நேசத்தேசம்

ஏய்த்து பிடுங்கன நரிகள் தந்திரமென்றன
ஏமாந்து போனக் குரங்குகள் வஞ்சமிெதென்றன
அழித்து தின்ற சிங்கங்கள் பசியென்றன
ஒட்டியுரிந்த உண்ணிகள் தேவையென்றன.
பார்த்து கிடந்த அணில்கள் இரவல்கேட்டன
கோர்த்து வந்த எலிகள் தாமாய்சுரண்டின.
விட்டுக்கொடுத்தால் அன்பு என்பனசில பைத்திய மென்பனசில.
விடாது எதிர்த்தால் புறம்பெனக் களையென
விலாவில் ஏறிநின்று மிதிக்கின்றன
எத்தனை தேவலோக காரியம் எனப்பொய்யுரைத்தால்
கொஞ்சி விளையாடலாம் குருவிகளோடு
எஞ்சி இருத்தலின் ஆகசிறந்த மார்க்கமிதே..
ஏனெனில் நாம் தேசத்தில் இருக்கிறோம்..
கானகத்தில் இல்லை. மிருகங்கள் நல்லவை..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post