இன்பமெழுது

.

வாடுமவர் தாமும் புன்னகை செய்யவே
நாடுமென் தாய்மொழியை வலியால்  வதைக்காது
கூடுவார் குழுமிட குறுங்கவி ஆகினும்
ஏடுமகிழ் நல்லதோர் இன்பமெழுது..

துன்பமுனைவீழ்த்திய பின்னும் சிரித்திட
வன்பகை சாய்த்த பின்னும் இனித்திட
என்னுயிர் பிரிகையில் நல்முறை யானுமே
இன்புற சாகவே இன்பமெழுது

எம்மக்கள் இன்பம் அறிகிலார் அவர்தம்
செவிகளை கொஞ்சம் கடன்வாங்கி கொஞ்சும்
தமிழினில் என்றன் கற்பனை தன்னை
சொல்லிடவே மனமே இன்பமெழுது

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم