மாண்டார் புகழ்பேசுவோம்
மாண்டு மண்ணாவாரைக்
கருத்தில் ஏற்றோம்
மானம் பலபேசுவோம்
மானத்தின் பொருள்
ஊழல் என்போம்
நாணிடு செயலென்போம்
நாணிடாது நாமதை செய்வோம்
கூனிக்கு அடுத்தோம்
அரசியல் நாற்றம் என்போம்
அந்நாற்றத்தை நாமே வளர்ப்போம்
தூய்மை தேசத்தோம்
சட்டமிட்டோம் பின்புலத்தே
சத்தமின்றி சாதித்துவிட்டோம்
சட்டத்தின்பால் வெள்ளையோம்
தேர்தலென்போம் ஓட்டிட்டு
தேர்வோம் என்போம் நோட்டுக்கு
தேர்ந்த தேர்தல் நாட்டோம்
தலைவன் என்போம் மரணித்தபின்
சிலை வைத்து சீரழிப்போம்
விடுமுறை விட்டு கடன்கழிப்போம்
மாநாடு என்று புகழ்வோம்
மாநாட்டுக்கு ரூபாய் கேட்போம்
மாநாட்டில் நீதிவுரையோம்
முதுகெலும்பு என்போம் அஃதின்றிக்
முன்னே கூனி நிற்போம்
தெருவெங்கும் பட்டதாரி என்போம் சோறுதானில்லை. என்போம்
சாதிக்கொரு அரசியல் திட்டமிடுவோம்
சர்சையை அதிலிருந்து வளர்போம்
நீதியென்று நூற்றாண்டுகளை இழப்போம்.
ஆகா நன்று நமகொற்றம்..
إرسال تعليق