ஆசிரியப்பா

அறுவராய் பிறந்து அன்னையும் அணைத்திட
அறுமுக மொன்றான ஆறுமுக கந்தனே
இறைவன் பெற்ற ஞானம்!
மறைப்பொருள் எனவந்த எம்தமிழ் குமரனே..
#நேரிசை_ஆசிரியப்பா..

தேவர்கள் துன்புறு வதைகண்டு காக்க
சீவகம் காட்டி காத்தகந்தா நீயும்
வீரமதை கொண்ட வேலுடன்
சூரவதை செய்த எங்கள் வேலனே.
#ஆசிரியத்துறை

வேலொடு விரைந்து சூர்பகை தனைவெல்
வேலவா திருமகள் மருகா ஈசனுக்கு
மந்திரப் பொருள் உரைத்த
சந்திர எழிலே பக்தருக்  கறிவே..




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم