எனக்கும் எனக்கும் எனக்குள் வாதம்..
எனக்குள் ஒருவன் எனையே விரும்புகிறான்
யாவுமுடை நீயெனக்கு யாதுமுளன் நானுனக்கு
மேவுமிறை நீயெனக்கு வேதப்பொருள் நானுனக்கு
தீவுதனில் தனித்துணைநீ தீயதொரு பழக்கமும்நீ
தாவுமந்தி போன்றவன்நீ தீயதுன்பம்நீ..
காதலுளம் நீயெனக்கு காவலனே நானுனக்கு
மோதலிதன் நீயெனக்கு மோகமதன் நானுனக்கு
நாதவுயிர் என்றனைய நல்லவுடல் கொண்டவன்நீ
மீதவுண வானதொரு மெத்தமதி நீ ...
காந்தமலர் நீயெனக்கு கந்தனருள் நானுனக்கு
வேந்தனடா நீயெனக்கு வேண்டும்பொருள் நானுனக்கு
ஈந்தபொருள் சேர்க்குமருள் ஈனவுயிர் தீர்க்கும்விசம்
ஆந்தையென திரிபவனே ஆருயிரும்நீ.. .
Post a Comment