சந்தைக்கு -கவிப்போம்

நானும் சந்தைக்கு போனேன்
ஆயிரங்கள் செல்லுவதில்லை
ஆயினும் என்ன என்னிடம் அவ்வளவு இல்லை.

இருக்கும் ஐம்பதுக்கும்
அறுபது தேவைகள்
இருந்தும் பதினைந்திற்கு
மண்புழுக்கள் சில வாங்கிவந்தேன்.
என் வீட்டின் மொட்டைமாடி
முற்றத்தில் மண்குவித்து வைத்தேன்
மண்புழுக்களையும் வைத்தேன்
மறுநாள் காலை
மண்புழுக்கள் என் தனியறையில்
எனக்கே தெரியாமல் நானே எழுதிய கவிதைகளை
தின்று கழிவுகளாக்குகிறது
நாட்கள் கழிகிறது
என் தனியறை முழுதும் கவிதைகழிவுகள்
மற்றொரு நாள் பிரிதொரு கவிதை எழுதயெண்ணி.
தனியறை நுழைகையில்
பழங்கவிதைகளின் கொடிய நாற்றம்
மீண்டும் சந்தை செல்ல வேண்டும்
இந்த மண்புழுக்களையும் அதன் கவிதைகழிவுகளையும்
வந்தவிலைக்கு விற்கவேண்டும்
ஆம் பிரிதொரு கவிஞனுக்கு அவை உரமாக கூடும்.
அதன்பின்னே இனியென் கவிதைகளை எழுதிட வேண்டும்.
ஆம் இந்த கொடிய நாற்றத்திலிருந்து விடுதலை வேண்டும் .
என் மூளைக்கு என் பழமையிலிருந்து விடுதலை வேண்டும்
பின்னே புதிதாய் ஒரு புதுகவிதை  எழுதிட வேண்டும்

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم