வசந்த கால குளம்பி..

கடந்த வருடம் இத்தனை ரசனையில்லை
நடந்து உலவ வணக்கம் சொல்லும்
மடந்தைகளை இப்போது புதிதாய் பணித்துள்ளனர்..

மந்தகாசம் என்கிறநிலை விவரிக்க இயலாதது
அந்திகால முன்னோட்டமாய் அறையிருள் மாலை..
முந்தி வந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்
பந்தி வைத்திருந்தவை ஒய்வுக்கு போயின..

மகரந்த சேவைசெய்து தேனுண்டிலையில் அயர்ந்ததேனீ
ஆண்த்துகள் பெற்றுகனியும் பெருமித மலர்கள்.
மொட்டுகளை தொட்டுதிறக்கும் மன்மத காற்று..
மெட்டுகளை சேர்க்கும் குயில்குருவி வண்டு.

இத்தனைக்கும் ஆதாரம் அடைக்கலம் நெடுமரம்
பெத்தவள்போல் தாயகம்  பேரன்புக் கடல்மரம்.
சித்திகளை சேர்த்துக் கொண்டகூட்டு குடும்பம்.
கத்திடா கீச்சுகள் நிறைந்த வனமரம்.

இந்த கண்ணாடி தடுப்பைத் தாண்ட
இந்த சமூக கவுரவம் அனுமதிக்கவில்லை.
மந்தகாசம் அனுபவிப்பதை பொறுக்காத அற்பசமூகம்.
சொந்தகாசை மறைத்துவிட்டு பிறர்செல்வத்தினால் பொறுமும்.

அதிகாரம் செய்து அடம்பிடித்து தாண்டினேன்.
சதிகார சூழல்விட்டு சிலநேரம் ஓய்ந்தேன்
மதிகார சமூகம் நேரத்துக்கு பணமிட்டது.
அதிகார வர்த்தகம் அளித்தால் அமரலாம்..

மண்வாசம் அறிந்திருப்பீர் முகில்வாசம் அறிவீரோ..
கண்தொலைவு பசுமையறிவீர் கலிப்புரு பசுமையறிவீரோ
முன்கோபக் குரங்கிடத்தில் பாசத்தை கண்டிருப்பீரோ
வன்தேக மரத்தின் வேரில் அமர்ந்திருந்தேன்

கையேந்திய குளம்பி மன்மதக் காற்றுத்தழுவல்
குயிலின் கீதோபதேசம் குருவியின் மழலைமொழி..
பையவீசும் இயற்கையின் இயல்பு வாசம்.
ஆகா என்கையில் தொலைவில் மரம்வெட்டுவோர்கள்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post