எப்படி உன் முடிவு?..

நம் உதிரம் தோட்டாக்களை குளிப்பாட்டு வதற்கல்ல.
நம் வரிபணம் தோட்டக்காரன் மேய்வதற்கல்ல
நம் வாழ்க்கை போராடி அழிவதற்கல்ல
நம் இன்னுயிர் அரசியலுக்காய் இழப்பதற்கல்ல..
நெற்றிக்கண் திறந்து காக்க சிவனும் வரபோவதில்லை
பற்றிஎரித்திட காளிக்கு காலம் இனியும் வரப்போவதில்லை
சுற்றிபார் சூழலிது சூன்யம் தர்மத்திற்கு இடமில்லை
பற்றிப்பார் உன்சோதியில் உலகம் விடியலாம் சூரியன் தேவையில்லை..
தயங்கி தயங்கி சமாதனம் எங்குவந்தது..
முயங்கி முயங்கிதான் சுதந்திரம் இங்குவந்தது..
காளைக்கு மட்டுமல்ல பண்பாடு மட்டுமல்ல
நாளைவாழ சுற்றம் சூழல் சுத்தம் வேண்டும்..
எவனோ ஒருவனின் சட்டைப்பை நிரம்ப
எவனோ ஒருவன் நோய்வந்து சாகிறான் ?
எவனோ எவனோ போட்டிக்கு நானெதற்கு என்கிறாய்..
எவனோ உன்னடிமடியை பிடித்துவிடாமல் பார்த்துக்கொள்..
மிருக குணம் மட்டுமே பிழைக்கிறது  இங்கே
மிருகத்தில் மனிதனை தேடுவது மூடத்தனம்.
கருகும் இயற்கை கவிதையை காப்பாற்று..
நிலம் கெட்டால் நிலத்து நீர்கெடும்
நீர் கெட்டால் பயிர் கெடும்
பயிர் கெட்டால் உயிர்கள் கெடும்..
நிலத்தை கொன்றுவிட்டு செவ்வாயில் வாழப்போகிறாயா
அங்கும் அதிகார வர்க்கம் உன்னை ஆளும்
அங்கும் அதன் கஜானாவை நீநிரப்பி உயிர்வாழலாம்.
போராடு உலகை உலுக்கு
இல்லை உன்சவக்குழியில் உறங்கு...
எப்படி உன் முடிவு?..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم