கண்ணனும் கர்த்தரும் ஒன்றே...

மாலெனத் தோன்றி பெரும்போர் இயக்கிய
பாவம் தீர்க்கவே பல்லுயிர் காத்து
பாவங்களை ஏற்றுதாமே பலியாகி யுத்தரத்தங்களை
பாவங்களை தூய்மைசெய்து யுத்தமில்லா பாரினை
படைக்கவே கண்ணனும் வந்தான் ஏசுவாக.


மாயனெக் காட்ட திராட்சை ரசத்தை
மாயத்தால் வர வைத்தான் பின்னால்
நிகழவிருந்த யுத்தமதனை அறிந்திருந்தற் போலேயவன்
நிகழவிருந்த துரோகத்தையும் அறிந்து ஏற்றான்
ஏற்றதற்கும் கதையுண்டு விசயமும் உண்டு .


வேடன் எய்திய அம்பால் பிரிந்ததால்
பல்லுயிர் கொன்ற பாவம் தீராமையால்
பல்பேர் சேர்ந்து கொல்லும்வரம் வாங்கிவந்தான்.
தீமை சூழ் உலகில் ஞானியாய் இருந்தான்
காரணகர்தாவே பின்னாளில் கர்த்தராய் வந்தான்.
சிறையிற் பிறந்தவன் மேய்ப்பன் யாதவன்தானும்
பெத்தலகேம் தன்னின் தொழுவத்தில் பிறந்தானே.


மாரிக்கு பின்பிறந்தவன் மாதவன் ஆனவன்
மேரிக்கு தான்பிறந்தான் மாதவமும் புரிந்தான்
ஊருக்கு உபகாரியாய் உடனிருந்த கண்ணன்
ஊருக்கு உபதேசியாய் ஊக்குவித்த கர்த்தர்.


நாளும் இறைவனை வணங்கி வந்தகண்ணன்
சாவிலும் இறைவனை வேண்டிய கர்த்தர்
குருதியில் குளித்த வீரத்தின் தீர்வாய்
குருதியை சிந்திப் புவியினை தூய்வித்தானே..
யாவிலும் ஒன்றே கண்ணனும் கர்த்தரும்..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post