முற்றாய் ஞானம் பிறந்தபின்
துணையாய் இருந்த போதியை
ஏங்கவிட்டு போனான் புத்தன்
அன்றே சொன்னது போதியும்
ஞானம் புத்தனால் களவாடபட்டதாய்..
புத்தன் மீதான முதல் பழி.
செல்லும் வழியில் ஞானியென புத்தன்
மலர்களிடம் பேசுகிறான் நீண்டிட்ட
பேச்சில் எழுகிறது கேள்விகள் சில.
பூவே நீயிந்த பிரபஞ்சத்தை அறிவாயோ..
அறிவேன் புத்தனே அதன் அரசியலையும்.
மலரே பேரண்டம் அழிவினையெண்ணி வருந்துவாயா?
இன்னும் இருதினமே வாழ்வேன் நானும்
பிரபஞ்ச அழிவினை பற்றியேன் கவலையுறவேண்டும்..
இருக்கும் வரை ஆனந்தமாய் வாழ்கிறேன்..
பதிலினை உணர்ந்த புத்தன் பிதற்றினான்.
போதி தன்னை ஏமாற்றி விட்டதாய்
அதுதந்த ஞானம் போலியென பழித்தான்.
மலர் சொன்னது மூடப் பித்தனே
ஞானம் அமைதியென அறியாமல் ஞானியோ?
புத்தன் மீது இரண்டாம் பழி
ஆழ்மனத்தில் அழிந்து கொண்டிருந்த முன்னாள்
புத்தன் சிரித்தான் தன்னை எண்ணி.
இனி சித்தார்த்தனுக்கு கிட்டியது ஞானம்..
Post a Comment