எழுதப்படாத கவிதைகள் - கேட்டினும்

அரிதாரமல்ல அடையாளமேஅழுக்கு பாசித்த
அமாவாசை வானம் தான்
பசிக்கும் பசிக்குமான இடைவெளித்  துயரம் மட்டுமே
இவ்வாழ்வின் நீட்சி
வயிற்றின் தேவைக்கு பின்தானே வயசின் தேவை
இங்கு அப்படி இல்லை.
பிணக்கும் போது தழுவும் நோய்களினும்
முகர்ந்து புசிக்கத் துடிக்கும் நாய்களினும்
பிழைத்து எஞ்சுவது என்பதே விடியல்
குளிக்கும் வசதிக்கு சாலையின் குட்டைகள்
குடிக்கும் வசதிக்கு ஓடும் சாக்கடை நதிகள்
பிணித்தே இனித்திட வலித்தே மறத்திட
மயிலறகை உணரா ஐடத்து தேகம்
அதனையும் பாலினத் தேவைக்கு புசிக்கும்
மிருகவதை தேசம்.
இத்தனைக்கும் பின்னே வாழ்கிறேன் .. என்றாள்
தெளிவான தெருவொர பைத்தியக்காரி ஒருத்தி
கேட்டினும் உண்டோர் உறுதி. இத்தேசத்தை அளவிடும் கோல்.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post