விருத்தம் செய்ய விரும்பு

விருத்தம் தமிழில் நன்நெடிய இலக்கியங்களின் ஆக சிறந்த பாவகை.. படைப்பிற்கு சற்று இலகுவான வசதியான அமைப்பு இந்த விருத்த பாவகை. சமஸ்கிருதத்திலும் விருத்தகா என்றோ விருத் என்றோ இருப்பதாக தம்பி விவேக் தந்த கருத்து....

சரி விருத்தம் செய்ய விரும்பு என்ன சொல்ல போகிறது.. விருத்தப்பாவின் இலக்கணத்தை சொல்லபோகிறது.. அதனை எளிதுரைக்க இரு பெருங் கூறாய் பிரிக்கிறேன்..(நம் வசதிக்காகவே )

அடிப்படை...
அமைப்பு...

அடிப்படை செய்திகள் அல்லது அடிப்படை அறிதல் என்பது வழக்கம்போல்... அசை சீர் தளை ஆகியனவே..

அசை

ஆங்கில சிலபளும் அசையும் ஒன்றே

நேரசை :

ஒரு தனிக்குறில்
ஒரு குறில் + மெய்
ஒரு தனி நெடில்
ஒரு நெடில் + மெய்

நிரையசை..

இரு குறில்
இரு குறில் + மெய்
குறில்1+நெடில்1
குறில்+ நெடில் +மெய்

சீர் ..
ஈரசை சீர்
மாச்சீர்
நேர் + நேர் - தேமா
நிரை +நேர் - புளிமா

விளச்சீர்
தேர் + நிரை - கூவிளம்
நிரை நிரை - கருவிளம்

மூவசைச் சீர்
தேமா + நேர் - தேமாங்காய்
புளிமா + நேர் - புளிமாங்காய்
கருவிளம் + நேர் - கருவிளங்காய்
கூவிளம்+நேர் - கூவிளங்காய்..

தளை...

விருத்தப்பா எழுத வெண்டளை ஒன்றிய ஆசிரியத்தளை தெரிவது போதுமானது.. இருப்பினும் அனைத்து தளைகளும் கற்பது சிறப்பு..

வெண்டளை இரண்டு இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

ஒன்றிய ஆசிரிய தளை இரண்டு நேர் ஒன்றிய... நிரை ஒன்றிய....

அவைகளின் விதிகள் வரிசையாக

ஈரசை சீரினில் மாசீராக அமைத்தால் அடுத்த சீரானது  நிரையசை தன்னில் துவங்க வேண்டும்.. #இயற்சீர் வெண்டளை

ஈரசை சீரினில் விளச்சீராக அமைந்தால் அடுத்த சீரானது நேரசையில் துவங்க வேண்டும் .. #இயற்சீர் வெண்டளை.

மூவசை சீரில் காய்சீராக அமைந்தால் அடுத்த சீரானது நேரசையில் துவங்க வேண்டும்.. இது #வெண்சீர் வெண்டளை.

முன்சீரானது ஈரசை சீராகின்  நேரசையில் முடிகிறாகின் அடுத்த சீரானது நேரசையில் துவங்கிட வேண்டும்... #நேரொன்றிய ஆசிரிய தளை

முன்சீராக ஈரசை சீரானது நிரையசையில் முடிய அடுத்த சீரானது நிரையசையில் துவங்குதல் .. #நிரையொன்றிய ஆசிரிய தளை...

இவற்றுள் கலந்தபடி வரலாம்.. வெண்டளை நிறைய இருப்பது நல்லது..

#அமைப்பு

விருத்தம் வகைகள் பல.. அதன் ஒரு அடி சீரின் எண்ணிக்கை கொண்டு மாறும்..

பொதுவிலக்கணம்

நான்கு அடிகள் அமைந்திருக்க வேண்டும்.

நான்கு அடிகளுக்கும் முதற்சீர் எதுகை ஒன்றாக வர வேண்டும்

நான்கு அடியும் சம அளவில் இருக்க வேண்டும்..

பா முடிவானது ஏகார ஓசை கொண்டு முடிய வேண்டும்..
 
வகைகள் :

கலிவிருத்தம் :

    நான்கடி அடிக்கு நான்கு சீர்..

நெடிலடி ஆசிரிய விருத்தம் :
    
   நான்கடி அடிக்கு 5 சீர்

கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :
  
  நான்கடி அடிக்கு 6 சீர்...

அதற்கு மேல் சீர் எண்ணிக்கை குறிப்பிட்டு கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்பர்..

நெடிலடிக்கும் கழிநெடிலடிக்கும் வாய்பாடுகள் உண்டு... எழுதுபவர் வாய்பாடினை குறிப்பிடல் சிறப்பு..

நற்றமிழை நன்கறிந்து அத்தமிழை அழுகு செய்வோம்...

நன்றி..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم