பேராழி தின்றும் முயன்று
போராடி நின்றத் தமிழினில் பிறந்துள்ளோம்.
போராடி நின்றத் தமிழினில் பிறந்துள்ளோம்.
தேகம் எல்லாம் கிளர்ந்து
தேசங்காத்த இந்தியாவில் பிறந்துள்ளோம்.
தேசங்காத்த இந்தியாவில் பிறந்துள்ளோம்.
வெயில் வதைக்கும் மழை தின்கும்
வேளாண் செய்யவில்லையா?
காரணம் பசி எவ்வம்..
வேளாண் செய்யவில்லையா?
காரணம் பசி எவ்வம்..
புயல் வீசும் கடல் கொல்லும்
உயிர் வாழ்ந்தால் அண்டை சுடும்
மீன்பிடிக்க வில்லையா ?
காரணம் வாழ்க்கை எவ்வம்..
உயிர் வாழ்ந்தால் அண்டை சுடும்
மீன்பிடிக்க வில்லையா ?
காரணம் வாழ்க்கை எவ்வம்..
சூழ் ஏசும் சுற்றம் பேசும்
தோற்றால் எவ்வும் முயன்றால் கவ்வும்
மீறி வந்துவிடு
காரணம் தோய்வு எவ்வம்.
தோற்றால் எவ்வும் முயன்றால் கவ்வும்
மீறி வந்துவிடு
காரணம் தோய்வு எவ்வம்.
கால் வலிக்கும் மூச்சு அடைக்கும்
உயிர் நிச்சயமில்லை பிள்ளை காத்திருக்குமென்று
தேசங் காக்கவில்லையா?
காரணம் தேசம் எவ்வம்.
உயிர் நிச்சயமில்லை பிள்ளை காத்திருக்குமென்று
தேசங் காக்கவில்லையா?
காரணம் தேசம் எவ்வம்.
பறவை எச்சத்திருந்து விழுந்த விதை
மழைவருமென எதிர்பார்ப்பதில்லை
தண்ணீர் ஊற்றுவாரில்லை வளரவில்லையா?
காரணம் முயலாமை எவ்வம்..
மழைவருமென எதிர்பார்ப்பதில்லை
தண்ணீர் ஊற்றுவாரில்லை வளரவில்லையா?
காரணம் முயலாமை எவ்வம்..
சோராதே தோய்வை சேராதே
ஓயாதே ஓய்ந்து மாயாதே
திட்டமிட்டு திறங்காட்டு
இல்லேல் சுற்றம் காட்டும் எவ்வம்..
ஓயாதே ஓய்ந்து மாயாதே
திட்டமிட்டு திறங்காட்டு
இல்லேல் சுற்றம் காட்டும் எவ்வம்..
#எவ்வம் - துன்பம் மானம் இழிவு வெறுப்பு. கவடம் தீராநோய்.
إرسال تعليق