No title

கட்டிடத்தின் தூளுள்- செத்து
விட்டப் பிள்ளை
கண்டவுடன் நெஞ்சம் - உள்ளே
சிந்துதடி ரத்தம்.

வெட்டிவிட்டு போனால் - என்
வாழ்க்கை நலமாகும்
விட்டுவிட்டு போனால் - என்
உள்ளம் பலியாகும்

தட்டிகேட்கவே காவல் இல்லையே - எங்கு
வரும் நியாயம்
பட்டியடைத்து கொன்று திரியும்- பூமி
எங்கும் கோரம்

நலம் புரிவார் - இல்லையே
நல்ல புகழிது இல்லையே

பலிக் கணக்கில் - இல்லையே
பறிக் கொடுத்தோம் பிள்ளையை

இனி எதிர்காலத்திலே - நமக்கோர்
நல்வாழ் வில்லையே கிளியே

வையம் திருவாய் - மொழிந்தால்
கொஞ்சம் திருப்பம் விளையும்

அது திறக்கா - திருந்தால்
இனி இறப்பே நிலையும்

புவினர்க்கோர் கடமை - அதை
கடத்தல் கடுமை

அமைதினையே கேட்டோம் - அட
அதற்கேன் பொறுமை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post