தமிழிற்கு திருப்புகழ் 2.

ஏவினை நேர்விழி பாடலைக் கொண்டு....

ஏடினை நாடிய மாமுனி பாடிய
ஏகனும் விரும்பிடு - மொழியாகும்

வீணையும் யாழுடன் ஊதுநற் குழலொடு
பாடிட என்தமிழ் - இனிதாமே

மாமலை வாழ்ந்திடும் ஈசனும் வேலனும்
தான்வளர்த் தேத்திய - மொழிதானே.

மாநிலத் தாண்டிடு மாபெரும் மன்னரும்
மாபொருள் தந்திட - உவந்தாளே.

ஏவினை நேர்விழி பாடலைக் கொண்டு....

ஏடினை நாடிய மாமுனி பாடிய
ஏகனும் விரும்பிடு - மொழியாகும்

வீணையும் யாழுடன் ஊதுநற் குழலொடு
பாடிட என்தமிழ் - இனிதாமே

மாமலை வாழ்ந்திடும் ஈசனும் வேலனும்
தான்வளர்த் தேத்திய - மொழிதானே.

மாநிலத் தாண்டிடு மாபெரும் மன்னரும்
மாபொருள் தந்திட - உவந்தாளே.

பாவலர் பாடிட பாமரன் பேசிட
பாமலர் சூடிய - இளையோளே

நாடியர் நாவினில் கூடிய சொல்லிசை
நாதனை ஆண்டிடு - திருமொழியே

தேடியென் சிந்தையில் தேனமு தாகிய
தேன்மொழிச் சொல்லென - உறைவோளே..

பாவலர் பாடிட பாமரன் பேசிட
பாமலர் சூடிய - இளையோளே

நாடியர் நாவினில் கூடிய சொல்லிசை
நாதனை ஆண்டிடு - திருமொழியே

தேடியென் சிந்தையில் தேனமு தாகிய
தேன்மொழிச் சொல்லென - உறைவோளே..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post