துயில்கொள் மாலனே - viruttham

துயில்கொள் மாலனே துயரினை தீர்ப்பாய்
துயில்கொளா எனதவா துன்புருத்தும் வேளையில்
மயில்மழை கண்டுகொள் மகிழ்தனை போல்யான்
மையிட்ட வண்ணம் மருகுமுன் மொழிந்தே

ஆழியுறை கள்ளா ஆவலொடு வேண்டினேன்
ஊழிவரு போதில் உன்மனம் சேரவே
தாழியுடை வெண்ணை தானாய் கரைதல்போல்
வாழிகள் எங்கள் காலங் கரையவே

கார்முகி லன்ன கருந்தோல் கண்ணா
நார்மலர் சூடிய நங்கையை பாராயோ
தூர்வார் கேணியாய் தூரத்தூர நின்றன்
சீர்வாய் நினைவொன்றே நன்னை வாட்டுதே.

பாற்கடல் வாழுநின் பெருபுகழ் கண்டுயான்
காற்றதை தூதுசெய் காரியம் பிற்றலோ
ஊற்றுநீர் ஒன்றினை ஊடனுப்பி வைத்தேன்
சாற்றுவீர் என்துயர் நினைநிலை என்றே.

மார்கழி மன்னவா மயனுரு மாதவா
கார்குழல் தன்னையும் குழலாய் இசைக்கவா
மார்புடை பூக்களை மதுசூதனா மாற்றவா
சீர்மன மங்கையென் நல்மனம் ஏற்றே

வில்லேந்து ராமனே வில்லிபுத்தூர் மாலனே
சொல்லியே மையல்கொள் சொன்னவண்ணம் செய்து
மல்லிகை சரமாலை வந்தெனக்கு சூடிடு
அல்லிர வாயினும் அம்மண்ட பத்தே.


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم