கொற்றவை - 1

மதகாசம் என்ற பெருநகரம் அது. உண்மையில் ஒரு தேசத்தின் வர்த்தமான  திட்ட செயல் சாத்திர மெல்லாம் அந்நகரின் கிளைக்கைகள் ..

நகரத்தின் 20 25 என்ற அடுக்குகளான வீடுகளின் இடையே 100 அடி அகலத்து சாலைகள் இடையறாது கீச்சுகளும் உருமல்களும் நிரம்பி வழிந்திட . மணி 11ஐ தொட்டது . கொாட்டக் கொட்ட முழித்து அப்பார்ட்மெண்ட் கேட்டை காவல் காத்த முத்துச்சாமி பணிமாற்றம் செய்ய வேண்டிய காலம்..அந்த 50 வயதுக்காரர் இணைந்த போதிலிருந்து தினமும் உணவுதர மகன் வந்து போவான். அவனைத் தவிர இத்தனை ஆண்டுகளில் அவர் தன் இரவு வேலையில் இன்னொருவரை சந்தித்ததே இல்லை.. 

என்றாலும் இவர் இரவுகளில் பலமுறை இந்த அப்பார்ட்மண்டின் 27ம் நம்பர் வீடுமட்டும் இவருக்கு மர்மமாகவும் அச்சமும் பீதியும் தருவதாக இருக்கிறது.. அதன் காரணம் இந்த வீட்டை பற்றி அப்பார்ட்மெண்டில் நிலவும் கதைகளும் நடுயிரவில் யாருமே குடிவராத அந்த 27 ம் நம்பர் வீட்டிலிருந்து வரும் அழைப்புகளும் தான். இருந்தாலும் இவர் தன் அனுபவங்களை பயத்தை யாரிடமும் காட்டிக்கொள்ளவோ? அதைப் பற்றி பேசவோ?  இல்லை .. 

ஆனால் இதன் மர்மத்தின் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்துக் கொண்டே இருந்தது. . இன்றைய மாலை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்திருந்தார். தன் மகன் வந்து போனதும் இதனை ஆராய நினைத்தார் . தன் மகனும் வந்து உணவு தந்து போய்விட இவர் வழக்கமான வேலைகளை முடித்து அந்த அழைப்புக்காக காத்திருந்தார். ஒரு மணிநேரம் மிக மிக மிக தாமதமாக சென்றது . அந்த அழைப்பும் வந்தது. எப்போதும் போல அல்லாமல் அந்த அழைப்புக்கு அவர் உடல் நடுங்கியது குரல் வெளிவர மறுத்தது.. மீறி ஒரு தைரியத்தை வரவைத்துக்கொண்டு பேசினார்.. 

ஹலோ என்றது எப்போதும் போல் உதவி கேட்காமல் .. இன்று உன் உயிர் போகப் போகிறது என்றது அந்த பக்கத்து கரகரப்புக் குரல். இவர் ரத்தம் உறைய நின்றாலும் வாய் தானாய் யார்நீ?  என்று கேட்டது... 

உனக்கு தெரியாத ஆள் மேலே வா உன்னை கொன்றுவிடுகிறேன்.என்றது.. அவரோ அதற்குமுன் உன்னை பற்றி சொல்வாயா? என்க. சாகும் உனக்கு என் கதை எதற்கு? என்றது.. உன்னை பற்றி புரியாமல் தினம் தினம் சாகிறேனே அதற்கு.. பலத்த சிரிப்போடு அந்த போன் கட் செய்யபட்டது... 

இவரும் தன் அறையில் மயங்கி விழுந்து கிடந்தார்.. அந்த இரவு வானில் ரத்தமேகங்கள் மிதந்தன... மறுநாள் காலை முத்துச்சாமி தன் வீட்டிற்கு திரும்பும் போது எல்லைக் காளியின் கோயிலில் வேண்டி தாயத்து வாங்கி கட்டிக்கொண்டார்.. 

இந்த நிகழ்விற்கு இரண்டு வருடங்களுக்கு முன்தான் இதே வீட்டில் இருந்த மந்த்ரா என்னும் பெண்ணை வன்புணர்வு செய்து ரகசியமாக அடைத்து  வைத்திருந்தார்.. அந்த பெண் எப்படியோ தப்பிவிட்டாள் அதன்பின் வேறொரு பெண்ணை அடைத்து வைத்திருக்கிறார். தான் தான் இந்த இரவு காவல் ஆள் என்பது தெரியாமல் அந்த பெண்ணும் தினமும் உதவி கேட்டதும் ஒருநாள் அவளை தாக்கி கொன்றுவிட அதன்பின்னான நாளிலிருந்து தான் இத்தனை சிக்கல்களும்.. 

ஆனால் அப்பார்ட்மெண்டை பொருத்தவரை அந்த 27 ம் நம்பர் வீட்டின் கதையே வேறு.. 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم