உடுக்கை உடையோன்டி - ஏலங்கடி லேலோ
சங்கூதும் சங்கரன்டி - ஏலங்கடிலேலோ.
குன்றுபோல் சடையானடி - ஏலங்கடிலேலோ.
சடையணியாய் பிறையான்டி - ஏலங்கடிலேலோ
நெற்றியதிலே தனிக்கண்ணான்டி - ஏலங்கடிலேலோ
வெற்றிக்காளை வாகனமான்டி - ஏலங்கடிலேலோ
ஏகனான்டி அநேகனான்டி - ஏலங்கடிலேலோ.
உயிருக்கெல்லாம் உணவளிக்கும் ஈசனான்டி - ஏலங்கடிலேலோ
பசிதீர்க்கும் பிச்சாண்டியான்டி - ஏலங்கடிலேலோ.
அடியார்க்கே அடியானான்டி - ஏலங்கடிலேலோ.
மலையாண்டி மயானமான்டி - ஏலங்கடிலேலோ.
பரமனான்டி பிள்ளையான்டி -ஏலங்கடிலேலோ.
சோதியான்டி சொக்கனான்டி - ஏலங்கடிலேலோ.
சோதித்தாலே சொர்க்கமான்டி - ஏலங்கடிலேலோ
தினைகுத்தி பாடேன்டி - ஏலங்கடிலேலோ
திசைக்கூத்தன் பாரேன்டி - ஏலங்கடிலேலோ..
إرسال تعليق