இக்காலத்து மகாபாரதம் - கண்ணன் பிறந்தான்

பூமி விசித்திரங்களின் கிரகம் இன்னும் ம் அறியப்படாத ரகசியங்கள் கோடிக் கோடியாய் இருக்கிறது..  மனித இனம் அறிந்த நிலப்பரப்புகள் என்னவோ அதிகம்தான் .. அதில் அறிந்தும் அறியாமலும் இருக்கும் தீவுகள்.. ஆம் தீவுகள் லட்சங்கள் கோடிகள் பரந்து விரிந்துள்ளன.. 
சுமேரிய தீவுகளின் இறுதிக் கடைமடையில் இருந்து கடலில் மிதக்கும் தட்டுகள் போல சிற்சில தீவுகள் இன்றும் உண்டு.. அதில் சில தீவுத் தொகுதிகளை பன்னாட்டு ஆய்வு நிறுவனமும் பணம் படைத்த பெரு வணிகரும் தம் சொந்தமாக்கி வைத்துள்ளனர்.. அவற்றுள் அவர்கள் நுழைய முடியாத ஒரு தீவு அது..
மாயாபுரம் எனும் தீவு.. பெரும் தீவுக்கூட்டின் நடுவே கடல் சூழந்த ஒரு தீவு கூட்டம்.. வெளியிருக்கும் தீவிற்கும் மாயாபுரத்திற்கும் தரைமட்டம் சம அளவே இருந்தாலும்.  இடையிருக்கும் இந்தியப் பெருங்கடலின் சிறுதொகுதியின் ஆழம் சுமார் 2.5 கிலோ மீட்டர்..
மாயாபுரம் சில முக்கிய விசேஷ மாயங்களின் தீவு.. மாயாபுரத் தீவினில் நுழைந்தால்.. சாத்தியர் என்னும் வனவம்சத்தினர் வாழ்கின்றனர்.. இயற்கையாய் கிடைக்கும் உணவுகளை மட்டும் உண்டு வேளாண்மை அறியாத மக்கள்.. தொடர்ந்து செல்லச் செல்ல அவர்களின் எல்லையான மாயகிரி மலை வந்துவிடுகிறது.. மலைக்கு அப்பால் ஒரு தீவு உள்ளது.. மாயாபுரத்தின் மேற்கு எல்லை இந்த மாயகிரி.. மாயகிரி சற்று விசித்திரம் தான் தன் ஒருபக்க அடிவாரத்தில் நிலத்தையும் மறுபக்க அடிவாரத்தில் கடலையும் கொண்ட மலை அதுவரை பூகோளம் இப்படி ஒரு பகுதியினை அறிந்ததில்லை.. மாயகிரியை கடந்து கடலைத் தாண்டினால்.. முறவு என்னும் காடுகளால் நிறைந்த கிராமத் தீவு.. மக்கள், பசுக்கள் காளைகள் எருமை மற்றும் ஆடுகள் போன்றவற்றை மேய்ச்சலுக்கு விட்டு அவை தரும் பாலினைக் கொண்டு பிழைத்து வருகின்றனர். ..
இவர்கள் மேற்கு எல்லையான ஈக்கி மரங்கள் நிறைந்த வனத்தை கடந்தால்.. ஒரு சிறிய குன்று.. கந்தரம் என்று பெயர்.. குன்றினைக் கடந்தால் கோ - புரம் என்னும் கிராமம் காடுகளும் சமநிலமும் யாது எனும் நதியும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்..  மக்கள் யாதவர் என்று அறியப்பட்டனர்.. பசுக்களை மேய்ப்பது அவர்தம் பிழைப்பு. பசுக்களின் விருத்திக்கு முறவு கிராமத்து காளைகள் வரவழைக்கப்படும்...
கோ - புரத்தின் மேற்கு எல்லையான யவன நதியை கடந்தால். கோசலம் என்னும் தீவு.. கோசலத் தீவு நகரத்தின் முழுமையான ஆகிருதி பெற்று இருக்கிறது..  மன்னராட்சி.. கொண்ட தீவு.. எனினும்.. மக்களின் மனம் நிம்மதியாக இல்லை.. காரணம் மன்னனாக குடித்தலைவனாக இருக்கும் கம்சனின் அராஜக ஆட்சி.. சொந்த தேசத்து வீரர்களிடமிருந்தே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ... வரிகள் உயர்வு.. அசலுக்கு மேலான வரிகள்.. என எதிர்கால இந்தியாவைப் போலிருந்தது..
மன்னன்.. கம்சன் தனக்கு தங்கை இருக்கு .. அங்கை தனக்கு திருமணம் நடந்து அவளும் அவளின் அவரும் அடைப்பட்டனர் அண்ணனால் சிறையில்..
