காதலின் காலம்

நாம் நட்ட அந்த வளர்ச்சியில்லா
நல்மரக்கன்று வளர்ந்து கனிதரும்வரை மட்டும் நாம் காதலிக்கலாம்..
இந்த தலையனைக்குள் இருக்கும்
இளவம்பஞ்சுகள் வெடித்து காற்றில்
மிதக்கும் மட்டும் நாம் காதலிக்கலாம்..

பிரபஞ்சவெளியில் பயணிக்கும் சூரியன்
தன் எல்லையை தொடும்வரை மட்டும்
நாம் காதல் செய்யலாம்..

இந்த முற்றத்து கூரையில்
முழுநிலவு வரும்வரை மட்டும்
நாம் காதல் செய்யலாம்....

அந்த வானத்தில் மீ்ண்டுமோர்
வால்முளைத்த நட்சத்திரம் வரும்வரை
மட்டும் நாம் காதலிக்கலாம்..

அக்கினிப் பந்தாம் பூமியின் மையப்புள்ளி
பனிப்பாறை யாகும்படி நாமும்
காதல் செய்யலாம்


முந்திசென்ற முன்னோர்கள் நம்மை
வந்துதழைக்கும் வரைமட்டும்
நாம் காதல் செய்யலாம்...
படைத்த அப்பகவன் அயர்ந்து
அழித்திடும் வரைமட்டும் நாம்
காதல் செய்யலாம்.



அன்பினிற் பிறந்ததால் இக்காதல்
அழியும் நாத்திகம்வரை மட்டும்
நாம் காதல் செய்யலாம்


நம் எலும்புகள் கரைந்து நீராகிடும்
வெம்மை வநதிடினும் அன்பே என்று
நாம் காதல் செய்யலாம்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post