தேர்வாணையமே ஏனிந்த கொடுர யுக்தி..
ஏதோ ஒன்றிரண்டு எழுதிவிட்டு போவேனே...
ஏனிந்த வஞ்சகம் எதற்கிந்த சோதனை..
பழியோ பரிகாசமோ ஏளனமோ ஏய்ப்போ...
அமைதியான தேர்வறையில் அலைகிறாள் தேவதை.
வெளியேறச் சொல்லென் விடைத்தாள் பயனாகட்டும்
வெளியேறாவிடில்.. இதோ விடைத்தாள் முழுதும்
விழைவின் கவிதைகள் வேண்டாத வாசகங்கள்..
இறகும் கனமாய் இருக்குமென எண்ணியோ
சிறகினை விடுத்து படைத்தானோ பிரம்மன்.
அவனின் தொழில் நேர்த்திக்கு உதாரணமோ
அவனெனக்கு எழுதிய விதியெனும் ரம்மியவரியோ.
இடையில் ஆடையின் இடைவெளி காதலரைகூவலோ.
மேலேறும் விழிகளுக்கு மாதர்சங்கள் தடையிடும்
முகத்தினை காண தைரியமில்லை வீரனெக்கு
அகத்தினை அளித்தவள் அபயமாய் வந்திருந்தாள்
தேர்வெழுதி உருப்படு என்றபடி விடைத்தாளினை
தேர்வுக்கான பயில்வினை கெடுத்தவளே தருகிறாள்.
கேள்வி எதுவாயினென்ன தரப்போவது கவிதைகளே
நேர்வதென்ன மறுமுறை செப்டம்பர் தானே.
போர்வைக்குள் பயின்றவை தேர்வாணயத்திற்கு எதற்கு?
கோர்வையாய் சொல்கிறேன் சிரிக்கிறாள் சில்மிசக்காரி..
முன்றுமணி நேரமாய் நாங்கள் காதலின்
முப்பரிமாணத்தில் பயணித்திருந்தோம் சார்ந்தோருக்கு அனுதாபங்கள்..
Post a Comment