண்டாளா என்கிற வார்த்தையும் அன்பானது - உன்னால்.
ஆகாதெனினும் அனுபவப்படவாவது என்று இழுக்கிறாய்..

வரும் வம்பெல்லாம் நம் சேட்டைகளே. - அதற்காக

 வரும் கம்பெல்லாம் நமை கண்டோடிய - காலம்      கொஞ்சமாய் கறையும் காதோர நறையுடன் சிரிப்போம்..

நாள்தோறும் நடையிடும் நமதெதிர்காலத்தில்
நாளுக்கொன்றாய் நினைவுகள் சேர்த்துவைப்போம் - ஒருவேளை
நாளைய தினமதில் பேச்சுக்கதைக்கு அது உதவும்..

கால்கடுக்க காலமே கடுக்க நிகழ்ந்தவை
காலங்காலத்துக்கும் நாம் சேர்க்கும் நினைவு அவை. - அதுவெல்லாம்
காலமொடுங்கும் தருணத்தில் பிள்ளைகள் ஒதுக்கியும்.
சிலிர்த்தபடி சிரிப்பதற்கான பொக்கிஷங்கள்.

உந்தன் பிரிவதை மனையாள்கூட
ஏற்றுவாழலாம். சேதி கேட்குமுன்னே - என்னுயிர்
சோதி நீங்கும் எனை

அழுவதேது இங்கு கைமாறுதனை
ஆற்றாமல் போவேனே அன்றி - உன்னிறப்பில்
அழுவதற்கு நானிலேன் உயிருடன்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم