#காதற்பதிகம்
துகளென் துணையால் துரும்பும் பெரிதாய்
அகலென் றவக்கால் அகன்றப் பிறகே
புகலென் றுறும்பூ புகுந்தப் பிறகென்
நகலென நகலின் நகலாய் பெரிதே!
அகலென் றவக்கால் அகன்றப் பிறகே
புகலென் றுறும்பூ புகுந்தப் பிறகென்
நகலென நகலின் நகலாய் பெரிதே!
இதயம் துடிக்கும் இதழ்கள் பிடிக்கும்
ரதமும் நடக்கும் ரதக்கால் உருளும்
சதமும் அடிக்கும் சதகம் படிக்கும்
எதற்கு விந்தை எதும்செய் மனமே...
ரதமும் நடக்கும் ரதக்கால் உருளும்
சதமும் அடிக்கும் சதகம் படிக்கும்
எதற்கு விந்தை எதும்செய் மனமே...
கணமென விளைத்தலைக் கணமென சுமக்கும்
ரணமென பிறிதொரு ரணமதில் சிரிக்கும்
குணமது தறிகெடக் குடையெனப் படுக்கும்
மணமது நிகழ்வரை மனமது வலிக்குமே
ரணமென பிறிதொரு ரணமதில் சிரிக்கும்
குணமது தறிகெடக் குடையெனப் படுக்கும்
மணமது நிகழ்வரை மனமது வலிக்குமே
துணைநீ வரும்திசை துயரம் குறையுது
இணையே புதுசுகம் இன்பம் தருகுது
மனையே மனதினில் மகிழ்வும் பெருகுது
கணையே தொடுப்பினும் கலிப்பே வருகுதே..
இணையே புதுசுகம் இன்பம் தருகுது
மனையே மனதினில் மகிழ்வும் பெருகுது
கணையே தொடுப்பினும் கலிப்பே வருகுதே..
புவியென பரப்பின் புரளும் கடல்யான்
கவியென சுரப்பின் வளையும் மொழியான்
முகிலென மிதப்பின் உரசும் காற்றான்
நதியென நடப்பின் நதிக்கரை நானே..
கவியென சுரப்பின் வளையும் மொழியான்
முகிலென மிதப்பின் உரசும் காற்றான்
நதியென நடப்பின் நதிக்கரை நானே..
புலியெனப் பயந்தும் புரவியில் பறப்பாய்
கிலியென நடுங்கி கிளர்ந்தெனை பிடிப்பாய்
கலிமுகஞ் சிரித்தும் களமென வதைப்பாய்
மலிவென எனையும் மடிப்பது அரிதே
கிலியென நடுங்கி கிளர்ந்தெனை பிடிப்பாய்
கலிமுகஞ் சிரித்தும் களமென வதைப்பாய்
மலிவென எனையும் மடிப்பது அரிதே
அளந்திட இயலா அகிலம் தானா
களப்புலி எனவா களமிது தானா
மளப்பது மனமா மதியிது தானா
முளப்பது கனவா முத்தம் தானே
களப்புலி எனவா களமிது தானா
மளப்பது மனமா மதியிது தானா
முளப்பது கனவா முத்தம் தானே
அகம்நீ புறத்தே அறிவும் நின்றன்
அழகும் பரிப்பும் அதிலும் என்றன்
பழகும் நெறியிற் பணிவும் ஒன்றன்
கழலென இருயிணைக் கரமென சேர்த்தே..
அழகும் பரிப்பும் அதிலும் என்றன்
பழகும் நெறியிற் பணிவும் ஒன்றன்
கழலென இருயிணைக் கரமென சேர்த்தே..
கவர்ந்திடு மழகை கவணென செலுத்த
உவர்ந்திடு மிதழை உவப்புடன் இணைக்க
நவரச முடைய நல்லழ கிழுக்க
தவஞ்செயு மெனக்கும் தருகணும் வரமே.
உவர்ந்திடு மிதழை உவப்புடன் இணைக்க
நவரச முடைய நல்லழ கிழுக்க
தவஞ்செயு மெனக்கும் தருகணும் வரமே.
அற்றை இரவில் அகலொளி முகத்தாள்
கற்றை சடையில் கணையினை தொடுத்தாள்
உற்றை கோபுரம் உளத்தில் பதித்தாள்
மற்றை யாவையும் மறந்தது விதியே..
கற்றை சடையில் கணையினை தொடுத்தாள்
உற்றை கோபுரம் உளத்தில் பதித்தாள்
மற்றை யாவையும் மறந்தது விதியே..
#காதற்பதிகம் நிறைவு..
விடையது தெரியாது விளக்கங்கள் புரியாது
நடைபோடு அதனோடு நம்மைப் பிழிந்து
மேடைபோடும் நாயகனை மேலும் வளர்த்து
பீடைசூழ் தேசமதில் பீற்றிக்கொள் வல்லரசே
நடைபோடு அதனோடு நம்மைப் பிழிந்து
மேடைபோடும் நாயகனை மேலும் வளர்த்து
பீடைசூழ் தேசமதில் பீற்றிக்கொள் வல்லரசே
நாளொன்று வருமதில் நாயகர்கள் யாம்
தூளொன்று கிளர்ந்து தூலகோபுரம் ஏறும்
மாளொமென வந்தபின்னே மாயாதந் தெண்ணம்.
வாளொடு வருகாயினும் சத்தியம் வெல்லுமே
தூளொன்று கிளர்ந்து தூலகோபுரம் ஏறும்
மாளொமென வந்தபின்னே மாயாதந் தெண்ணம்.
வாளொடு வருகாயினும் சத்தியம் வெல்லுமே
பேருக்கு ஆட்சி பேராண்மை போச்சு
ஊருக்கு சட்டம் ஊமசனம் கட்டும்
தேருக்கு ஆசை தேவாங்கு பட்டும்
நேருக்கு வர நேர்மை இல்லையே.
ஊருக்கு சட்டம் ஊமசனம் கட்டும்
தேருக்கு ஆசை தேவாங்கு பட்டும்
நேருக்கு வர நேர்மை இல்லையே.
வஞ்சமது செய்திடும் வஞ்சனையிலா அரசும்
நெஞ்சமது அறிந்தும் நெருடலுடன் துயிலும்
கொஞ்சமென ரோசமதை கொணர்க முயலும்
அஞ்சியதை தனக்குள்ளே அடக்கி விடுமே.
நெஞ்சமது அறிந்தும் நெருடலுடன் துயிலும்
கொஞ்சமென ரோசமதை கொணர்க முயலும்
அஞ்சியதை தனக்குள்ளே அடக்கி விடுமே.
பார்பிணி தீருமோ பயந்தவர் பூமியில்
நேர்துயர் குறையுமோ நேர்த்தியிலா புவியில்
வார்கடல் என்றெமை வாரிட வைத்து
நீட்டெழுது என்றெமை நீட்டாக வார்த்து
நோட்மாற் றெம்மை நோக்கி காத்து
நாட்டையு மேல்கொள் நல்லோர்க்கு போற்றியே
நேர்துயர் குறையுமோ நேர்த்தியிலா புவியில்
வார்கடல் என்றெமை வாரிட வைத்து
நீட்டெழுது என்றெமை நீட்டாக வார்த்து
நோட்மாற் றெம்மை நோக்கி காத்து
நாட்டையு மேல்கொள் நல்லோர்க்கு போற்றியே
إرسال تعليق