சிறைவாசம் என்றாலும் துணைவசம் இருப்பதால் வாசுதேவர்க்கு வசதிதான்.. ஆறு பிள்ளை பெற்றாளும்.. அடுத்த காலை இறந்துவிட  அண்ணனே அவற்றை கொன்றுவிட அயர்ந்து போனாள் அவன் தங்கை.. ஏழாம் கருவோ இடம்மாறியது ஏதோ தந்திரம் அரங்கேறியது..
எட்டாம் கருவாய் கருமேல் உயிராய் உற்றான் ஒருவன் திருவின் தலைவன்.. அந்திர வானம் மந்திரச் சொல்லை மாரியாய் பொழிய.. சுந்தர நயனம் புவியெங்கும் புலர.. வந்தவன் பிறந்தான் வளர்பிறை முகத்தான்.. சிறையில் மலர்ந்தான் இறை.. மழலையாய் பிறந்தான் மாதவன்..  அன்னை உள்ளமும்.. அப்பனின் மனமும்.. பருந்துக்கு பயந்த கோழியின் துடிப்பாய் துடித்தது இரண்டும்.. சிரித்தது சிசுவும்..
கோ-புரத் தீவில் ஓர் குடித் தலைவன் வாசுதேவன் தோழன் யசோதையின் கேள்வன் .. கோசலத்து சிறையில் கோவிந்தன் பிறந்த வேளையில் யசோதைக்கு பிறந்தாள்.. மாயையின் தலைவி மாரியின் தேவி. 
வருந்திய தந்தைக்கு வார்த்தை ஒன்று வந்தது.. தேவரில் ஒருவன் தூதுவனாகி சேதியை தந்தான் சேவகம் போலே.. சிசுமாற்றம் செய்யத் துணிந்தார் வசுதேவன்.
வசுதேவர்க் கிசைந்தாள் சிசுபெற்றவள்..
தோள் சுமந்து தொலைவு கடந்து யவனநதிக்கு வந்தார் வாசுதேவன்.. பாலகனாய் இருக்கும் பாற்கடலோனை நீர்கடல் சேரும் யவனநதி பாதம் தொட கொந்தளிக்க.. பவளத்திரு பாதம் பட்டு பரவசத்தால் பிளவுபட்டது நதி துரதப்பட்டது பயணம்...
கோபுரத் தீவில் சூழ்ந்த நள்ளிருளில் மாறின சிசுக்கள்.. சிறைபுகுந்தாள் சிசுவாய் மாரி.. அவள் உயிர் பறிக்க விரைந்தான் கம்சன்.. அவனது ஆவலனைத்தும் தொம்சம்.. ஆரம்பம் ஆனது அரக்கனின் மரணப் பயணம்..
கோபுரத்தே விடிந்தது கோசலத்து கதிரவன்.. கோபாலனாய் கோவிந்தனாய்..  லீலைகளில் லயித்தது கோபுரத்தீவு.. இந்நாளில் அவன் யாதவதேவு..
கோபியர் உள்ளம் கொண்டாடும் பிள்ளை.. கோபாலன் இவனால் வெண்ணைக்கு தொல்லை... நண்பர்கள் என்றும் சூழ்ந்திடும் கிள்ளை..
ஆலிலை மேலே மலர்ந்த மலரவன்.. தன்தலை மேலே மயிலிறகு கொண்டவன். வெண்ணெய் திருடும் எங்கள் கள்வன்.. கண்ணை கவரும் வண்ணக் கண்ணன்.. குழலை ஊதும் மழலை செல்வன்.. அழுகை காட்டி அகிலம் உண்டவன்.. தொழுகை செய்ய யசோதைக்கு தொனித்த வரமெதுவோ ?  ..  மாந்தர் வந்தனம் செய்ய வந்தனர் அந்த நந்நதனன் வீட்டிற்கு.. 
தேவர் பசுக்களாகினரோ? அல்லது பசுக்கள் தேவராகினவோ? யாரறிவார் இந்த நாரணனின் நாடகத்தை..
நித்தம் நித்தம் லீலை நித்தம்
சித்தம் மொத்தம் இன்பச் சத்தம்
கோபுரத் தீவில் கோலாகலம்..
கோசலத் தீவில் அல்லோகலம்..
உருண்டு உருண்டு புவியும் உருண்டு உதித்தது அந்நாள்.. கோசலத்து மக்களின் பொன்னாள் ...  அடித்தான் கண்ணன் அழிந்தான் கம்சன்.. மாமனை வென்றான் கொன்றான் மருமகன்.. இந்த மறமகன்..
கோசலமும் அந்த கோபுரமும் ஒன்றானது.. அது துவாபரத்தில் இரண்டாயினும் துவாரகை என்றானது..
மாயையின் தேவி சுபத்தரை மாயாபுரியின் தலைவியானாள்..  மாயவன் கண்ணன் துவாரகையின் மன்னன்...

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم