ஏற்காடு சாரலில் ஏதேதோ கற்பனைகள்
ஏற்றாலும் என்னுள்ளே வெற்றிடமே - ஏற்றதென.
ஏற்பதெல்லாம் ஏனோயிங் கேறாதே நிற்பதால்
ஏற்றயிறக் கம்போல மாறிடுதே. - ஏற்பதோ
கற்பதோ எல்லாம் கரைந்து வழிகிறதே
நிற்பதோ என்னுள் நிலையின்றி - போற்றனைய
யாவும் பயனின்றி யானும் பயனிலாது
சாவும் நிலையொன்றை செய்கிறதே - தாவும்
குரங்கெனவே கூத்தாடி காலமதை போக்கவோ
கூரறிவை யான்பெறவே தானிலையே - சூரனோ
வாரனோ யாதென நல்குவேன் யானெனை
வீரமோ வாய்க்கலை வீணெனவே - தீரனென்
வாள்வழுக்க தீரஞ்சொல் வாய்வழுக்க நானெனை
வாள்கொண்டு வீழ்த்தலை யே
إرسال تعليق