கல்வி

அறிவதை அறிந்திட அளிப்பதாம் கல்வி
அறிந்தபின் பிறர்கும் பயனுளல்
வழியறியா போதிலும் வழியெனப் பலர்க்கு
வழிகாட்டி செலுத்துமாம் கல்வி.
பொன் அழிந்தும் பொருளழிந்தும் மற்றார்முன்
புகழ்பெற வேண்டுமே கல்வி.
நூலாடை போல்சிலர் தன்மானம் காக்குங்
நூலெனும் புத்தக கல்வி..
பேரின்பம் பயக்கும் பெரும்புகழ் உடன்வர
ஊட்டுமாம் கற்ற கல்வி.
வழக்கங்களும் சீர்திருத்தங்களும் நிகழ்தலின் காரணம்
வல்சிலர் தான்பெற்ற கல்வி..
வெற்றியை பயக்கும் தோல்வியிற் தாம்பெரும்
அனுபவமெனும் பட்டறிவும் கல்வி.
நோய்தரும் தீக்கிருமி தான்கருக வைத்தது
நேயமுள்ள  சிலரது கல்வி.
அச்சமதை துச்சமென ஆக்கியது எல்லாம்
அஞ்சுபவர் தான்கற்ற கல்வி
மிச்சமென யாவர்கும் இறுதிவரை நிற்பதெலாம்
எச்சமாய் தானறிந்த கல்வி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post