ஆடுகின்றான் ஆடுகின்றான்

ஆடுகின்றான் ஆடுகின்றான் ஆட்டிவைத்தே ஆடுகின்றான்
ஆடுமிந்த அண்டமெல்லாம் ஆடிடவே ஆடுகின்றான்.
ஆடுகின்றான் ஆடுகின்றான் அடியவர்க்காய் ஆடுகின்றான்
ஆடுகின்ற நேரமெமை ஆட்கொளவே ஆடுகிறான் 1

ஆடுகின்றான் ஆடுகின்றான் ஆட்சிசெய்தே ஆடுகின்றான்
நாடுமிந்த நேசருக்கே நாளெல்லாம் ஆடுகின்றான்
ஆடுகின்றான் ஆடுகின்றான் அம்மையப்பன் ஆடுகின்றான்
ஆடுகின்ற காட்சியிலே ஆளுகின்றான் ஆளுகின்றான்... 2

ஆடுகின்றான் ஆடுகின்றான் ஆடுபவன் ஆடுகின்றான்
ஆடுகின்ற ஆட்டத்தை ஆடிக்கொண்டே ஓட்டுகிறான்
ஆடுகின்றான் ஆடுகின்றான் ஆசையாய் ஆடுகின்றான்
ஆடுவோர்கள் ஆடிடவே ஆதியோனும் ஆடுகின்றான் .. 3

ஆடுகின்றான் ஆடுகின்றான் ஆதியோனே ஆடுகின்றான்
தேடுமிந்த கூட்டத்துள்ளே ஆடுகின்றான் ஆடுகின்றான்
ஆடுகின்றான் ஆடுகின்றான் அங்கமெல்லாம் ஆடுமாறு
ஆடுகின்றான் ஆடுகின்றான் அம்பலத்தோன் ஆடுகின்றான். 4

ஆடுகின்றான் ஆடுகின்றான் ஆசறுப்போன் ஆடுகின்றான்
காடுடைய கங்கையோனே காலவட்டில் ஆடுகின்றான்
ஆடுகின்றான் ஆடுகின்றான் அப்பனேதான் ஆடுகின்றான்
ஆடுகின்றான் ஆடுகின்றான் அந்தமாயன் ஆடுகின்றான்.. 5

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post