கற்பழிக்கப்படுகிறேன்

கற்பழிக்கப் படுகிறேன்
ஒவ்வொரு முறையும் வன்புணர்வுக்கு ஆளாகிறேன்.
விபச்சாரத்ததை விட  கற்பழிப்பு சுடுகிறது..

அம்மணம் காட்டா அகந்தை ஆடைகள்
இம்மனத் தேடலில் நிர்வாணம் தந்தன.
வெம்மையின் சுடரொன்று அங்கங்கள் சுட்டின..

தேகநூலின் மேல்பரந்த பட்டங்களை.
கேள்விக் காமுகர்கள்  மேய்ந்திட
மீண்டும் மீண்டும் கேள்விகளால் கற்பழிக்கப்படுகிறேன்.

ஞானத்தின் ஆண்குறிகள்
அறியாமை திரைக்கிழிக்க
அறிதலின் குருதி பெறுகியது..

புணர்ந்த ஞானத்தில் புலர்ந்த விந்தெல்லாம்
கிழிந்த யோனிக்குள் சிந்தனை கருவாகின
சுமந்த மூளைக்குள் வளரும் முன்னே
கவிந்து கவிதையாய் கருவறுக்க படுகின்றன..

மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஞானக்குறிகள்
தீண்டித் தூண்டி புணர்ந்தாலும்
கற்பொன்றே அழிந்தது கவிதைக் கழிவுகள் வழிந்தது..

மன்னித்து விடுங்கள் மனித சமூகம்
ஒருமுறைக்குத் தான் கற்பழிக்க அனுமதிக்கிறது.

இந்த புத்தகச் சமூகத்தால்
பலமுறை கற்பழிக்க படுகிறேன்.

ஆம் இங்கே கற்பித்து
கற்பழிக்கப் படுகிறது.

ஞானக்குறிகளே..
  மூளைக்கருக்குள்
சிசுவாகும் வீரியமுள்ள
விந்துக்களை சிந்துங்கள்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post