நிசப்த இரவின் நடுவே...
தனியறை புகுந்து தங்க சொன்னான்
கண்ணயரும் கண்ணாளன்
என் தேவை அறியா அறிஞன்.
ஆம் நானுறங்க அவனழுக்கு வாசம் வேண்டும்.
நல்வேளை நாதன் சட்டையை விட்டுச்சென்றான்.
தகித்திடும் தனிமை தீர சட்டையே துணை
அணிந்திவள் உறங்கிட பல்வேறு யோகாசனம் செய்தும்.
நித்திரை தேவதை நன்னை அணைத்திடவில்லை.
ஆம் நித்திரைக்கு நின்னருள் அணைக்கனும் போலவே.
எங்கனம் செல்லுவேன் எக்காரணம் சொல்வேன்.
அவனறை கதவிடம் ஆலோசனை கேட்டேன்.
அவன் மட்டும் உறங்குவானா அடுத்தறையில் நானிருப்பின்.
விழித்தவன் விளிப்பானாம் எனக்கொரு கேள்வி என்னே நடிப்பு.
விழியிருளில் நானணிந்தது தன் சட்டை என்பதை மறந்தானோ.
சட்டை பார்த்துமா புரியலை புத்தனுக்கு. அடேய் பித்தா.
அருகொரு இடம் கொடு என்றவன் மார்பில் படிந்தேன் இனியுறக்கம் இனிதுறக்கம்.
ஆயினும் காரணம் வேண்டுமே தேடியே இமைக்கும் என்னிமைகள்
வருடும் அவன் மார்பில் பயந்ததுபோல் காட்டும் என்னை.
கார்பதனை செயல்படவில்லை என்பதா? பிராணிகளை சிந்தைகுள் ஓட்டுகிறேன்.
இவ்விரவில் இடிமின்னல் ஏதுமில்லை? பயமென்றுசொல்ல பிராணிகளே சிறப்பு.
இளஞ்சிவப்பு ஹிட் அடித்திருப்பான் போல காரணத்திற்கு கரப்பான் இல்லை.
பரணோடும் எலி எண்ணத்தில் வந்துதித்தது உவந்தேன் சிவந்தேன்.
வாழி நீ எலி...
إرسال تعليق