விரகதாபம் - நேரிசை ஆசிரியப்பா..

மாயவன் போலவன் மாயங்கள் செய்திலன்
தூயவன் போலவன் தூய்மையும் கொண்டிலன்
நேயத்தில் நேசத்தில் குறைவிலன்
காயத்தில் சிரிக்கும் காதலன் ஈடிலனே

நோன்பென வாழ்வினை நோற்கிறேன்  தனிமையில்
யான்படுந் துயரினை யாரிடமும் சொல்லேன்
ஊன்புசித்த உத்தமன்  ஊடலினை
தான்ரசிக்குங் கண்ணாளன் வான்விரவி வருவானே.

பசலைப் புசிக்கும் பைந்தொடி என்றன்
அசலைத் திருடியே அகன்றவன் வந்தால்
கசப்பும் இனிக்கும் கவர்ந்த
பசப்பும் மறையும் பலநோய் கறையுமே..
[ பெண்]...
............................................................


நகலாய் திரிகிறேன் நன்னை விடுத்து
அகன்றே வந்தேன் அயலில் வணிகம்
முகன்ற வளியில் முகமறிய
பகன்ற நாளிற்கு பாரே  உருள்கவே

மனத்தின் தோட்டத்தில் மலர்ந்த மணியே
வனத்தின் வாசத்தில் வடிவினை தேடி
கனத்த நினைவொடு முயங்கி
கனத்தைக் கடக்கிறேன் கண்களில் வாழ்கிறேனே..


முகிலின் வழியே முத்தம் தந்தாயென
முகிலினை கேட்டு முகம்வாடி போனேன்
முகிலது சிந்தினால் முத்தமிட்டு
முகிலினை குளிர்வித்தாய் என்றெண்ணி கொண்டேனே..
[ஆண்.]


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم